Home Patti Vaithiyam இரட்டைக் குழந்தைகள் பிறக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதா? யாருக்கு எப்படியான சந்தர்ப்பங்களில் இரட்டை குழந்தை...

இரட்டைக் குழந்தைகள் பிறக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதா? யாருக்கு எப்படியான சந்தர்ப்பங்களில் இரட்டை குழந்தை பிறக்கும் வாய்ப்பு உள்ளது?

0
9592

இரட்டைக் குழந்தைகள் பிறக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதா? யாருக்கு எப்படியான சந்தர்ப்பங்களில் இரட்டை குழந்தை பிறக்கும் வாய்ப்பு உள்ளது?

அதிகமாக இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களின் 30 வய‌திற்கு மேல் தான் உள்ளனர். காரணம் என்னவென்றால் 30 வயதிற்கு மேல் பெண்கள் இறுதி மாதவிடாயை நெருங்கிக் கொண்டிருப்பால், ஒவ்வொரு மாதமும் கருப்பையில் இருந்து அதிகமான‌ முதிர்ச்சியடைந்த கருமுட்டைகள் வெளிப்படும் இந்த காலத்தில் கருத்தரிக்கும் போது இரட்டையர்களை பெற்றெடுக்க வாய்ப்புள்ளது.

அடுத்த்தாக கர்ப்பமாக முயலும் காலத்தில் ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். இந்த ஃபோலிக் அமிலமானது அதிகமாக‌ சிட்ரஸ் பழங்கள் பருப்பு வகைகள், வெண்ணெய் பழம், பசலைக்கீரை, வெண்டைக்காய், நட்ஸ், பட்டாணி, அவகேடோ போன்றவற்றில் உள்ளது.

ஒரு பெண் தான் கருத்தரிக்கும் போது, தன் உயரத்திற்கு ஏற்ற எடையுடன் நன்கு ஆரோக்கியமாக இருந்தால், இரட்டைக் குழந்தைகள் பிறக்க அதிகம் வாய்ப்புக்கள் உள்ளது. ஒன்று அல்லது இரண்டு பிரசவத்தை சந்தித்த பெண்களுக்கு இரட்டையர்கள் பிறக்கும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பெண்களின் கருவளத்தை அதிகரித்து, ஓவுலேசன் நிகழ்வை மேம்படுத்தி, இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். சர்க்கரைவள்ளிக் கிழங்கை தங்களது அன்றாட உணவில் சேர்க்கும் தம்பதிகளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

கருத்தரிக்க முயலும் காலங்களில் ஆண்கள், ஜிங்க் சத்து நிறைந்த உணவுப் பொருட்களான கடல் சிப்பி, பச்சை இலைக் காய்கறிள், விதைகள் மற்றும் பிரட் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும் ஏனெனில் விந்தணுக்களின் உற்பத்தி அதிகரித்து, ஒன்றிற்கு மேற்பட்ட விந்தணுக்கள் நீந்தி கருமுட்டையை அடையும் போது இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும்.

மரபணு ரீதியாக‌ தம்பதிகளின் குடும்பத்தில் யாருக்கேனும் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருந்தால், அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் உயரம் குறைந்த‌ பெண்களை விட உயரமான பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்புள்ளது.

By: Tamilpiththan

Previous articleகூடு கட்டி முட்டை இடும் வழக்கம் கொண்ட ஒரே ஒரு பாம்பு ராஜ நாகம் பற்றிய சில தெரியாத உண்மைகள்.
Next articleஇன்றைய நாள் எப்படி புதன்கிழமை, 6 செப்டம்பர் 2017