இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது அதிகமாக இருக்கின்றது என்று கவலைப்பட வேண்டாம் இதோ மிக எளிய வீட்டு வைத்திய முறை
இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவை நிலைப்படுத்த ஆளி விதைகள் உதவும். குறிப்பாக ஆளி விதைகளை உட்கொண்டு வந்தால் உணவிற்குப் பிற்பட்ட சர்க்கரை அளவு 28 சதவீதமாக குறையும்.
உணவில் 1 கிராம் அளவில் இலவங்கப்பட்டையை சேர்த்துக் கொண்டு ஒரு மாதத்திற்கு அதை உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்.
முருங்கை இலைகளில் உள்ள நார்ச்சத்து தெவிட்டான நிலையை அதிகரித்து உணவு உடைபடுவதை குறைக்கச் செய்யும்.
நாவல் பழ விதைகளின் பருப்பு சர்க்கரையை கட்டுப்படுத்தி சர்க்கரை நோய்க்கான அறிகுறியை பறந்தோட வைக்க உதவும் நாவல் பழ இலைகள். எனவே சர்க்கரை நோயாளிகள் நாவல் இலைகளை மெல்ல பரிந்துரைக்கப்படுகிறது.
பாகற்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்க உதவும். பாகற்காயை குழம்பில் மற்றும் சூப்களில் பயன்படுத்தலாம்.
சர்க்கரை நோய்க்கான சிகிச்சைக்கு கொழுந்து வேம்பு இலைகளை பயன்படுத்தலாம். அதிலிருந்து எடுக்கப்படும் சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகினால் சர்க்கரை நோய்க்கு நல்ல பலனை அளிக்கும்.
கருப்பு சீரகம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவுவதால், சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க இவற்றைப் பயன்படுத்தலாம்.
நாவல் பழ விதைகளில் உள்ள க்ளுகோசைட், ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றுவதை தடுக்கும். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும். மேலும் இன்சுலின் உயர்வை கட்டுப்பாட்டில் வைக்கும்.