கண்களை சுற்றியுள்ள கருவளையங்களை போக்கும் எளிய வழிகள்!

0

முகத்தின் அழகைக் கெடுப்பதில் முக்கியமான ஒன்று தான் கருவளையம். அத்தகைய கருவளையம் சிலருக்கு அதிகம் இருக்கிறது. ஆனால் அது எதற்கு வருகிறது என்று பலரும் தெரியாமல் இருக்கின்றனர்.

கருவளையங்கள் உண்மையில் வருவதற்கு காரணம் நம்முடைய பழக்கவழக்கங்களே. அந்த ஒரு சில பழக்கவழக்கங்களால் நம் கண்களைச் சுற்றி கருப்பாக தோன்றும். அதுமட்டுமல்லாமல் ஒரு சில நோய்கள் இருந்தாலும் கருவளையமானது வரும்.

சென்சிடிவ் சருமம் இருப்பவர்கள், அந்த சருமத்திற்கு அதிகமாக அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அழகு சாதனப் பொருட்களில் கெமிக்கல்கள் அதிகமாக இருப்பதால், அவை சருமத்திற்கு அலர்ஜியை ஏற்படுத்திவிடும்.

அளவுக்கு அதிகமான வேலை இருப்பதால், உடலிலும், மனதிலும் அழுத்தமானது அதிகமாக ஏற்படும். இந்த செயல் கண்களைச் சுற்றி ஒரு வளையம் போன்றவற்றை ஏற்படுத்திவிடும். மேலும் சரியான தூக்கம் இல்லாவிட்டாலும், கண்களில் கருவளையமானது வரும்.

குடிக்கும் நீரின் அளவு குறைவாக இருந்தாலும் கருவளையமானது வரும். அதிலும் குறைவான அளவு நீரானது உடலில் இருந்தால், சரியான இரத்த ஓட்டமானது இல்லாமல், கண்களுக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்து, கண்களில் கருவளையத்தை உண்டாக்கிவிடும்.

கருவளையத்தை போக்குவதற்கான இயற்கை வழிகள்:

* உருளைக்கிழங்கை அரைத்து அதிலிருந்து வரும் சாற்றை காட்டனில் நனைத்து அதனை கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் எளிதில் போய்விடும்.

* எலுமிச்சை சாறு தக்காளி சாற்றை கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவி வந்தால், கருவளையங்கள் குறைந்துவிடும்.

* பாதாமை சிறிது பாலுடன் சேர்த்து பேஸ்ட் போல் செய்து கருவளையம் இருக்கும் இடத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால் கண்களைச் சுர்றி இருக்கும் கருமையான வளையம் போய்விடும்.

* அன்னாசிப் பழச்சாற்றுடன், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, தினமும் தடவி வந்தால், கருவளையங்கள் நீங்கி முகம் நன்கு பொலிவோடு காணப்படும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமூட்டுவலிக்கு நிவாரணம் தரும் கண்டந்திப்பிலி ரசம்!
Next articleஉடம்பினை ஒல்லியாக்கும் கொள்ளு!