பற்களின் பின் உள்ள மஞ்சள் கறையால் வாய் துர்நாற்றம் வீசுதா மஞ்சள் கறைகளை போக்க‌ அற்புத பாட்டி வைத்திய வழிகள்.

0

பற்களின் பின் உள்ள மஞ்சள் கறையால் வாய் துர்நாற்றம் வீசுதா மஞ்சள் கறைகளை போக்க‌ அற்புத  வழிகள்.

நாம் எவ்வளவு தான் நல்ல தரமான டூத் பேஸ்ட்டுகளைக் கொண்டு தினமும் இருவேளை பற்களைத் துலக்கினாலும், பற்களின் இடுக்குகள் மற்றும் பின்புறத்தில் மஞ்சள் நிற கறைகள் சேர்வது மட்டும் தடுக்கமுடிவதில்லை. அப்படி சேரும் மஞ்சள் கறைகளை நீக்கவும் முடியாத‌ வண்ணம் இருப்பதுடன், வாய் துர்நாற்றத்தையும் அதிகரிக்கிறது. வாயில் உள்ள பாக்டீரியாக்களால் ஏற்படும் இந்த கறைகளை அப்படியே விட்டுவிட்டால், நாளடைவில் அது ஈறுகளைப் பாதித்து, கிருமிகளை உண்டுப‌ண்ணி வாயின் ஆரோக்கியத்தை மோசமாக்கிவிடும். ஒவ்வொருவரும் பற்களில் சேரும் மஞ்சள் கறைகளைப் போக்க முயற்சிக்க வேண்டும்.

டூத் பேஸ்ட்டுடன் சாம்பல் கரியை சேர்த்து பல் துலக்கினால் பற்களின் வெள்ளையாவதுடன் வலிமையாகவும் இருக்கும்.

டூத் பேஸ்ட்டில் சிறிதளவு உப்பு சேர்த்து தினமும் இரண்டு முறை பற்களை துலக்கினால் பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கும். ஆனால உப்பை அளவாக பயன்படுத்த வேண்டும்.

தேங்காய் எண்ணெயில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை ஏராளமாக உள்ளது. எனவே இதனைக் கொண்டு வாயை கொப்பளித்து பராமரிக்கும் போது, வாயில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு கறைகள் ஏற்படாது.தினமும் காலையில் எழுந்ததும் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி 15-20 நிமிடம் கொப்பளித்து பின் வெறும் டூத் பிரஷ் கொண் பற்களை சிறிது நேரம் தேய்க்க வேண்டும். இச்செயலை தொடர்ந்து செய்து வர, 10 நாட்களிலேயே ஓர் மாற்றத்தைக் காண்பீர்கள்.

தேங்காய் எண்ணெயைப் போன்றே நல்லெண்ணெயும், பற்காறைகள், ஈறு நோய்கள் போன்றவற்றைப் போக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி, 10-15 நிமிடம் கொப்பளித்து, பின் துப்ப வேண்டும். இப்படி தினமும் காலை மற்றும் இரவில் செய்து வர, பற்காறைகள் வேகமாக நீங்கும்.

பற்களை எலுமிச்சை சாறுடன் உப்பு கலந்து தேய்த்து வந்தால், பற்களில் உள்ள மஞ்சள் கறை படிப்படியாக நீங்கும். எலுமிச்சை பழத்தைக் கொண்டு பற்களை துலக்கி, பின் குளிர்ந்த நீரில் பற்களை கழுவினால், கறைகள் நீங்கி பிரகாசமாக தெரியும்.

வீட்டில் சமையல் சோடா இருந்தால் அதிலிருந்து சிறிதளவு எடுத்து ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிதளவு சமையல் சோடாவை இட்டு சமையல் சோடா நனையும்படி 4,5 சொட்டு எலுமிச்சை சாற்றினை இடுங்கள் நனைந்த சமையல் சோடாவை கொஞ்சமாக எடுத்து பற்களின் மீது அதிக அழுத்தம் கொடுக்காமல் மெதுவாக தேயுங்கள். இதை 1 அல்லது 2 நிமிடங்கள் வரை மெதுவாக தேய்த்தால் போதுமானது.அதிக நேரமோ அல்லது அதிக அழுத்தமோ கொடுத்து தேய்த்தால் பல்லின் எனாமல் அரிக்கப்பட்டு விடும்.தேய்த்த பிறகு வாயை சாதாரண நீர் கொண்டு நன்றாக கொப்பளியுங்கள். சிறிது நேரம் கழித்து தினமும் நீங்கள் பயன்படுத்தும் பேஸ்டை கொண்டு பற்களை துலக்குங்கள். இதை தினமும் செய்யக்கூடாது. வாரத்தில் 2 நாட்கள் செய்தால் போதும். சில நாட்களிலேயே மஞ்சள் கறை அகன்று விடும்.

இரவு தூங்கம் முன் ஆரஞ்சு பழத்தின் தோலை பற்களில் நன்றாக தேய்த்து, அடுத்த நாள் காலையில் பற்களை கழுவ வேண்டும். பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கும்.

தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், அதில் உள்ள அசிட்டிக் அமிலம் பற்களில் உள்ள, கறைகளையும் நீக்குகிறது.

தக்காளியின் ஒரு துண்டை பற்களில் தேய்த்து, 5 நிமிடம் ஊற வைத்து, பின் வெறும் டூத் பிரஷ் கொண்டு தேய்த்து கழுவ, பற்கள் வெண்மையாகும்.

ஆப்பிள், கேரட், வெள்ளரிக்காய் ஆகிய அனைத்தையும் தினமும் சாப்பிட்டு வந்தால், பற்களை வெண்மையாக மாற்றலாம்.

1 கப் நீரில் 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல், 1/2 கப் பேக்கிங் சோடா, 10 துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் சேர்த்து கலந்து, தினமும் இக்கலவையைக் கொண்டு பற்களைத் துலக்க, பற்களில் இருக்கும் பற்காறைகள் விரைவில் நீங்கும்.

உப்பை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் ஈறுகளையும், எனாமலையும் பாதிக்கும். சாதாரண சாம்பலை, பேஸ்ட்டுடன் சேர்த்து காலை, மாலை பல் துலக்குவதால், பற்களில் உள்ள கறை நீங்கி, வெண்மையாக காட்சியளிக்கும். இரவு உறங்கும் முன், ஆரஞ்சு தோலில் பற்களை துலக்கி விட்டு, வாயை கழுவாமல் படுத்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு தோலில் உள்ள வைட்டமின் ‘சி’ சத்து, பற்களில் உள்ள கறைகளை நீக்கி விடும்.

தினமும் 3-4 அத்திப்பழங்களை வாயில் போட்டு மெல்ல, உமிழ்நீர் சுரப்பிகள் தூண்டப்பட்டு, வாயில் பாக்டீரியாக்கள் பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டு, பற்கள் சுத்தமாகவும், வெண்மையாகவும் இருக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articlemootu vali kunamaga iyarkai maruthuvam உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியாமல் எழுந்தால் உட்கார முடியாத அளவு மூட்டுவலிக்கு முடிவு கட்ட இயற்கை சிகிச்சை!
Next articleஉங்க மொபைல் தண்(ணீரில்) விழுந்து விட்டதா? உடனே இப்படி செய்யுங்க ஒண் ஆகிடும்.