பொடுகை மாயமாய் மறைய வைக்கும் உப்பு எப்பிடின்னு தெரியுமா!

0

வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தாலே சரும அழகை மேம்படுத்தலாம்.

முக்கியமாக உப்பு சரும அழகை மட்டுமின்றி தலைமுடியில் உள்ள பொடுகை முற்றிலும் போக்க எவ்வாறு உதவுகின்றன உன்பதை பற்றி பார்ப்போம்.

தேவையானவை

உப்பு- 2 டீஸ்பூன்

தண்ணீர்- தேவையான அளவு

செய்முறை

உப்பு ஸ்கால்ப்பில் அசிங்கமாக வெளிவரும் செதில்களை நீக்கி, ஸ்கால்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

அதற்கு 2 டீஸ்பூன் உப்பை சிறிதளவு நீர் சேர்த்து அதனை ஸ்கால்ப்பில் படும்படி விரல்களால் மென்மையாக 10-15 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

இப்படி வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து செய்து வாந்தால் தலையில் உள்ள பொடுகு பிரச்சனை குறையும்.

சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்த, 2 டீஸ்பூன் கல் உப்புடன், 4 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

நகங்களை வலிமையாக்க 1/2 கப் வெதுவெதுப்பான நீரில், 1 டீஸ்பூன் உப்பு, 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அந்நீரில் விரல் நகங்களை 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

பற்களில் மஞ்சள் கறை நீங்க, உப்பை 1 டீஸ்பூன் எடுத்துக் கொண்டு, அத்துடன் 2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து, ஈரமான டூத் பிரஷ் பயன்படுத்தி பற்களைத் துலக்க வேண்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஎலும்பு மற்றும் மூட்டு பிரச்சனைகள், பசியின்மை, அஜீரணம், மூலம் என பல உடல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் ஆயுர்வேத மூலிகை!
Next articleஆரோக்கிய வாழ்வுக்கு சித்தர்களின் அறிவுரைகள்!