கணவரின் போனை உளவு பார்த்தால் இனி அவ்வளவு தான்! சவுதி அரேபியாவில் வந்தது அதிரடி சட்டம்!

0

போனை உளவு பார்த்தால் ஒரு ஆண்டிற்கு மேல் சிறை தண்டனை வழங்கப்படும் என்ற புதிய சட்டத்தை சவுதி அரசு இயற்றியுள்ளது.

சவுதி அரேபியாவில் மனைவிகள் பெரும்பாலான விவாகரத்து வழக்குகளில் தனது கணவரின் கைப்பேசி உரையாடல்கலை தான் ஆதரமாக நீதிமன்றத்தில் சமர்பிக்கின்றனர்.

இதன் அடிப்படையிலே நீதிமன்றத்திலும் விவாகரத்து வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் சவுதி அரசு கணவரின் போனை உளவு பார்த்தால் அபராதத்துடன் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்ற புதிய சட்டத்தை இயற்றியுள்ளது.

அந்த சட்டத்தில், போனை உளவு பார்ப்பது பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி அவர்களுக்கு 5 லட்சம் சவுதி ரியால் அபராதம் அல்லது 1 ஆண்டிற்கு மேல் சிறை தண்டனை வழங்கப்படும்.

சில சமயங்களில் இரண்டும் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிநபர், சமுதாயத்தின் ஒழுக்கம் மற்றும் தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த சட்டம் இயற்றப்பட்டதாகவும், சமீபகாலங்களில் சமூகவலைத்தளங்களில் தனிநபரின் தகவல்கள் உளவு பார்க்கப்படுவதால் மிரட்டல், மோசடி மற்றும் அவதூறு வழக்குகள் அதிகமாகி வருவதாகவும் சவுதி அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதிருடப்பட்ட கார் எங்கிருந்தது தெரியுமா? இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா வீட்டில் நடந்த கொடுமை!
Next articleகுடிக்கும் சூப்பில் எலியின் குடல்! அதிர்ச்சியடைந்த பெண்!