இலங்கையில் திணறும் மத்திய வங்கி! வரலாறு காணாத வகையில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!

0

வரலாறு காணாத வகையில் டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் தொடர் சரிவு ஏற்பட்டுள்ளது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதத்திற்கு அமைய இலங்கை ரூபாவின் இன்றைய விற்பனை பெறுமதி 171.42 ஆக பதிவாகி உள்ளது.

இலங்கை வரலாற்றில் ரூபாவின் பெறுமதி மிகவும் மோசமான வீழ்ச்சியை சந்தித்த முதல் சந்தர்ப்பம் இதுவென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக ரூபாவின் பெறுமதி மிகவும் மோசமாக வீழ்ச்சி அடைந்து வருகின்றமையால் பொருளாதார ரீதியாக பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இதனை கட்டுப்படுத்த இலங்கை மத்திய வங்கி பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது.

அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதியை நிலையாக பேண சமகால அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சமகாலத்தில் அதிகளவான கடன்களை திரும்ப செலுத்தி வருவதால் டொலரின் ஒதுக்கம் குறைவடைந்துள்ளது. அதேவேளை, இறக்குமதியாளர்களுக்கு டொலரின் தேவை அதிகரித்துள்ளன. இதன்காரணமாக இந்த நிலை ஏற்பட்டள்ளதாக பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதமிழ் பெண் கொழும்பில் மர்மமான முறையில் மரணம்!
Next articleயுவதியின் கடத்தல் உண்மையை அம்பலப்படுத்திய பொலிஸார்!