எலும்பை உருக்கும் காச நோயை குணமாக்க ஆயுர்வேதம் கூறும் மருத்துவ உணவு முறை!

0

காச நோய் ஒரு எலும்புருக்கி நோய். மைகோபேக்டீரியம் டியூபர் குலோசிஸ் என்ற பேக்டீரியாவால் ஏற்படுகிறது.
அது முதலில் அலர்ஜி காரணமாக நுரையீரலை பாதிக்கிறது. அதனை கண்டு கொள்ளாமல் சிகிச்சை செய்யாமலிருந்தால் அது உடலின் மற்ற பாகங்களிலும் பரவி, உயிருக்கு ஆபத்தை தரும்.

ஆரம்ப காலக் கட்டங்களிலேயே மருத்துவரை ஆலோசிப்பது முக்கியம். அதோடு சில உணவுகள் எலும்பை உருக்கும் இந்த காச நோயை குணமாக்க வல்லது என ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகிறார்கள் என்பது அறிவீர்களா? என்னென்ன உணவுகள் என காண்போம்.

பூண்டு :
பூண்டின் மகத்துவத்தை கண்டு மருத்து உலகம் வியக்கிறது என்றால் மிகையில்லை. எந்த நோயையும் விரட்டும் சக்து படைத்தது.
அதிலுள்ள சல்ஃபர் காச நோயை உண்டாக்கும் பேக்டீரியாக்களை அழிக்கிறது. அதோடு அதிலுள்ள அலிசின் மற்றும் அஜோயீன் என்ற இரு வேதிப் பொருட்கள் காச நோய் பேக்டீரியாக்களை பெருக விடாமல், அதன் பெருக்கத்தை தடுக்கிறது.

முருங்கை இலை :
முருங்கை இலை அதிக இரும்பு, கால்சியம் மற்றும் மற்ற மினரல்களை கொண்டது. அதோடு விட்டமின் சத்துக்களையும் பெற்றுள்லது.

ஆயுர்வேதத்தில் முருங்கை இலை. காச நோய்க்கு மருந்தாக அளிக்கப்படுகிறது. இது நுரையீரல் சம்பந்தப்பட்ட அலர்ஜியை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கிறது. தினமும் சாப்பிட்டாம் முன்னேற்றம் காணலாம்.

மிளகு :
மிளகு சக்தி வாய்ந்தது. தினமும் 2 மிளகு மெல்வதால் பல நோய்களை அடியோடு விரட்டலாம். அதில் ஒன்றுதான் காச நோய். இது நுரையீரலில் உண்டாகும் வீக்கம், கபம் போன்ரவற்றை கரைக்கும் ஆற்றல் கொண்டது. கிருமிகளை, நச்சுக்களை வெளியேற்றும் பணியை செய்கிறது.

சிறிது மிளகை எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து சில மணி நேர இடைவெளியில் இந்த மிளகுப் பொடியை உண்டால் காச நோயால் வரும் பாதிப்புகள் விலகும்

க்ரீன் டீ :
க்ரீன் டீயின் குணங்கள் எல்லாருக்கும் தெரிந்ததுதான். அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் நச்சுக்களை, ஃப்ரீ ரேடிகல்ஸை அகற்றும்.
அதோடு காச நோயையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது என உங்களுக்கு தெரியுமா? இதிலுள்ள பாலிஃபீனால் காச நோயை உருவாக்கும் பெக்டீரியாக்களை அழிக்கிறது.

புதினா :
புதினாவும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்தவை. இது நுரையீரலில் உருவாகும் கபத்தை கரைத்துவிடும்.
கிருமிகளின் எதிரியான புதினா காச நோய் உண்டாக்கும் பேக்டீரியாக்களை பெருக விடாமல் அழிக்கிறது. புதினா சாறை குடிப்பதால் பலன் தெரியும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகாலையில் பல் துலக்குவதற்கு பதிலாக இத செஞ்சா போதுமாம்!
Next articleபாலில் தேன் கலந்து தினம் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் மாற்றம்!