Home thatstamil one india tamil oneindia tamil suvarasiyam உங்க மொபைல் தண்(ணீரில்) விழுந்து விட்டதா? உடனே இப்படி செய்யுங்க ஒண் ஆகிடும்.

உங்க மொபைல் தண்(ணீரில்) விழுந்து விட்டதா? உடனே இப்படி செய்யுங்க ஒண் ஆகிடும்.

0
5107

உங்க மொபைல் தண்ணீரில் விழுந்து விட்டதா? உடனே இப்படி செய்யுங்க ஒண் ஆகிடும்.

வேலைகளை செய்யும் போது எவ்வளவு கவனத்துடன் இருந்தும் கூட சில நேரங்களில் எதிர்பாராத விதமாக மொபைல் தண்ணீரில் நனைந்துவிடுகிறது. அப்படி நனைந்துவிட்டால் என்ன செய்வது என்பது மட்டுமே கேள்வி. அப்படி மொபைல் நீரில் விழுந்தால் உடனடியாகச் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றித் பார்ப்போம்!

உடனடியாக மொபைலை நீரில் இருந்து வெளியே எடுத்து உடனடியாக மொபைலை ஆஃப் செய்யவும். மொபைல் ஆனிலேயே இருந்தால் ஷார்ட் சர்க்யூட் ஆக வாய்ப்பிருக்கிறது. நீரில் விழும் மொபைல் தானாகவே ஆஃப் ஆகிவிடக் கூடும். எனவே பயப்பட வேண்டாம். ஆஃப் செய்ததும் மொபைல் கவர், பேட்டரி, சிம், மெமரி கார்டு என அத்தனை பாகங்களையும் தனித்தனியாகக் கழட்டிக் கொள்ளுங்கள். அதன்பின், சுத்தமான காட்டன் துணியால் அனைத்துப் பாகங்களையும் ஈரம் போகும் அளவு துடைத்து சுத்தம் செய்யுங்கள்.

சுத்தம் செய்தபின், அதனால் காற்றோட்டமான அல்லது வெயில் இருக்கும் இடத்தில் மொபைலை பாதுகாப்பாக வைக்கவும். தனித்தனியாகக் கழற்றி வைத்திருக்கும் அத்தனை பாகங்களையும் உலர வைக்கவும். உலர வைப்பதற்காக‌ எக்காரணம் கொண்டும் ஹேர் ட்ரையர் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தாதீர்கள். அதில் இருந்து வெளியேறும் வேகமான வெப்பக்காற்றால் நீரானது உள்பாகத்திற்குச் செல்ல வாய்ப்பு அதிகம்.

இவ்வளவு செய்முறைகளுக்குப் பின்னும் மொபைலின் உள்பகுதியில் ஈரப்பதம் இருக்க வாய்ப்பு அதிகம். இந்தப் பிரச்னைக்கு நம் முன்னோர்கள் பின்பற்றிய வழி ஒன்றிருக்கிறது.

பெரிய பாத்திரத்தில் அரிசியை நிரப்பி, அதன் உள்ளே மொபைலை வைத்து இறுக மூடிவிடுங்கள். சில மணி நேரங்களுக்குப் பிறகு அரிசியானது மொபைலில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். அதன்பின் காட்டன் துணியால் மொபைலின் அத்தனை பாகங்களையும் நன்கு துடைத்துவிட்டு, ஆன் செய்து பாருங்கள். மொபைல் ஆன் ஆகிவிட்டால் சக்சஸ். இல்லை என்றால் உடனடியாக சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் செல்லுங்கள். ஒருவேளை அவர்கள் இதன் பின்னும் கூட மொபைலை சரி செய்ய வாய்ப்பிருக்கிறது.

சாம்சங் போன்ற பல மொபைல்களில் வாட்டர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். பொதுவாக பேட்டரி முனை அல்லது அதன் கீழ்ப்பகுதியில் வெண்ணிறத்தில் இந்த ஸ்டிக்கர் இருக்கும். நீரில் மூழ்கும்போது இதன் நிறம் சிவப்பாக மாறும் தன்மை கொண்டது. உங்கள் மொபைலின் உள்ளே நீர் இறங்கியிருக்கிறதா என்பதை இதை வைத்தும் தெரிந்து கொள்ளலாம். நீர் புகாதவண்ணம் சிம் கார்டுகள் பொதுவாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அதனால் சிம் கார்டில் உள்ள நீரைத் துடைத்து வேறொரு மொபைலில் பொருத்துங்கள்.

மொபைலில் உள்ள நீரை வெளியேற்றுவதற்காக எக்காரணம் கொண்டும் மொபைலை வேகமாக குலுக்க வேண்டாம். இதனால் உள்பக்கமாக மேலும் நீர் இறங்கவே அதிகம் வாய்ப்பிருக்கிறது. நீரை உறிஞ்சக்கூடிய காட்டன் துணியால் சுத்தம் செய்வதே சிறந்தது.

By: Tamilpiththan

Previous articleபற்களின் பின் உள்ள மஞ்சள் கறையால் வாய் துர்நாற்றம் வீசுதா மஞ்சள் கறைகளை போக்க‌ அற்புத பாட்டி வைத்திய வழிகள்.
Next articleபெண்களின் கண்களின் அசைவுகளை வைத்தே அவர்களின் எண்ணங்களின் அர்த்தத்தை புரிந்துகொள்ள முடியும். எப்படி தெரியுமா?