திருடப்பட்ட கார் எங்கிருந்தது தெரியுமா? இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா வீட்டில் நடந்த கொடுமை!

0

பிரபல இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா வீட்டில் சமீபத்தில் விலையுர்ந்த கார் திருடு போனதாகவும், அதை அவர் வீட்டின் டிரைவரே திருடுச் சென்றுவிட்டதாகவும் செய்திகள் தீயாய் பரவின.

இதையடுத்து பொலிசார் நடத்திய தீவிர விசாரணையில் அந்த கார் யுவன்சங்கர் ராஜாவின் வீட்டிலே இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

இது குறித்து பொலிசார் கூறுகையில், நேற்று மாலை யுவன்சங்கர் ராஜாவின் ஓட்டுநர் நவாஸ் ஆடி ஏ6 காரை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார். இரவு ஆன போதும் அவர் திரும்பவில்லை.

போன் வெறு சுவிட்ச் ஆப்பில் இருந்துள்ளது. இதனால் யுவன்சங்கர் ராஜா குடும்பத்தினர் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து பொலிசார் டிரைவரின் போன் கால் டவரை சோதித்துள்ளனர். அப்போது டவர் யுவன் சங்கர் ராஜா ஏரியாவே காட்டியுள்ளது.

இதனால் குழம்பி போன பொலிசார் யுவன்சங்கர் ராஜா வீட்டை சோதித்த போது கார் தரைதளத்தில் உள்ள அவரது கார் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த பொலிசார் காணமல் போன கார் இங்கே இருக்கே என்று பார்த்த போது காருக்க அந்தப் பக்கம் ஓட்டுநர் நவாஸ் தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.

பொலிசார் அவரிடம் விசாரித்த போது எனக்கு உடலில் சில பிரச்சினைகள் உள்ளன. தூங்கினால் அடித்துப் போட்டது போல் தூங்குவேன்.

அதற்காக சிகிச்சை எடுத்து வருகிறேன். இரவு படுத்தால் மதியம் 12 மணிக்குதான் எழுந்திருப்பேன் என்று கூறியுள்ளார்.

காரை ஏன் கீழ் தளத்தில் நிறுத்தினாய் என்று கேட்டபோது, மேலே காரை விட இடமில்லை. அதனால் தரை தளத்தில் விட்டு தூங்கிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

போனில் சார்ஜ் இல்லாத காரணத்தினால் போனும் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

யுவன்சங்கர் ராஜா குடும்பத்தாரிடம் இது குறித்து கேட்ட போது, காரை எப்போதும் மேல் தளத்திலே நிறுத்தப்படும் என்பதால் கீழ் தளத்தில் பார்க்கவில்லை என்று கூறியுள்ளனர்.

இதனால் வெறுத்து போன பொலிசார் நல்ல டிரைவர், நல்ல ஓட்டுநர் இதில் கார் திருட்டுன்னு கம்ப்ளைண்ட் வேற என்று தலையில் அடித்துக் கொண்டே சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article30 பெண்களுடன் பிரபல தொழிலதிபர்…அசர வைக்கும் சொகுசு வாழ்க்கை: ஆதரவு தெரிவிக்கும் மனைவி!
Next articleகணவரின் போனை உளவு பார்த்தால் இனி அவ்வளவு தான்! சவுதி அரேபியாவில் வந்தது அதிரடி சட்டம்!