mootu vali kunamaga iyarkai maruthuvam உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியாமல் எழுந்தால் உட்கார முடியாத அளவு மூட்டுவலிக்கு முடிவு கட்ட இயற்கை சிகிச்சை!

0

mootu vali kunamaga iyarkai maruthuvam உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியாமல் எழுந்தால் உட்கார முடியாத அளவு மூட்டுவலிக்கு முடிவு கட்ட இயற்கை சிகிச்சை!

பாட்டியின் கைவைத்தியம்:
நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம்.

வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.

ஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.

இது ஒரு ஸ்பெயின் மருத்துவரின் குறிப்பு, மேலும் நல்ல பலனை தரும். இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.

மூட்டுவலி நோய் ஏற்படும்போது மூட்டு இணைப்புக்களை அசைக்க முடியாமை மற்றும் மூட்டு இணைப்புகளில் வீக்கம் வலி ஆகியவை ஏற்படும். அத்தியாவசியமான வேலைகளைக்கூட செய்ய முடியாமல் போய்விடும். ருமடாய்டு ஆர்த்ரைட்டிஸ் நோய் உடலின் மற்ற பாகங்களையும் பாதிப்பதால் ஆயுள் குறையும் ஆபத்து உள்ளது.

உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியாமல் எழுந்தால் உட்கார முடியாமல் மூட்டுவலிக்குது என்று வேதனையால் முனுமுனுக்கும் நிறையபேரை பார்த்திருக்கின்றோம். சிறியவர் முதல் வயதானவர்கள் வரை ஆண்கள், பெண்கள் என்று வித்தியாசம் இன்றி வரும் வியாதி மூட்டுவலியாகும்.

மூட்டுவலி என்பது உடலின் எவ்வித மூட்டிலும் ஏற்படகூடியதினால் பொதுவாக முழங்கால் மூட்டில் ஏற்படும் வலியை மூட்டுவலி என்கிறோம். அசையம் மூட்டுகளில் மிகப்பெரியது முழங்கால் மூட்டுதான்.உடல் எடையானது அதிகரிப்பதால் உடல் எடையைத் தாங்கக்கூடிய மூட்டுகளின் இணைப்பை சேதமாக்குவதோடு இணைப்புகளின் இயற்கையான கட்டமைப்பையும் சேதப்படுத்துகிறது. சரியான உடல் எடையை பேணுவதால் முழங்கால்கள், மற்றும் இடுப்பு, கைகளில் வரக்கூடிய மூட்டு வலிகளைத் தடுக்கிறது.

மூட்டுக்களில் சைனோவியல் என்கிற மூட்டுச் சுரப்பி படலம் இருக்கிறது. அதைச் சார்ந்த நோய்களும் மூட்டில் வர வாய்ப்பு உண்டு. முழங்கால் மூட்டில் பாதிப்பு ஏற்பட்டால், அந்த இடத்தின் இறுக்கம் ஏற்பட்டு அங்கு கடும் வலியுடன் அசைவும் ஏற்படாமல் போகலாம்.

மூட்டுவலி ஏற்படுவதற்கு முக்கியமான காரணங்கள் : ஹார்மோன் மாற்றத்தால், இரத்த சோகை, அஜிரண தொல்லை, வாயுத்தொல்லை, மூட்டுத் தேய்மானம், அதிக எடையினால் உடற்பயிற்சி இன்மை, கால்சியம் பற்றாக்குறை நரம்பு மற்றும் தசைப்பிடிப்புகளால், சத்துள்ள உணவு எடுத்துக் கொள்ளாததால், கிருமிகளால்.

மூட்டுத் தேய்மானத்தில் பலவகைகள் உள்ளன. அதில் 3 வகையான மூட்டுத் தேய்மானங்கள் என்னவென்றால் ஆஸ்டியோ ஆர்த்தரைடிஸ், ருமடாய்ட் ஆர்த்தரைடிஸ், எலும்பு அடர்த்தி குறைதல்.

இந்த நோய் வயதானவர்களுக்கு மட்டும் வரும் என்பதில்லை. இந்த நோய் எந்த வயதினரையும் தாக்கும். மூட்டு ஜவ்வு தேய்வதால் ஏற்படக்கூடிய மூட்டுவலி குறிப்பாக வயதானவர்களுக்கு வருகிறது. ஆனால், மற்ற மூட்டுவலி வகைகளான ருமடாய்டு, ரியேக்டிவ் ஆர்திரைட்டிஸ் போன்றவை இள வயதினருக்கும் வருகிறது.

