வாய் ஓரங்களில் வீக்கம், சிவந்து காணப்படுதல் போன்றவை வாய்ப்புண் அழற்சியின் அறிகுறியாகும்.
இது வாயில் இருக்கும் உமிழ்நீர் வாயின் ஓரங்களில் தேங்கி பிளவுகளையும் புண்களையும் ஏற்படுத்துகிறது.
மேல் உதடு தொங்குபவர்கள், உதடு ஓரங்கள் ஆழமான கோணங்களை கொண்டு இருந்தால் இந்த பிரச்சினை உண்டாகும் எனப்படுகின்றது.
இது வந்தால் எரிச்சல், புண்கள் ஏற்படும். இரத்தம் கசிதல், பேட்ஜஸ், புண்கள், வலி, கொப்புளங்கள், அரிப்பு, சிவத்தல் போன்றவை ஏற்படும். வாய் வறண்டு போய் சாப்பிடக் கூட முடியாமல் போய்விடுகின்றது.
அந்தவகையில் இதிலிருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வீட்டு சிகிச்சை முறைகளை பயன்படுத்தினாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.
- நீர்ச்சத்துடன், ஈரப்பதத்துடன் உதடுகளை வைத்துக் கொள்ளுங்கள்.
- பெட்ரோலியம் ஜெல்லி அப்ளே செய்யுங்கள். சீக்கிரம் சரியாகி விடும்.
- வாயின் ஓரங்களில் லேசான மாய்ஸ்சரைசர் அப்ளே செய்யும் போது வறண்ட பகுதி சரியாகலாம்.
- ஒரு காட்டன் பஞ்சில் சிறுதளவு விளக்கெண்ணெய்யை நனைத்து கொள்ளுங்கள். அதை பாதிக்கப்பட்ட வாய்ப் பகுதியில் தடவி 1/2 மணி நேரம் கழித்து கழுவுங்கள்.
- கற்றாழை ஜெல்லை தனியாக எடுத்து பிரிட்ஜில் வைத்து இப்பொழுது இந்த ஜெல்லை 15-20 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள்.
- தூங்கப் போவதற்கு முன் யோகார்ட்டை எடுத்து வாயின் ஓரங்களில் தடவுங்கள். அடுத்த நாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
- பாதிக்கப்பட்ட இடத்தில் 15 நிமிடங்கள் இதை அப்ளே செய்யுங்கள். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
- ஒரு காட்டன் பஞ்சில் சிறுதளவு லிஸ்ட்ரைன் எடுத்துக் கொள்ளுங்கள். இதை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். 15-20 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள்.
- அடிக்கடி உதடுகளை எச்சியால் தடவுவதை தவிருங்கள்.
- டை மற்றும் நறுமணமான அழகு சாதனப் பொருட்களை உதடுகளில் அப்ளே செய்வதை தவிருங்கள். புண்கள் தீவிரமாக இருந்தால் ஸ்டீராய்டு க்ரீம்கள், ஆன்டி பயாடிக் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.