நடிகர் விஜய் எடுத்த‌ திடீர் முடிவால் சோகத்தில் ரசிகர்கள்! காரணம் என்னவாக இருக்கும்!

0

விஜய் நடிப்பில் பலரது எதிர்பார்ப்பின் மத்தியில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து விட்ட நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடக்கவுள்ளது என்பது யாவரும் அறிந்ததே.

இந்நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்கள் யாரும் இசை வெளியீட்டு விழாவிற்கு வரவேண்டாம் என்று முடிவு எடுத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி விஜய் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இது தொடர்பாக விசாரித்த போது தனது ரசிகர்கள் தன்னை பார்க்க வந்து போலீஸாரிடம் அடி வாங்குவதை நான் விரும்பவில்லை என்று மனவருத்ததுடன் கூறியதாக தகவல்கள் தெரிவித்தனர்.

நடிகர் விஜய்யின் இந்த திடீர் முடிவு எதற்காக என்று விசாரித்த போது, தன்னை பார்க்க வரும் ரசிகர்கள் காவல் துறையினரிடம் அடி வாங்குவதை தன்னால் பார்க்க முடிவில்லை என்பதால் தான் தளபதி விஜய் இப்படிப்பட்ட ஒரு முடிவை எடுத்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.பொதுவாக அவரது படங்களின் இசை வெளியீட்டு விழா என்றாலே பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது.இதனால் தான் அவர் அவ்வாறு முடிவை வெளியிட்டுள்ளார் என்று பலரும் கூறி வருகின்றனர்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகண்ணை கவரும் கவர்ச்சி உடையில் பிக்பாஸ் நடிகை லாஸ்லியா! வைரலாகும் புகைப்படங்கள்!
Next articleஇன்றைய ராசி பலன் 05.03.2020 Today Rasi Palan 05-03-2020 Today Calendar Indraya Rasi Palan!