மூட்டுத்தேய்மானம் கால் மற்றும் இடுப்புப் பகுதியில் உள்ள மூட்டுகளில் தான் அதிகமாக வருகிறது.நடப்பதற்கும்,உட்கார்ந்தால் எழுவதற்கும் மிகவும் கஷ்டமாக இருக்கும். நடந்தால் மூட்டுகளில் வலி, மூட்டு வீங்குதல், வலியால் இரவு தூக்கம் கெடுதல் போன்ற பிரச்சனைகளில் எது வேண்டுமானாலும் ஏற்படலாம்.
மூட்டு, மணிக்கட்டு, கை, கால் மற்றும் விரல்கள் போன்ற இடங்களில் உள்ள மூட்டுகளில் இந்த நோயின் பாதிப்பு அதிகமாக இருக்கும். இந்த மூட்டுதான் பாதிக்கப்படும் என்று இல்லாமல் எந்த மூட்டும் பாதிக்கப்படலாம்.

சாதாரண வயது ஏற ஏற ஆண்டுக்கு 0.7 சதம் எலும்பின் அடர்த்தி இழப்பு ஏற்பட்டாலும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கும் 60 வயது கடந்த ஆண்களுக்கும் இழப்பு அதிகம் ஏற்படும். மேலும் சினைப்பை அகற்றப்பட்ட பெண்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படும்.

மூட்டுவலியிலிருந்து விலக இயற்கை மருத்துவ சிகிச்சை யோகா : சில உடற்பயிற்சிகள் மற்றும் யோக ஆசனங்களாகிய ஜானுசிரசாசனம், பச்சிமோத்தாசனம், சலபாசனம், புஜங்காசனம் மற்றும் சில ஆசனங்கள் செய்வதால் இரத்த ஓட்டம் முழங்காலுக்கு சீராகப் பாய்கிறது. இதனால் முழங்கால் புத்துணர்ச்சி அடைகிறது.

மூட்டு நோய்கள் வராமல் தடுப்பதற்கும், குணப்படுத்துவதற்கும் மூட்டு இணைப்புகளை உறுதிப்படுத்துவது யோகா மிகவும் அவசியம். யோகாசனங்கள் மூட்டு இணைப்புகளை உறுதிப்படுத்துகிறது. யோகாசனங்கள் செய்பவரின் மூட்டு இணைப்புகள் அசாதாரணமான சூழ்நிலைகளிலும் இயல்பாகச் செயல்படுவதால் மூட்டு தசைகள் விறைப்படைவது குறைகிறது.

மண் சிகிச்சை : கடுகுபற்று மசாஜ், ஆயில் மசாஜ், மண்பட்டி, மண்குளியல், அக்குபஞ்சர்,

நீர் சிகிச்சை : பாதக்குளியல், நீராவி, ஈரத்துணி பட்டி, சுடுநீர் ஒத்தடம் மற்றும் வாழை இலைக்குளியல்.

காந்த சிகிச்சை: காந்தக்கல் சிகிச்சை, காந்த நீர் அருந்துதல்.

பழங்கள்: அண்ணாச்சி, எலுமிச்சை, தர்பூசணி, சாத்துக்குடி, ஸ்ட்ராபெர்ரி, நெல்லிக்காய், ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம்.

பச்சை காய்கறிகள்: வெண்டைக்காய், பூண்டு வெய்காயம், கேரட், வெள்ளரிக்காய், பீட்ரூட், பீன்ஸ் மற்றும் நீர்க்காய்கள்.

கீரைகள் : முக்கியமான பிரண்டை, முடக்கத்தான் கீரை சாப்பிடலாம். கீரைகள், காய்கள், பழங்கள், சாப்பிடும் உணவில் சரிபாதி எடுத்துக்கொண்டாலே மூட்டுவலி நம்மை விட்டு ஓடிவிடும்.

ஜூஸ் : உருளைக் கிழங்கு ஜூஸ், முடக்கத்தான் சாறு,

40–50 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்கள் உணவில் அன்றாடம் 4-5 வெண்டைக்காய்கள் (பச்சையாக உண்டால் மிகவும் நல்லது).

புளி, ஊறுகாய், டின்களில் அடைக்கப்பட்ட துரித உணவுகள் தவிர்க்கவும். தக்காளிப்பழம், புளி, பால், ஆட்டுக்கறி, கோழிக்கறி. கொழுப்பு பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

இயற்கையோடு இணைந்து வாழ கற்றுகொண்டால் எந்த நோயும் நம்மை நெருங்காது.

tamilpiththan.com

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்.
Next articleபற்களின் பின் உள்ள மஞ்சள் கறையால் வாய் துர்நாற்றம் வீசுதா மஞ்சள் கறைகளை போக்க‌ அற்புத பாட்டி வைத்திய வழிகள்.