உடம்பினை ஒல்லியாக்கும் கொள்ளு!

0

கொள்ளுக்கு வெப்பத்தினை ஏற்படுத்தும் தன்மை உண்டு. அதாவது, உடலில் நடக்கும் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டி செயல்படுத்தும் ஆற்றலுடையது.

இதனால், இந்த குளிர்காலத்துக்கு ஏற்ற சிறந்த உணவு என்று கொள்ளுவை சொல்லலாம்.

கொள்ளு ரசம் மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் அவதிப்படும் ஆஸ்துமா மற்றும் கபம் சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கு அதிக நிவாரணம் அளிக்கும்.

உடல் பருமனால் மூட்டுகளில் தேய்மானம் மற்றும் இதயத்தின் ரத்த ஓட்ட பாதிப்புகள் போன்றவை கொள்ளுவை சேர்த்துக் கொள்வதால் தவிர்க்க முடியும்.

கொள்ளு ரசத்தை சாதத்துக்கும் பயன்படுத்தலாம் அல்லது மிதமான சூட்டில் சூப் போலவும் குடிக்கலாம். ஆஸ்துமா நோயாளிகளுக்கு கொள்ளு ரசம் மிகவும் நல்லது.

கணையத்தில் சுரக்கும் இன்சுலின் ஹார்மோனின் செயல்திறனை கொள்ளு அதிகரிப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கும் கொள்ளு ரசம் சிறந்த உணவு.

குடலில் இருக்கும் செரிமான என்சைம்களான Glucosidase மற்றும் Amylase-ன் செயல்பாட்டைக் குறைப்பதன் மூலம் கார்போஹைட்ரேட் கிரகிக்கும் சக்தியைக் கொள்ளு குறைப்பதுதான் இதன் ரகசியம்.

அதேபோல, சாபோனின்கள்(Saponins) என்ற வேதிப்பொருட்கள் கொள்ளுவில் உள்ளதால் கொழுப்பின் அளவு உடலில் குறைக்கிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகண்களை சுற்றியுள்ள கருவளையங்களை போக்கும் எளிய வழிகள்!
Next articleசர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தினை சாப்பிடலாமா?