இரவில் நிம்மதியான மற்றும் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற வேண்டுமா! இத ட்ரை பண்ணி பாருங்க!

0

இரவில் நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெறுவது என்பது மிகவும் முக்கியம் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். ஆனால் அந்த தூக்கத்தை பலர் இழந்து தவிக்கின்றனர். அதோடு பரிசாக உடல் பருமன், சர்க்கரை நோய், பக்கவாதம், சிறுநீரக நோய்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பல நோய்களையும் பெற்றுள்ளனர்.

இந்த தூக்க பிரச்சனைக்கு நல்ல தீர்வு வழங்கும் விதமாக தமிழ் போல்ட் ஸ்கை சில ஆயுர்வேத நிவாரணங்களைக் கொடுத்துள்ளது. ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த நிவாரணிகள் இரவில் நல்ல தூக்கத்தைப் பெற உதவுவதோடு, உடலில் உள்ள வேறு சில பிரச்சனைகளையும் போக்கும்.

சீமைச்சாமந்தி டீ
சீமைச்சாமந்தி கொண்டு தயாரிக்கப்படும் டீயை இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் குடித்தால், அது உடலை ரிலாக்ஸ் அடையச் செய்து, இரவு நேரத்தில் நல்ல தூக்கத்தைப் பெற உதவும்.

ஏலக்காய் பால்
பச்சை ஏலக்காயை பாலில் சேர்த்து கொதிக்க வைத்து, இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் குடித்தால், 15 நிமிடத்தில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.

பட்டைப் பால்
இந்த பால் மிகவும் சுவையாக இருப்பதோடு, தூக்கமின்மை பிரச்சனைக்கும் நிவாரணம் அளிக்கும். அதற்கு நன்கு காய்ச்சிய பாலில் பட்டைத் தூள் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் குடிக்க வேண்டும்.

தேன் மற்றும் பால்
இரவில் வெதுவெதுப்பான பாலில் தேன் கலந்து, படுக்கும் முன் குடித்து வர, உடல் களைப்பு நீங்கி, இரவில் நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.

புதினா டீ
புதினாவை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, தேன் கலந்து இரவில் படுக்கும் முன் குடித்தால், தசைகள் ரிலாக்ஸாகி, நல்ல தூக்கம் கிடைக்கும்.

கடுகு எண்ணெய்
இரவில் படுக்கும் முன் கடுகு எண்ணெய் கொண்டு பாதங்களை மசாஜ் செய்து வர, உடலில் இரத்த ஓட்டம் மேம்பட்டு, தசைகள் ரிலாக்ஸாகி, நல்ல தூக்கத்தைப் பெறலாம்.

சீரகம்
தூக்கம் வராமல் அவஸ்தைப்படுபவர்கள், சீரகத்தைப் பொடி செய்து, வாழைப்பழத்தை தொட்டு இரவில் படுக்கும் முன் சாப்பிட, ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉணவருந்திய உடனே (அ) உணவருந்தும் முன் தண்ணீர் குடிக்க கூடாது என கூறுவது ஏன் தெரியுமா!
Next article7 நாட்களில் உங்கள் எடையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!