ஆப்பிளை தோலோடு சாப்பிடலாமா! மீறி அப்படி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா! ஆராய்ச்சியாளர்களின் பகீர் தகவல்!

0

என்னதான் கால மாற்றம் ஏற்பட்டாலும் நமக்குள் இருக்கும் புதிர்கள் ஒரு போதும் மாற போவதில்லை. முட்டைக்குள் இருந்து கோழி வந்ததா..? இல்லை கோழிக்குள் இருந்து முட்டை வந்ததா? மனிதன் முதலில் தோன்றினான? இல்லை இயற்கை முதலில் தோன்றியதா? இப்படி பல தரப்பட்ட கேள்விகள் நமக்குள் இருந்து வருகிறது. இந்த கேள்விகளில் பல விடை தெரியாமலே உள்ளன. இந்த வகையை சேர்ந்தது தான் ஆப்பிளும்.

ஆப்பிளை அப்படியே சாப்பிடலாமா? இல்லை தோலை நீக்கி சாப்பிடலாமா? என்பது தான். ஆப்பிளின் தோலில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது என ஒரு கூட்டம் பேசுகிறது. ஆப்பிளின் தோலில் விஷ தன்மை உள்ளது என ஒரு கூட்டம் கூவுகிறது? இதில் எது உண்மை. எதை நம்புவது?

உண்மையிலே ஆப்பிளின் தோலில் சத்துக்கள் உள்ளதா? ஆப்பிளை எப்படி சாப்பிடுவது சரி..? இப்படி எக்கசக்க கேள்விகளுக்கு பதிலை தருவதே இந்த பதிவு.

ஆப்பிள்
ஆப்பிள் பற்றி சொல்ல வேண்டுமென்றால், எல்லா கால கட்டத்திலும் இதன் வரலாறு பின் தொடர்வதே இதன் சிறப்பாக்கும். ஆதாம், ஏவாள் கதை முதல் மருத்துவ பயன் வரை ஆப்பிளை இந்த உலக மக்கள் சிறப்பான முறையிலே பார்க்கின்றனர். அதே போன்று ஆப்பிளில் சத்துக்களும் ஏராளமாக உள்ளது.

தோல்
எல்லா பழங்களின் தோலையும் நம்மால் சாப்பிட இயலாது. ஒரு சில பழங்களின் தோலை மட்டும் தான் நம்மால் சாப்பிட இயலும். ஆனால், சில பழங்களின் தோல்கள் சாப்பிட கூடிய நிலையில் இருந்தாலும் நாம் அதை தவிர்த்து விடுவோம். இதற்கு முக்கிய காரணமாக் சொல்லப்படுவது அதன் விஷ தன்மை தான்.

ஆராய்ச்சி
ஆப்பிளின் தோலை பற்றிய ஆய்வில் பல முடிவுகள் வெளி வந்துள்ளன. குறிப்பாக ஆப்பிளை உற்பத்தி செய்யும் போது அதன் மீது பயன்படுத்தப்படும் பூச்சி கொல்லிகள், பதப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் விஷ தன்மை உள்ள மெழுகுகள் போன்றவற்றால் தான் இதன் தோலை சாப்பிட கூடாது என விஞ்ஞானிகள் சொல்கின்றன. இருப்பினும் இதை வேறு விதமாக சரி செய்யலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

வழி முறைகள் #1
ஆப்பிளில் உள்ள ஊட்டச்சத்துக்களும் தாதுக்களும் தான் இதை சாப்பிடுவதற்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. அதற்கு முன் இந்த தோலில் உள்ள விஷ தன்மைகளை நீக்க வழி செய்ய வேண்டும். எப்போது ஆப்பிளை சாப்பிட்டாலும் சாதாரண நீரில் 1 மணி நேரம் ஊற வைத்த பின்னரே சாப்பிட வேண்டும். அப்போது தான் அதன் மீதுள்ள பூச்சி கொல்லிகள் நீங்குமாம்.

வழி முறைகள் #2
மெழுகை நீக்குவதற்கு 2, 3 முறை வெது வெதுப்பான நீரால் அலச வேண்டும். அல்லது 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் பேக்கிங் சோடாவை நீரில் கரைத்து கொண்டு அதில் ஆப்பிளை முக்கி எடுக்கவும். இதன் பின் சாதாரண நீரால் கழுவி விட்டு சாப்பிடலாம். அதன் பின்னர் இதை தோலுடனே சாப்பிடலாம்.

ஏன் தோலோடு சாப்பிடணும்..?
நாம் சாப்பிட கூடிய சிறிய உணவுகளில் கூட அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளது. அந்த வகையில் ஆப்பிளின் தோலில் பலவிதமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை சாப்பிடுவதால் புற்றுநோய் தடுக்கப்படும் என கார்னெல் பல்கலை கழக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேலும் இதனால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியும் தடைப்படுமாம்.

உடல் எடை
ஆப்பிள் தோலில் அதிக அளவில் நார்சத்துகள் உள்ளது. இதை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், செரிமான கோளாறு ஆகியவை நீங்கும். அத்துடன் கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து, கச்சிதமான எடையுடன் இருப்பீர்கள். மேலும், தசைகளின் வளர்ச்சியும் அதிகரித்து, சிறப்பான உடல் அமைப்பை பெறுவீர்கள்.

சுவாச பிரச்சினைகள்
சுவாசம் இல்லையேல் நம்மால் உயிர் வாழ இயலாது. சுவாச பிரச்சினையால் இந்தியாவில் பல கோடி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆப்பிளில் உள்ள quercetin என்கிற பிளவனாய்ட் நுரையீரல் திறனை அதிகரிக்கும். அத்துடன் நுரையீரலில் ஏற்பட கூடிய புற்றுநோய் அபாயத்தில் இருந்தும் இது காக்கும்.

தீர்வு!
எப்போது ஆப்பிளை சாப்பிட்டாலும் அதன் தோலையும் சேர்த்து சாப்பிடுங்கள். ஆனால், மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது தோலை சுத்தம் செய்வது தான். தோலை வெது வெதுப்பான நீரை கொண்டோ, வினிகரை கொண்டோ சுத்தம் செய்து விட்ட பின்னர் சாப்பிடுங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆண்களின் வயது அதிகரிப்பதால்! ஆண்மையில் தடை ஏற்படுமா!
Next articleகர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சூர்யா பட நடிகை! பரவி வரும் புகைப்படம்!