Home Patti Vaithiyam இனிமேல் வியர்வை நாற்றத்திற்கு குட்-பை சொல்லிவிடலாம்!

இனிமேல் வியர்வை நாற்றத்திற்கு குட்-பை சொல்லிவிடலாம்!

0
518

அதிகமாக வியர்ப்பதுடன் சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களுடன் வியர்வை சேரும் போது, அது கடுமையான துர்நாற்றத்தை உண்டாக்கும்.

உடலில் இருந்து வீசும் இத்தகைய துர்நாற்றத்தைப் போக்க ஒருசில இயற்கை வழிகள் உள்ளது. அதை பின்பற்றினாலே உடல் துர்நாற்றத்திற்கு குட்-பை சொல்லிவிடலாம்.

வியர்வை துர்நாற்றாத்தை போக்குவது எப்படி?
1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து, அதை அக்குளில் தடவி சில நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதை தினமும் சில வாரங்கள் தொடர்ந்தாலே போதும்.

ஒரு பஞ்சுருண்டையை எடுத்து ஆல்கஹாலில் நனைத்து, அதை அக்குளில் தடவி சில நிமிடங்கள் கழித்து நீரில் கழுவ வேண்டும்.

ஆப்பிள் சீடர் வினிகரை பஞ்சுருண்டையில் நனைத்து, அதை அக்குளில் தடவி 2-3 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்தால் பல கிடைக்கும்.

சிறிது ரோஸ் வாட்டரை அக்குளில் தடவலாம் அல்லது குளிக்கும் நீரில் சிறிது ரோஸ் வாட்டரைக் கலந்து குளித்தால் துர்நாற்றாம் நீங்கும்.

தக்காளி கூழை நேரடியாக அக்குளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி சில வாரங்கள் தினமும் பின்பற்றி வர வேண்டும்.

தினமும் குளிகும் முன், ஒரு துண்டு எலுமிச்சையை அக்குளில் தேய்த்து அது நன்கு காய்ந்த பின்பு குளிக்க வேண்டும். இப்படி தினமும் செய்தால் உடல் துர்நாற்றம் விரைவில் மறையும்.

சந்தன பவுடரை எடுத்து அதில் நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி நன்கு காய வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வர வியர்வை நாற்றம் மற்றும் அக்குளில் உள்ள கருமை நீங்கும்.

Previous articleஇதை மட்டும் செய்திடுங்கள்! தலைவலி பறந்தோடும்!
Next articleகுறட்டை விடும் பழக்கத்தால் உயிருக்கே ஆபத்தாம்! எச்சரிக்கை செய்தி!