இன்றைய நாள் எப்படி புதன்கிழமை, 6 செப்டம்பர் 2017

0

இன்றைய ராசிபலன் தேதி: புதன்கிழமை, 6 செப்டம்பர் 2017

இன்றைய நாள் எப்படி

ஹேவிளம்பி வருடம்
புதன்கிழமை, 6 செப்டம்பர் 2017
ஆவணி
21
மகாளய ஆரம்பம்
நல்ல நேரம்
காலை: 9:00AM – 10:00AM
மாலை: 4:00PM – 5:00PM
இராகுகாலம்
பகல்: 12:00PM – 1:30PM
இரவு: 12:00AM – 1:30AM
எமகண்டம்
காலை: 7:30AM – 9:00AM
இரவு: 12:00AM – 1:30AM

மேஷம்:-தொட்டதெல்லாம் துலங்கும். பெண்களின் நட்பால் சுகம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் தொல்லைகள் குறைந்து, எல்லைகள் விரிந்து ஏற்றம் வரும்.

ரிஷபம்:-வெற்றி மேல் வெற்றி வரும். அரசு அதிகாரிகள் மூலமாக ஆகவேண்டிய வேலைகள், அனுகூலமான திசைகளில் நகரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து, தேர்ச்சி அடைவர்.

மிதுனம்:-தெய்வபக்தியால் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். சுகமான சுற்றுலாப் பயண வாய்ப்புகள் ஏற்படலாம். சிலருக்கு கௌரவக் குறைவால் மன உளைச்சல்கள் ஏற்படலாம்.

கன்னி:-பாதைவிட்டு விலகுவர், பகைவர்கள். கேட்காமலே உதவ முன்வருவர் நண்பர்கள். வீடு, மனை வாங்கும் எண்ணங்கள் மனதில் எழ, எதிர்பார்த்த கடன்கள் எளிதில் கிடைக்கும்.

மகரம்:-எதிர்பார்த்த தனவரவுகளில் ஏமாற்றமே மிஞ்சும். மனைவியின் உடல் நிலையில் அக்கறை தேவை. தொழிலில் புதிய முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது.

கடகம்:-எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். பிறருக்கு இன்பம் தரும் நல்லெண்ணத்தை வளர்த்துக் கொள்வது நல்லது. உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் உயர்வு உண்டு.

சிம்மம்:-வியாபாரத்தில் கவனத்துடன் செயல்பட்டால் இழப்பைத் தவிர்க்கலாம். பேச்சால் பெருமாளையும் அசத்திவிடுவீர்கள். அப்படி இருக்கையில் வருமானத்திற்குக் கேட்கவேண்டுமா ? வாகன யோகம் உண்டு.

துலாம்:-ஆரோக்கியத்தைப் பொருத்து குழந்தைகளை நல்ல அக்கறையுடன் கவனிப்பது முக்கியம். வெளியூர்ப் பயணங்களில் கவனம் தேவை. அமைதியும், ஆதரவான பேச்சும் எதிர்ப்புக்களைக் குறைக்கும்.

மீனம்:-பெண்களால் வெட்டிச் செலவுகள் ஏற்படும். வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் வரும். குடும்ப உறவுகளிடையே மனைவியால் மனக்கசப்பு உருவாகலாம்.

தனுசு:-குவியும் வெற்றிகளால் சந்தோஷம் நிலவி, மனதில் தெம்பு ஏற்படும். அன்பு மனைவியின் அரவணைப்பால் அகம் மகிழும். அரசு உதவியால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம்:-வீண் அலைச்சல்களால் ஓய்வு குறையும். தெய்வமான அம்மாவின் தேக சுகத்தைப் பேண வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் இராது. புதிய முயற்சிகளைக் கைவிடுவது நல்லது.

கும்பம்:-பொருளாதார நிலை போற்றும்படியாய் இருக்கும். வசீகரமான பேச்சால் வருமானம் கூடும். வருமான உயர்வால் வளமும் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வித் தரம் உயரும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇரட்டைக் குழந்தைகள் பிறக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதா? யாருக்கு எப்படியான சந்தர்ப்பங்களில் இரட்டை குழந்தை பிறக்கும் வாய்ப்பு உள்ளது?
Next articleஇன்றைய நாள் எப்படி வியாழக்கிழமை.