இந்தியாவிலிருந்து கொழும்பிற்கு கொண்டுவரப்பட்ட போதை மாத்திரைகள்!

0

போதை மாத்திரையாக பயன்படுத்தப்படும் அதி வலி நிவாரணி மாத்திரைகள் உள்ளிட்ட 12.8 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

நேற்று பிற்பகல் கொழும்பு , புறக்கோட்டை வர்த்தக களஞ்சியம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுங்கப் பரிசோதனையின் போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புறக்கோட்டையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று துணிகளை இறக்குமதி செய்யும் பேரில் இந்தியாவில் இருந்து 2 இலட்சம் ட்ரெமடோல் மாத்திரைகள், 85 ஆயிரம் பெண்கள் காலணிகள் மற்றும் 4 ஆயிரம் ஆண்களுக்கான காலணிகள் என்பவற்றை சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்திருந்தது.

நேற்றைய தினம் சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது குறித்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றை இறக்குமதி செய்த நிறுவனத்துக்கு எதிராக தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி 12.8 மில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமூச்சுத் திணறி எல்லையை கடந்த வடகொரியா ஜனாதிபதி: நேற்றைய சந்திப்பின் முக்கிய தகவல்கள்!
Next articleஇலங்கையில் நேர்முகத் தேர்வுக்கு மணப்பெண் கோலத்துடன் சென்ற பெண்!