ஒரே வாரத்தில் நாள்பட்ட இருமலை குணப்படுத்த இத ட்ரை பண்ணுங்க!

0

ஒரே வாரத்தில் நாள்பட்ட இருமலை குணப்படுத்த இத ட்ரை பண்ணுங்க!

எந்நேரமும் இருமல் வந்து கொண்டே இருந்தால், எந்த ஒரு செயலிலும் சரியாக ஈடுபட முடியாமல் போய், மிகுந்த அவஸ்தைக்கு உள்ளாக நேரிடும். சில நேரங்களில் மருந்து மாத்திரைகளாலும் இருமலைப் போக்க முடியாது. ஆனால் இப்படிப்பட்ட தொல்லை மிகுந்த நாள்பட்ட இருமலை ஓர் அற்புதமான இயற்கை வழியின் மூலம் வெளியேற்றலாம்.

அதுவும் முட்டைக்கோஸ் மற்றும் தேன் கொண்டு எளிய வழியில், எவ்வித சிரமமும் இல்லாமல் நாள்பட்ட இருமலுக்குக் காரணமான சளித் தேக்கத்தை வெளியேற்றலாம். இந்த முறைக்கு வயது வரம்பு கிடையாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இம்முறையைப் பின்பற்றலாம்.

தேவையான பொருட்கள்:

முட்டைக்கோஸ் – 1
தேன் – சிறிது
செய்முறை #1

முதலில் முட்டைக்கோஸின் இலைகளை தனியாகப் பிரித்து, கொதிக்கும் நீரில் சிறிது நேரம் ஊற வைத்து எடுக்க வேண்டும். இப்போது முட்டைக்கோஸின் இலைகள் சற்று வெதுவெதுப்பாகவும், மென்மையாகவும் இருக்கும்.

செய்முறை #2

பின்பு முட்டைக்கோஸ் இலையின் ஒரு புறத்தில் மட்டும் தேனைத் தடவி, மார்புப் பகுதியில் வைக்க வேண்டும். பின் ஒரு நைலான் துணியால் மார்பு பகுதியைச் சுற்றிக் கொள்ள வேண்டும். இச்செயலை இரவில் படுக்கும் முன் செய்ய வேண்டும்.

கடுமையான இருமல்

ஒருவேளை இருமல் மிகவும் கடுமையாக இருந்தால், அப்போது வேண்டுமானால் மார்பு பகுதியில் ஒரு லேயர் முட்டைக்கோஸையும், முதுகுப் பகுதியில் ஒரு லேயர் முட்டைக்கோஸ் இலையையும் விரித்து, கட்டிக் கொள்ளுங்கள்.

நீரால் கழுவவும்

மறுநாள் காலையில் முட்டைக்கோஸ் விரிப்பை எடுக்கும் போது, ஈரத்துணியால் துடைத்து எடுக்க வேண்டும் அல்லது அப்பகுதியை நீரால் கழுவ வேண்டும்.

குறிப்பு

மூச்சுக்குழாய் அழற்சியின் ஆரம்ப கட்டத்தில் இருந்தால், முதல் முறை முயற்சிக்கும் போதே நல்ல மாற்றம் தெரியும். அதுவே மூச்சுக்குழாய் அழற்சி சற்று முற்றிய நிலையில் இருந்தால், இந்த சிகிச்சையை தொடர்ந்து 5-7 நாட்கள் இரவில் பின்பற்ற வேண்டும். இதனால் நாள்பட்ட இருமல் பிரச்சனை முற்றிலும் குணமாகிவிடும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகொழுப்பைக் குறைக்க வெள்ளரிக்காயை இவற்றோடு சேர்த்து சாப்பிடுங்கள்!
Next articleயாழில் திருமண வீட்டில் நடந்த விபரீதம்! கத்திக்குத்துக்கு இலக்காகி இருவர் வைத்தியசாலையில்!