நவீன ஆராய்ச்சிகளின் வாயிலாக இப்போது கண்டுபிடிக்கப்படும் பல மருத்துவ ரகசியங்களை, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சித்த மருத்துவம் கூறியிருப்பது வெளிநாட்டவர்களை எப்போதும் பிரமிக்க வைக்கும் விஷயமாகவே இருக்கிறது. இதனாலேயே, மதிப்புக்கும் வியப்புக்கும் உரிய மருத்துவ முறையாக உலகெங்கும் சித்த மருத்துவம் கொண்டாடப்பட்டு வருகிறது.
டெங்கு, சிக்குன்குன்யா, பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் என்று புதுப்புது காய்ச்சல்கள் உருவாகி மிரட்டிய சமீபகாலங்களில் நிலவேம்பு கஷாயம் பேருதவி செய்ததை யாரும் மறக்க முடியாது.
பதஞ்சலி என்ற சித்தர் உருவாக்கிய யோகாசனங்கள் இன்று சர்வதேச அளவில் பின்பற்றப்பட்டு வருவதையும் நாம் உணர்ந்திருப்போம்.
இதுபோல் ஆரோக்கியமாக வாழ எண்ணற்ற வழிமுறைகளை சித்த மருத்துவத்தின் காரணகர்த்தாக்களான சித்தர்கள் உருவாக்கிச் சென்றிருக்கின்றனர். அவற்றைப் பின்பற்றினாலே நோயில்லாமல் நூறாண்டுகள் தாண்டியும் வாழலாம்’’ என்கிறார் சித்த மருத்துவர் ஜூலியட்.
‘‘யோகம், ஞானம், வைத்தியம் எனும் மூன்றிலும் தேர்ச்சி பெற்றவர்களே சித்தர்கள். அதனால், சித்தர்கள் என்றாலே சாமியார்கள் என்று மதரீதியாக தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டியதில்லை. உடலை நன்கு பேணிக்காப்பதன் மூலம் உயிரை நன்கு வளர்க்க முடியும் என்று கூறியவர்களே சித்தர்கள்.சித்தர்கள் தமிழ்நாட்டின் பல இடங்களில் வாழ்ந்து சமாதி அடைந்துள்ளனர். குறிப்பாக திருமூலர், ராமதேவர், அகத்தியர், கொங்கணவர், பாம்பாட்டி சங்கரன், போகர், பதஞ்சலி, தன்வந்திரி, குதம்பைச் சித்தர் போன்ற சித்தர்கள் இங்கு வாழ்ந்திருக்கின்றனர்.
நோயில்லாமல் உடலைப் பேணிக்காக்க சித்தர்கள் எத்தனையோ வழிமுறைகளை வகுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அதில் இன்றைய அவசரகால நடைமுறைக்கு ஏற்றவைகளும் இருக்கின்றன.இதில் காயகற்பம் என்ற உடலைக் கல் போல் மாற்றும் முறையும், மூச்சை உள்ளடக்கி அதன் மூலம் ஆயுட்காலத்தைப் பெருக்கும் வழியும் முக்கியமானவை. மேலும் நோய்கள் அணுகாதிருக்க, சித்தர்கள் கூறிய சில வாழ்க்கை முறைகளை நாம் பார்ப்போம்.
அதிகாலை எழுதல்
அதிகாலையில் எழுதல் அந்த நாளில் வேலையில் உள்ள சிக்கல்களைப் பகுத்தறிந்து, அதை சரி செய்யும் திறமையை ஊக்குவிக்கிறது. அதிகாலையில் விழிப்பவர்கள் சத்துள்ள உணவுகளை மட்டுமே சாப்பிடுவதாகவும் Northwestern university-யில் நடந்த ஆய்வும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
காலைக்கடன்
மலச்சிக்கலால் பல நோய்கள் ஏற்படுகின்றன. அதைத் தீர்க்கவும் அதிகாலையில் விழிக்க வேண்டும். ஏனெனில், சிறுகுடலுக்கான நேரம் 4-5 மணி. எனவே, அதிகாலையில் நம் உடலின் வெப்பம் குறைந்து மலம் இலகுவாகக் கழியும். மலம் இலகுவாகக்கழிய இரவில் அத்திப்பழம், பேயன்வாழை, உலர்திராட்சை போன்றவற்றை உண்ண வேண்டும். மலம், சீறுநீர் இரண்டையும் எக்காரணத்தைக் கொண்டும் அடக்கக்கூடாது.
