கடுகுரோகிணியின் மருத்துவ பயன்கள்!

0

சுரத்திற்கு பயன்படும் கடுகுரோகிணி இமயமலையில் வளர்கிறது.
மேல்நாட்டு ஆல்ப்ஸ் மலையில் கடுகுரோகிணியை ஒத்த குணமுள்ள ஜென்சன் மூலிகை என்று கூறுவர். இதன் மறுபெயர் மஞ்சள் ஜென்சன் ஆகும்.
இதிலுள்ள மருந்து உப்புகள் அதிகம் நவீன மருத்துவ துறையில் பயன்படுகிறது.
இந்த மூலிகையின் ஒரு பிரிவிலிருந்துதான் நவீன மருத்துவத்துறையில் பயன்படும் வெளி உபயோக மருந்தான ஜென்சன் வயலெட் செய்கிறார்கள்.
இச்செடியானது கிழங்கு போன்ற கெட்டியான வேருடையது.
இமயமலைப்பகுதியில் ஏறத்தாழ 2700 முதல் 4500 மீட்டர் உயரத்தில் இயற்கையாகவும், பயரிட்டும் இவை வளர்கின்றன.
குஜராத், மத்தியப்பிரதேசம் ஆகிய இடங்களிலும் இவை கிடைக்கின்றன.
இலைகள் சிறியதாக நீண்டு பட்டைக்கத்தி போன்ற தோற்றமளிக்கும்.
கடுகுரோகிணியின் பூவானது வெளுத்த மற்றும் இளம் நீல நிறங்களில் உள்ளன.
பழங்கள் முட்டை வடிவில் கேப்ஸ்யூல் போல் காட்சியளிக்கும். இச்செடியின் வேர்பகுதி மருத்துவக் குணம் கொண்டது.
குறிப்பு:

கடுகுரோகிணியின் கசப்பு சுவை குறைய மிளகு, பெருங்காயம் மற்றும் உப்பு ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
மருந்து 1:

8 கிராம் சூரணத்தை அரை லிட்டர் நீர் விட்டு அரைக்கால் லிட்டர் கஷாயமாக்கி சர்க்கரை கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.
மருந்து 2:

கடுகுரோகிணி, அதிமதூரம், முந்திரி ப‌ழம் ,வேப்பம் பட்டை 18 கிராம் ஆகியவற்றை
எடுத்து ஒரு லிட்டர் நீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
கால் லிட்டர் கஷாயமாக தயார் செய்து காலை, மாலை 10 மில்லி லிட்டர் அளவு பருகி வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். ‌
மருந்து 3:

கடுகுரோகிணி, மிளகு, நாரத்தன் காய், சந்தனக்கட்டை, சீரகம் ஆகியவற்றை 4 கிராம் எடுத்து 300 மில்லி லிட்டர் கொதிக்கும் நீரில் போட்டு மூடி வைக்க வேண்டும்.
பின்பு இதனை வடிகட்டி 30 மில்லி லிட்டர் முதல் 60 மில்லி லிட்டர் வரை தினமும் இரண்டு முதல் நான்கு வேளை சாப்பிட வேண்டும்.
அவ்வாறு சாப்பிட்டால் சுரம், வலிப்பு, வயிற்று வலி மற்றும் மஞ்சள் காமாலை ஆகியவை குணமாகும்.
மருத்துவ குணங்கள்:

கடுகு ரோகிணியானது கசப்பு தன்மை வாய்ந்தது.
இவை அஜீரணம் போக்கும். மலச்சிக்கலைக் குணப்படுத்தும். ஆனால் இவை அதிக அளவில் பேதி உண்டாக்கும்.
காய்ச்சலைக் குணமாக்கும் பண்பை பெற்றிருப்பதால் மலேரியாவிற்கும், பித்த நீரை வெளிப்படுத்துவதால் மஞ்சள் காமாலைக்கும் நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது.
சித்த ஆயுர்வேத முறைகளில் சுரம், பிரமேகம், காசம், வயிற்று கிருமி, தோல் சம்பந்தமான நோய்கள் ஆகிய நோய்களை குணமாக்க வல்லது.
யுனானி மருத்துவத்தில் சிறுநீர்க் கற்களைப் போக்கவும், வாந்தி செய்யவிக்கவும், பக்கவாதத்திற்கும் பயன்படுகிறது.
கண்பார்வையை அதிகமாக்க கண் மருந்துகளில் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
உடல் பலவீனம், ஜீரண குறைவு, பசியின்மை ஆகியவற்றை நீக்கும்.
ஈரல் சம்பந்தமான நோய், நரம்பு சம்பந்தமான நோய் மற்றும் மஞ்சள் காமாலை நோய்க்கு நல்லது.
உள் உறுப்பை சுத்தம் செய்வதுடன் கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.
இத்தகைய மருத்துவகுணம் கொண்ட கடுகுரோகிணியின் பயனை உணர்ந்து அதனை நம் அன்றாட உணவுடன் கலந்து உண்போம்; நோயின்றி வாழ்வோம்; வாழ்வில் வளம் பெறுவோம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅமைச்சர் விஜயகலா பதவியை இழக்கும்….?
Next articleஜெயலலிதா வழக்கில் சிக்கியது சசிகலாவின் புதிய வீடியோ!