உடல் வலிமை அடைந்து இரத்த சோகையை குணப்படுத்த‌ பசலைக்கீரையை இப்படி செய்து சாப்பிடுங்க!

0

பசலைக்கீரை நம் நாட்டில் பண்படுத்தப்பட்ட நிலங்களில் பரவலாகக் காணப்படும். கொடிப்பசலை, குத்துப்பசலை, வெள்ளைப்பசலை என, பசலைக்கீரையில் பல வகைகள் உள்ளன. நமது சமையலுக்கு பசலைக்கீரையைப் பருப்புடன் சேர்த்து சமைப்பதால், அதற்குப் பருப்புக்கீரை என்றொரு பெயரும் உண்டு.

பசலைக்கீரையில் நார்ச்சத்து அதிக அளவிலும், மாவுச்சத்து குறைவாகவும் இருக்கிறது. உடல் எடை குறைக்க விரும்புபவர்களும், சர்க்கரை நோயாளிகளும் எண்ணெய் அதிகம் சேர்க்காமல், கடைசல் போல் செய்து சாப்பிடலாம்.உணவில் பசலைக்கீரையை அடிக்கடி சேர்த்துக்கொண்டால், மலச்சிக்கல் பிரச்னை நீங்கும். பசலைக்கீரையில் தண்ணீர் சேர்த்து வேகவைத்துச் சாப்பிடுவது காமாலை மற்றும் கல்லீரல் பிரச்னை உள்ளவர்களுக்கு மிகுந்த பலன் கொடுக்கும்.

பசலைக்கீரையை மோருடன் சேர்த்துச் சாப்பிட்டால், உடல் வலிமை அடையும். எனவே, சிறுவர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள் தாராளமாகச் சாப்பிடலாம். உடல் சூடு அதிகம் இருப்பவர்கள் இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், உடலில் சூடு குறைந்து, குளுமை பெறும். குடல் நோய்கள் வராது. பசலைக்கீரையின் தண்டுச்சாற்றை குழந்தைகளுக்குக் கொடுத்துவந்தால் ஜீரண சக்தி மேம்படும். சளி, நீர்க்கோவை போன்றவையும் சரியாகும்.

பசலைக்கீரையை வாரம் இருமுறை உணவில் சேர்த்துவந்தால், ரத்தசோகை வராது. நரம்பு மண்டலங்கள் சீராக இயங்கும். சர்க்கரை நோயாளிகளும், உடல் எடை குறைக்க விரும்புகிறவர்களும், சப்பாத்திக்குப் பசலைக்கீரைக் கூட்டு செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது. பசலை இலைச்சாறு எடுத்து, கால் முதல் அரை ஆழாக்கு வரை நாள்தோறும் காலையும் மாலையும் சாப்பிட்டுவந்தால் உடலில் ஏற்படும், நீர்ச்சுருக்கு, நீர்க்கட்டு, எரிச்சல், சீதபேதி, ரத்தபேதி முதலான நோய்கள் குணமாகும்.

உடலின் உள் வெப்பம் காரணமாக ஏற்படும் தலைவலி நீங்க, பசலை இலையை நன்றாக அரைத்து, நெற்றியின் மீது பற்றுப் போடலாம். தலைவலி நீங்கும். அக்கி நோயால் அவதிப்படுபவர்கள், பசலை இலையை நன்றாக நசுக்கி அக்கியின் மீது தொடர்ந்து தடவி வந்தால், அக்கி குணமாகும். பசலை இலையையும் அதன் விதையையும் சேர்த்து நன்றாக அரைத்து, தீப்புண், வெந்நீரால் ஏற்பட்ட காயம், சொறி, சிரங்கு ஆகியவற்றின் மீது தடவினால், நல்ல பலன் கிடைக்கும். பசலைக் கீரையின் தண்டை அரைத்து, வேர்க்குரு, கை, கால்களில் ஏற்படும் தோல் எரிச்சலுக்குப் பற்று போடலாம்.

பசலைக்கீரையில் தயாரிக்கப்படும் உணவுகள் சில

பசலைக்கீரை கூட்டு

துவரம் பருப்பை பெருங்காயம், மஞ்சள் பொடி சேர்த்து நெத்தாக வேக விட்டுக் கொள்ளவும். பசலைக் கீரையை நரம்பு நீக்கி ஆய்ந்து கொள்ளவும்.
இதை அலம்பி வாணலியில் போட்டு அதனுடன் தக்காளியை பிழிந்து போட்டு, மிளகாய் பொடி, உப்பு சேர்த்து வேக விடவும். 3 நிமிடம் வெந்ததும் பருப்பு சேர்த்து மேலும் 2 நிமிடம் வேக விடவும். உப்பு சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

பசலைக்கீரை பக்கோடா

தேவையான பொருட்கள்: பசலைக்கீரை – 1 கட்டு கடலை மாவு – 200 கிராம் வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கியது) ஓமம் – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு தண்ணீர் – 1 கப் எண்ணெய் – பொரிப்பதற்கு

தேவையான அளவு செய்முறை: முதலில் பசலைக்கீரையை நன்கு நீரில் அலசி, பின் அதில் உள்ள நீரை முற்றிலும் வடித்து, தண்டுப்பகுதியை நீக்கிவிட்டு, கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் கடலை மாவு, மிளகாய் தூள், வெங்காயம், பச்சை மிளகாய், ஓமம், சீரகம் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, ஓரளவு நீர்மமாக பிரட்டிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெயில் போட்டு பொன்னறிமாக பொரித்து எடுத்தல்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகோழி முட்டைகள்கூட போலியாக தயாரிக்கப்படுகிறன!
Next articleமன அழுத்த பாதிப்பால் தவிப்பவரா நீங்கள்? உங்களின் மன அழுத்தம் நீங்க 30 வழிகள் இதோ!