குளியல்
காலையில் குளித்தலே சிறந்தது. இதனால் நல்ல பசி ஏற்படும். நோய்கள் நீங்கும். பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிப்பதன் மூலம் அக்குளின் கற்றாழை நாற்றம், வியர்வை, முகத்தில் ஏற்படும் நோய்கள் போன்றவை நீங்கும். சோப்புக்குப் பதிலாக நலுங்குமாவு, பாசிப்பயிறு, வெட்டிவேர், சந்தனம் சோரைக்கிழங்கு முதலியவற்றைப் பூசிக் குளிக்க மேனி பளபளக்கும். சருமம் சம்பந்தமான பிணிகள் நெருங்காது.
எண்ணெய் குளியல்
வாரம் இருநாள் எண்ணெய் தேய்த்து தலைமுழுகி வருவது பஞ்சேந்திரியங்களுக்கு பலம் தரும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கும் எண்ணெய் குளியல் சிறந்த மருந்து.
உணவு
முதல் நாள் சமைத்த உணவு அமுதாகவே இருந்தாலும் மறுநாள் உண்ணக்கூடாது. நன்கு பசி எடுத்தபிறகுதான் உணவுகள் உட்கொள்ள வேண்டும். மேலும் ஏலம், மஞ்சள், சீரகம், காயம், சுக்கு, வெந்தயம், பூண்டு, மிளகு இவற்றைச் சேர்த்து உண்ண வேண்டும்.
பயன்படுத்த வேண்டிய பாத்திரங்கள்
பிளாஸ்டிக் மற்றும் பல இதர பாத்திரங்களில் நீர் சேகரிப்பதைவிட வெண்கலம், செம்பு, பித்தளைப் பாத்திரங்களில் நீரை சேகரித்துப் பயன்படுத்துவது நல்லது. இதன்மூலம் நீரினால் ஏற்படும் தொற்றுநோய்க் கிருமிகள் அழிக்கப்படுகின்றன. இதனால் தண்ணீரை வேறு சுத்திகரிப்பு செய்ய வேண்டிய தேவையில்லை.
பால் அருந்துதல்
பசும்பாலை அனுதினமும் பருகி வர, நோயற்று வாழலாம். பாலில் Probiotics அதிகம் இருப்பதால் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தைத் தரும். மேலும், காய்ச்சின பாலை இரவில் குடித்துவிட்டு படுக்கும்போது, பகலின் பித்தத்தைக் குறைத்து, நல்ல தூக்கத்தை வரவழைத்துக் கொள்ள முடியும். ஏனெனில், பாலில் உள்ள Tryptophan என்ற அமினோ அமிலம் தூக்கத்தின் இயல்பை அதிகரிக்கும். பாலில் உள்ள மெக்னீசியம் நரம்பைப் பாதுகாத்து தசை, நரம்புகளின் இயக்கத்துக்கு உதவும்.
தூக்கம்
பகலில் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும். இடது கையை மடக்கி, இடது புறமாக ஒருக்களித்து உறங்குவது நல்லது. இதன்மூலம் GERD, ஆஸ்துமா போன்ற நோய்கள் குறைவது
உறுதிபடுத்தப்படுகிறது.
உறுதியான வாழ்வு வாழ..
.
6 திங்களுக்கொரு முறை வாந்தி செய்விக்கக் கூடிய மருந்தையும், 4 திங்களுக்கு ஒருமுறை பேதி செய்விக்கக்கூடிய மருந்துகளையும் உட்கொள்ள வேண்டும்.