Home thatstamil one india tamil oneindia tamil ulaga seithigal ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்த தாய்! மருத்துவர்கள் கூறிய அதிசய தகவல்!

ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்த தாய்! மருத்துவர்கள் கூறிய அதிசய தகவல்!

0
703

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 4 ஆண் குழந்தை, 2 பெண் குழந்தைளை பெற்றெடுத்துள்ளார். உலகின் சுமார் 470 கோடி பேரில் ஒருவருக்கு தான் இந்த அதிசயம் நிகழ வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரைச் சேர்ந்தவர் தெல்மா சியாகா என்ற நிறைமாத கர்ப்பிணி பெண். இவர் டெக்சாஸில் உள்ள மகளிர் மருத்துவமனை ஒன்றில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சியாகாவுக்கு அமெரிக்க நேரப்படி, வெள்ளிக்கிழமை காலை ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்தன. 9 மணி நேர இடைவெளியில் பிறந்த இந்த குழந்தைகள், 500 கிராம் முதல் 1000 கிராம் வரை எடையுடன் உள்ளன.

காலை 4. 50 மணிக்கு 2 ஜோடி ஆண் இரட்டையர்களும், அதையடுத்து 4. 59 மணிக்கு ஒரு ஜோடி பெண் இரட்டையர்களும் பிறந்தனர். குழந்தைகள் நலமாக இருந்தாலும், தொடர் சிகிச்சைக்காக மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். பெண் இரட்டையர்களுக்கு ஜீனா மற்றும் ஜுரியல் என்று அவர்களது தாயான தெல்மா சியாகா பெயரிட்டுள்ளார்.

Previous articleஇந்த 5 இடத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம் கொட்டுமாம்!
Next articleஇன்று உங்களது தகுதியை வளர்த்துக்கொள்ள எவ்வாறு செயற்படப்போகிறீர்கள்!