உயர் ரத்த அழுத்தமா? கவலை வேண்டாம்! மொச்சை கொட்டைகளை இப்படி சாப்பிடுங்க!

0

உயர் ரத்த அழுத்தம் வந்து விட்டதே என்று கவலைப்படாதீர்கள். தினமும் ஒரு சில மொச்சைக் கொட்டைகளை சாப்பிட்டால் போதும் ரத்த அழுத்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் உள்ள இஸ்ரேல் டியோகோன்ஸ் மருத்துவ மையத்தில் நடந்த ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உயர் ரத்த அழுத்த பிரச்னை அதிகமாக உள்ளது.

குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகிறது. சிலருக்கு, “ஹைப்பர் டென்ஷன்’ எனப்படும் உயர் ரத்த அழுத்தம் உள்ளது. இது மிக ஆபத்தானது.

இப்படிப்பட்டவர்களில் 48 பேரை தேர்வு செய்து, அவர் களின் உணவு பழக்க வழக் கங்கள் மாற்றப்பட்டன. தினமும் அவர்களுக்கு மொச்சைக் கொட்டை வழங்கப்பட்டது.

ஆச்சர்யப்படத்தக்க வகையில் அவர்களில் 40 பேருக்கு ரத்த அழுத்தம் சகஜ நிலைக்கு வந்தது.

வேர்க்கடலை, சிப்ஸ் போன்று சிறிய பாக்கெட்களில் மொச்சை கொட்டையும் விற்கப் படுகிறது.

தினமும் அரை கப் மொச்சை கொட்டையை சாப்பிட்டு வந்தால் போதும் உயர் ரத்த அழுத்தம் குறைந்து விடும் என்று இந்த மருத்துவ மைய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகுழந்தை மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுதா? இதோ சில டிப்ஸ்!
Next articleமின்சாரத் தைலம் எப்படி செய்யலாம். என்றும் அதன் உபயோகம் எப்படி என்பதையும் பார்க்கலாம்!