உணவருந்திய உடனே (அ) உணவருந்தும் முன் தண்ணீர் குடிக்க கூடாது என கூறுவது ஏன் தெரியுமா!

0

நமது வீடுகளில் உணவருந்தும் போது அதிகமாக தண்ணீர் குடித்தால் தாத்தா பாட்டி அதட்டி திட்டுவார்கள். அதே போல சாப்பிடும் முன்னரும், பின்னரும் உடனே தண்ணீர் குடிக்க வேண்டாம் என எச்சரிக்கை செய்வார்கள். இது ஏன், எதற்காக என நாம் பெரிதாக அறிந்ததில்லை.

ஆனால், இன்று அறிவியல் ரீதியாக அறியப்பட்டுள்ளது என்னவெனில், உணவு சாப்பிடும் முன் / பின் உடனேயே தண்ணீர் குடிப்பதால் செரிமானம் பாதிக்கப்பட்டு உடல் ஆரோக்கியத்தை குன்ற செய்யும். இதனால் தான் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல, சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பதால் மேலும், சில உடல்நல சிக்கல் உண்டாகலாம்.

செரிமான கோளாறு!
உணவருந்தும் முன், பின் உடனேயே தண்ணீர் குடிப்பதால் உடலில் கேஸ்ட்ரிக் ஜூஸ்-ன் தன்மை குறைக்கப்படுகிறது. இதனால் செரிமான மண்டலத்தின் வலிமை குறையும்.

மருந்து உட்கொள்வோர்!
உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு மருந்து உட்கொள்வோர் சில மருந்துகளை உணவுக்கு முன்னும், பின்னும் சாப்பிட வேண்டும் என அறிவுரைக்கப்படுவார்கள். அவர்கள் குறைந்த அளவிலான தண்ணீரை எடுத்துக் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும்.

ஆயுர்வேதம் என்ன சொல்கிறது!
ஆயுர்வேத முறையில் உணவு உட்கொண்ட உடனேயே தண்ணீர் உட்கொள்வதால், சீரான செரிமானம் தடைப்பட்டு உடல்பருமன் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

பிறகு எப்போது தான் குடிக்க வேண்டும்!
உணவருந்திய பிறகு 30 நிமிட இடைவேளைக்கு பின் தண்ணீர் குடிக்க வேண்டும் என அறிவுரைக்கப்படுகிறது. உணவு சாப்பிட்ட 1 – 2 மணி நேரத்திற்கு பிறகு நீங்கள் தாகத்திற்கு ஏற்ப எவ்வளவு தண்ணீர் வேண்டுமானாலும் குடிக்கலாம்.

தாகம்!
உணவருந்தும் போது அல்லது உணவருந்திய பிறகு அதிகமாக தாகம் எடுத்தாலோ, விக்கல் எடுத்தாலோ, குறைந்த அளவிலான தண்ணீர் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். உணவருந்தும் போது குளிர்ந்த நீர் குடிப்பதால் செரிமான மண்டலத்தில் என்சைம் செயல்திறன் குறைத்து, உடலில் வேண்டாத நச்சுக்கள் அதிகமாக உருவாகும் அபாயமும் இருக்கின்றது.

குறிப்பு!
உணவருந்தும் போது சோடா பானம், காபி போன்றவற்றை பருக வேண்டாம். இது உடல்நலத்திற்கு நல்லதல்ல.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதற்கும்! இதய நோய்க்கும் என்ன சம்பந்தம்!
Next articleஇரவில் நிம்மதியான மற்றும் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற வேண்டுமா! இத ட்ரை பண்ணி பாருங்க!