தென் கொரியா மற்றும் வடகொரியா தலைவர்களின் சந்திப்பின் போது கிம் ஜாங் உன் மூச்சுத் திணறிய நிலையில் எல்லையை கடந்தார்.
வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் சுமார் 65-ஆண்டுகளுக்கு பின்னர் தென் கொரியா எல்லைக்குள் சென்றார். அவரை தென் கொரியா ஜானதிபதி மூன் ஜியே இன் உற்சாகமாக வரவேற்றார்.
இந்த சந்திப்பின் போது கிம், வட மற்றும் தென் கொரியாவின் எல்லைக் கோடுகளாகக் கருதப்படும் காங்கிரீட் சுவரை கடந்து வந்த போது உணர்ச்சி மிகுந்த நிலையில் நான் இங்கு வந்தேன்.
புதிய வரலாற்றின் தொடக்கமாக நான் இங்கு வந்துள்ளேன். கடந்த கால வரலாறுகள் முடிந்து விட்டன. இது தொடக்கம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்றைய சந்திப்பின் போது தென் கொரியா ஜனாதிபதியுடன் சகஜமாக பேசிய கிம்மால் சகஜமாக அதிக தூரம் நடக்க முடியவில்லை என்றே கூறலாம்.
இரு நாட்டு தலைவர்களும் இந்த சந்திப்பின் போது அதிக தூரம் நடந்து சென்றே தான் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கிம் நடந்து கொண்டே பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி அவர் தென்கொரிய எல்லையை கடந்த போது மூச்சு திணறிய நிலையிலே எல்லையை கடந்தார்.
இதைத் தொடர்ந்து இந்த சந்திப்பின் நினைவாக இருவரும் அங்கு மரத்தை நட்டனர். இதற்காக இருநாடுகளில் இருந்தும் மண், தண்ணீர் எடுத்து வரப்பட்டிருந்தது.
அப்போது இருநாட்டு தலைவர்களும் மண்ணை அள்ளி போட்டுக் கொண்டிருந்த போது வடகொரிய ஜனாதிபதியால் தொடர்ந்து மண்ணை எடுத்து மரத்திற்கு வீச முடியவில்லை, சிறிது நேரம் நிறுத்தி அதன் பின் வீசினார். அதே விடயம் தென் கொரியா ஜனாதிபதி எந்த வித சிரமமுமின்றி வீசினார்.
இதனால் அவருக்கு மூச்சுத் திணறல் இருப்பது தொடர்பான பிரச்சனை இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. கிம் Swiss cheese-க்கு அடிமையானவர் என்பது கடந்த 2014-ஆம் ஆண்டு தெரியவந்தது.
அதன் சுவையால பெரிதும் ஈர்க்கப்பட்டதன் காரணமாகவே அவர் உடல் எடை அதிகரித்தாகவும், அதுவே மூச்சுத் திணறலுக்கு காரணம் என்றும் கூறப்பட்டது. மேலும் கிம்முக்கு நீரிழிவு நோய் இருப்பதாகவும் முன்னர் தகவல்கள் தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.