இந்த வகை மீன்களை சாப்பிட்டால் உங்க கதி அதோ கதிதான்! மீன் பிரியர்களே உஷார்!

0

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் சிறந்தது மீன் உணவு. மீன் உணவை எந்த பருவநிலை காலத்திலும் சாப்பிடலாம். கோழி உடல் சூட்டை அதிகரிக்கும், ஆடு கொழுப்பை அதிகரிக்கும் என்று கூறுவார்கள். ஆனால் மீன் அளவாக சாபிட்டால் நமக்கு நல்ல ஆரோக்கியத்தை மட்டும் கொடுக்கும். ஆனால் மீன் வகைகள் சிலவற்றை அளவிற்கு அதிகமாக நாம் எடுத்துகொண்டால் உயிருக்கே உலைவைதுவிடுமாம். அப்படிப்பட்ட மீன் வகைகள் என்னென்ன வாங்க பார்க்கலாம்.

கானாங்கெளுத்தி மீன்
மீன் மார்கெட்டுகளில் அதிகம் விலைபோகும் மீன் வகைகளில் ஒன்று “கானாங்கெளுத்தி”. இந்த மீனில் இருக்கும் உயர் ரக Magnesium உடலுக்கு நல்லதுதான் எனினும் இதிலுள்ள அதிகளவு “பாதரசம்” நம் உடலுக்கு தீயதை விளைவிக்கக்கூடியது என்கின்றனர்.

விலாங்கு மீன்
மஞ்சள் அல்லது வெள்ளி நிறத்தல் இருக்கும் மீன் வகைகளில் ஒன்று “விலாங்கு”. இந்த மீன் வகைகளை அதிகளவு சாப்பிடுவதை நாம் தவிற்க வேண்டும். இதில் இருக்கும் polychlorinated biphenyl மற்றும் பாதரசம் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை.

வாளை மீன்
சுவையாக இருந்தாலும் இந்த வகை மீனை அதிக அளவு எடுத்துக்கொள்ளும் பொழுது இதில் இருக்கும் பாதரசம் நம் மூளையை பாதிக்குமாம். ஆகவே வாளை மீனை அளவாக உண்ணுவது நல்லது.

சூறை மீன்
நீல நிற துடுப்பு மற்றும் பெரிய கண்கள் கொண்ட மீன் “சூறை மீன்” இந்த மீன் வகைகள் நம் உடலுக்கு அதிக அளவு கெடுதலை கொடுக்கின்றன. அதிக அளவு பாதரசத்தை கொண்டுள்ள மீனும் இதுதான்.

சுறா மீன்
“சுறா மீன்கள்” பால் சுறாவை தவிர்த்து மற்ற அனைத்து சுறாக்களும் விஷத்தன்மை கொண்டவை. மேலும் இதிலும் அதிகளவு பாதரசம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே இந்த வகை மீன்களை அதிக அளவு எடுத்துகொள்வதை தவிர்ப்பது நல்லது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஒரே ஒரு புகைப்படத்தில் ஒட்டுமொத்த நோய்களுக்கும் தீர்வு! கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
Next articleகாசினிக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டதே இல்லையா! இனி கட்டாயம் சாப்பிட ஆரம்பிச்சிடுவீங்க!