கேரளப் பெண்களின் கொள்ளை கொள்ளும் அழகிற்கு இதுதான் காரணமாம்!

0

பெண்களின் அழகு பராமரிப்புகள், கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் இதுபோன்ற விஷயங்களில் ஒவ்வொரு நாட்டிற்கும் பல வேறுபாடுகள் உண்டு.

அதிலும் மலையாள பெண்கள் என்றாலே அவர்களின் நீளமான கருமையான கூந்தல், அழகான கண்கள், மென்மையான மற்றும் பொலிவான சருமம், கொழுகொழுவென்று இருக்கும் கன்னங்கள் இவை அனைத்தும் தான் நம் நினைவுக்கு வருகிறது.

எனவே இவர்களின் இந்த சிறந்த அழகிற்கு, அவர்களின் அழகு பராமரிப்பு தான் முக்கிய காரணமாகும்.

மலையாள பெண்கள் அழகின் ரகசியங்கள்
கற்றாழை

மலையாள பெண்கள் எப்போதும் தங்களின் முகத்திற்கு, கெமிக்கல் கலந்த க்ரீம்களைப் பயன்படுத்த மாட்டார்கள். தினமும் குளிப்பதற்கு முன் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைப்பார்கள். இதனால் தான் அவர்களின் முகத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுத்தமாக உள்ளது.

மஞ்சள்

கேரளத்து பெண்களின் சரும மென்மையாக இருப்பதற்கு, காரணம், அவர்கள் தினமும் குளிக்கும் போது, மருத்துவ குணங்கள் அதிகம் வாய்ந்த மஞ்சளை தங்களின் உடல் முழுவதும் பூசிக் குளிப்பார்கள்.

தேங்காய் எண்ணெய்

தினமும் கேரளப் பெண்கள் தங்கள் தலைக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதுடன், தேங்காய் எண்ணெயை தலையில் வைத்து, ஷாம்பு போடாமல் வெறும் தலைக்கு குளிப்பார்கள். இதனால் அவர்களின் முடி பட்டுப்போன்று பொலிவாக இருக்கிறது.

கடலை மாவு

மலையாள பெண்கள் கடலை மாவு கொண்டு வாரம் ஒருமுறையாவது முகத்திற்கு போடுவார்கள். அதுவும் கடலை மாவை ரோஸ் வாட்டர் பயன்படுத்தி பேஸ்ட் செய்து பயன்படுத்துவார்கள். இதுவும் அவர்களின் சருமம் பிரச்சனையின்றி இருப்பதற்கு காரணமாக உள்ளது.

செம்பருத்தி

கேரளத்து பெண்களின் நீளமான கூந்தலின் முக்கியமான ரகசியம் அவர்கள் ஷாம்புவிற்கு பதிலாக செம்பருத்தி பூவை சீகைக்காயைப் போல அரைத்து தங்களின் கூந்தலுக்கு பயன்படுத்துவார்கள்.

சிவப்பு சந்தனம்

கேரளத்து பெண்களின் கொழுகொழு கன்னங்களுக்கு, தினமும் அவர்கள் இரவில் படுக்கும் போது, சிவப்பு நிறமுள்ள சந்தனக்கட்டையை நீர் பயன்படுத்தி தேய்த்து, முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவுவார்கள்.

கறிவேப்பிலை

கேரளத்து பெண்கள் தங்களின் தலையில் பொடுகு வராமல் தடுப்பதற்கு, தினமும் இரவில் படுக்கும் போது ஒரு கையளவு கறிவேப்பிலையை நீரில் ஊற வைத்து, பின் அந்த நீரைக் கொண்டு மறுநாள் காலையில் தங்களின் தலையை கழுவி வருவார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்று நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு!
Next articleஉங்க வாயில இப்படி புண் அழற்சி இருக்கா! இதனை எளிதில் தடுக்க இதோ சில வீட்டு வைத்தியங்கள்!