உடலில், கல்லீரலில் கொழுப்பு தாக்கி கல்லீரல் முழுவதையும் ஆக்கிரமித்து அலற்சியை ஏற்படுத்தி கல்லீரலின் செயல்பாட்டை பாதிக்கிறதன் மூலம் ஏற்படக் கூடிய கல்லீரல் நோயை ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்க வழக்கம் மூலம் சரி செய்ய முடியும்.
புளி எமது உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை நீக்கி சமிபாட்டுச் சக்தியை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிற வகையில் அதனை ஒரு ஆரோக்கியமான மருந்துப் பொருள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இதிலுள்ள நார்ச்சத்துகள் மற்றும் அன்சேச்சுரேட் கொழுப்புகள் ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்கின்றதுடன், இக்கொழுப்பு கல்லீரல் நோய்க்கும் சிறந்த மருந்தாக உள்ளது.
மேலும், புளியில் உள்ள பாதுகாப்பு மற்றும் நற்பண்புகள் கல்லீரல் செயல்பாட்டிற்கு உதவுகிறதுடன், பித்த நீர் குழாய்களுக்கு சிகச்சையளித்து பித்தபையை சுத்தப்படுத்தி கழிவுகளை வெளியேற்றுகிறது. இத்தகைய சுத்தப்படுத்தும் முறையால் கல்லீரலில் தங்கியுள்ள கொழுப்புகள் நீக்கப்பட்டு கொழுப்புகளின் அளவு குறைகின்றது. எனவே மறக்காமல் புளியை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
30 கிராம் புளியை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் ஊற போட்டு அத்தண்ணீரை தினமும் 3 கிளாஸ் குடித்து வாரும்போது நல்ல பலன் கிடைக்கும். இதனைவிட, தேசிக்காய் ஒரு சுத்தப்படுத்தியாக காணப்படுகின்ற வகையில் இந்த லெமன் சாற்றை தினமும் தண்ணீரில் கலந்து குடித்து வருவதன் மூலம் கல்லீரல் படியும் கொழுப்பை நீக்க முடியும்.
By: Tamilpiththan