குறட்டை விடும் பழக்கத்தால் உயிருக்கே ஆபத்தாம்! எச்சரிக்கை செய்தி!

0

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு தூக்கத்தில் குறட்டை விடும் பழக்கம் உள்ளது, ஆனால் அதை நாம் ஒரு பொருட்டாகவே மதிப்பது இல்லை.

ஆனால் குறட்டை விடும் பழக்கம் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர் நிபுணர்கள்.

பொதுவாகவே மக்கள், நீரிழிவு நோய், ரத்த கொதிப்பு மற்றும் வழக்கமான பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ள முனைகின்றனரே தவிர குறட்டை பற்றி மருத்துவ பரிசோதனை செய்ய அலட்சியம் காட்டுகிறார்கள்.

குறட்டை விடும் நபருக்கு அப்பிரச்சனையை சரி செய்யாவிட்டால் அது மரணத்தில் முடியும், குறட்டை விடுபவர்கள் ஆரோக்கியமாக இருந்தாலும் அவர்கள் விடும் குறட்டை அவர்களுக்கு நீரிழிவு நோய் ரத்த கொதிப்பு மற்றும் புற்றுநோய் ஆகியவை தாக்கும் அபாயம் அதிகம் .

நாம் தூங்கும் போது நமது மூச்சுக்குழாய் பாதி அல்லது முழுதாக அடைத்துக் கொள்ளும் போது இயல்பாக குறட்டை ஏற்படுகிறது.

இந்த அடைப்பினால் நமது உடலுக்கு தேவையான பிராணவாயு குறைவதோடு கரியமிலவாயுவின் அளவு உடலில் அதிகரிக்கின்றது.

இதனால் குறட்டை விடும் பழக்கம் உடையவர்களுக்கு தூக்கத்திலே உயிர்பிரியும் அபாயம் அதிகம் என்று காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

குறட்டையை தவிர்க்க தொடர் மூச்சுக் காற்று கொடுக்கும் இயந்திரம் பயன்படுத்தக்கூடிய வசதியும் தற்போதைய மருத்துவத்தில் உள்ளது.

இந்த குறைபாடு ஆண் மற்றும் பெண் ஆகிய வித்தியாசம் இல்லாமல், பாதிப்பை ஏற்படுத்துவதால் அவர்கள் இனியும் குறைட்டையை அலட்சியப்படுத்தாமல் மருத்துவர்களின் ஆலோசனையை பெறுவது அவசியம் ஆகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇனிமேல் வியர்வை நாற்றத்திற்கு குட்-பை சொல்லிவிடலாம்!
Next articleகோடை காலம் தொடங்கிருச்சே! கடந்து செல்ல சில டிப்ஸ்!