Venthayam வெந்தயம்
வெந்தயத்தின் பண்புகள் எவை: வெந்தயம் (Venthayam) சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன, தாய்ப்பால் சுரக்க உதவும் வெந்தயம் (Help The Mother To Secrete), மாதவிடாய் கால பிரச்சணைக்கு வெந்தயம் எவ்வாறு உதவுகிறது (Helpful During Menstruatioந்), வெந்தயம் மாதவிடாய் வலிகளை குறைக்கின்றது (Reduces Mentrual Paiந்), உடலில் அதிகரிக்கும் கொழுப்பை குறைக்கின்றது (Reduces Cholesterol), பெருங்குடல் புற்று நோயை தடுக்கும் (Colon Cancer-Venthayam), இருதய ஆபத்துக்களை குறைக்கிறது (Reduces The Cardiovascular Risk), பசியின்மையை நீக்குகின்றது (Helps Keep The Intestine Clean), சர்க்கரை நோய்க்கு சிறந்த தீர்வு (Good For Diabetes), மலச்சிக்கல் பிரச்சணையை நீக்குகிறது (Helpful For Constipation Problem), சிறுநீரக பிரச்சணைக்கு தீர்வு தரும் (Helful For Kidney Problems), தொண்டைப்புண்ணுக்கு நிவாரணம் தருகிறது (Venthayam Removes Ulcer), நெஞ்செரிச்சலை குறைக்கிறது (Helpful In Chest Allergies And Irritation).
வெந்தயத்தின் பக்க விளைவுகள்: (Side Effects Of Fenugreek (Venthayam): கர்ப்பிணி பெண்களுக்கு உகந்ததல்ல (Too Much Of Fenugreek Can Be Harmful During Pregnancy), ஒவ்வாமையை ஏற்படுத்தும் (Can Cause Allergies To Some People), குழந்தைகளுக்கு நல்லதல்ல (Not Good For Kidச்), சிலருக்கு வயிற்று போக்கு ஏற்படும் (Can Cause Diarrhea)
வெந்தயம் தொடர்பான கேள்விகள் Venthayam (FAQ’s): முளைகட்டிய வெந்தயம் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் எவை? தினமும் வெந்தயம் எவ்வளவு அளவு எடுத்துக்கொள்ளலாம்?, உடல் எடையை குறைக்க வெந்தயத்தை எவ்வாறு பயன்படுத்தலாம்?, வெந்தயம் ஒரு பாதுகாப்பான உணவா?, வெந்தயம் முகத்திற்கு நல்ல பொழிவை தருமா?, வெந்தயம் தாய் பால் சுரப்பை அதிகரிக்குமா?, வெந்தயம் தலை முடிக்கு ஏற்றதா? போன்ற கேள்விகளுக்கும் இந்த பதிவில் சிறந்த பதில் தரப்பட்டுள்ளது.
வெந்தயம் (மேத்தி) (Venthayam): பூ, காய், விதை, கீரை என எல்லாமே மருத்துவ குணம் கொண்டதாகவும், எண்ணற்ற சத்துக்கள் கொண்டதாகவும் உள்ள வெந்தயம் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியை தரக்கூடிய ஒரு பொருளாக காணப்படுவதுடன், வெந்தயச் செடியின் பூக்கள் தோன்றுவதற்கு முன்னர் செடியைப் பிடுங்கி எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து வெந்தயக் கீரையாகப் பயன்படுத்தும் அதேவேளை அன்றாட சமையலில் தாளிதப் பொருளாகவும் மாசாலாப் பொடிகள், மாசாலா கூழ் தயாரிப்பில் பிற வாசனைப் பொருட்களுடன் ஒருமுக்கிய அங்கமாகவும் ஊறுகாய் வகைகளுக்கு சுவையூட்டியாகவும் காணப்படுகின்றது.
வெந்தயமானது நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புசத்து, மாவுச்சத்து, சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் “ஏ” போன்றனவற்றையும் தன்னகத்தே கொண்டமைந்துள்ளது.
சகலவிதமான கார குழம்புகளிலும், காய்கறி பொரியல்களிலும் வாசனையை அதிகப் படுததவும், இட்லி, தோசை மாவு அரைக்க ஊற வைக்கும் அரிசி மற்றும் உளுந்தில் கூட எம்மால் சேர்க்கப்படும் வெந்தயத்திலுள்ள எண்ணை பசை தலைமுடிக்கு வளர்ச்சியையும் கருமை நிறத்தையும் வழங்குவதனால் கூந்தல் தைலங்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றது.
அதாவது, தேங்காய் எண்ணையில் வெந்தயம் மற்றும் கற்பூரத்தை போட்டு நன்கு ஊற வைத்து அல்லது பாலில் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தேய்த்து தலைகுளித்து வரும் போது கண் குளிர்ச்சியடைவதுடன், பேன், பொடுகு மற்றும் அரிப்பு, முடி உதிர்தல், தலைச்சூடு, தலை வழுக்கை, முடி மெல்லியதாக ஆகுதல் என்பனவும் நீங்கும்.
கைப்பிடி அளவு வெந்தயத்தை 300 மி.லி தேங்காய்எண்ணெயில் இட்டு கொதிக்க வைத்து எடுத்து வடிகட்டி இளஞ்சூட்டோடு தலைக்கு தேய்த்து நன்கு மசாஜ் செய்து அவ்வெண்ணெய் இரவு முழுதும் தலையில் ஊறும்படி வைத்திருந்து காலையில் குளித்து வரும் போது இளநரையைத் தடுத்து நிறுத்தும்.
ஒரு கரண்டி வெந்தயத்தை நன்கு ஊறவைத்து பின் உபயோகப்படுத்தும் போது நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணக் கோளாறுகளை நீக்குவதுடன், வயிறு மற்றும் குடல் புண்களை எளிதில் குணமடைவதுடன், அவ்வாறு முதல் நாள் இரவு ஊற வைத்த வெந்தயத்தை மறு நாள் காலையில் அரைத்து தலைமுடியின் அடிக்கால்களில் தடவி அரை மணிநேரம் கழித்து குளித்து வரும் போது பொடுகு மற்றும் முடி உதிர்வது குறைவடைவதுடன் தலைமுடியும் நன்கு அடர்ந்து வளரும்.
வெந்தயத்தில் தேவையானளவு பொட்டாசியம் காணப்படுவதனால் இரத்தத்தையும் இருதய துடிப்பையும் கட்டுக்குள் வைப்பதுடன், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை இரத்தில் குறைக்கிற அதேவேளை குழந்தை பெற்ற தாய்மார்கள் வெந்தயத்துடன் கருப்பட்டி சேர்த்து களி செய்து சாப்பிட்டுவருதல் அல்லது 5 கிராம் வெந்தயத்தை வேகவைத்துக் கடைந்து எடுத்து அத்தோடு போதிய தேன் சேர்த்துக் கொடுத்து வரும் போது தாய்ப்பால் அதிகம் ஊறுவதுடன், குழந்தை கொழு கொழு கொழுவென வளரும்.
வெந்தயம் மற்றும் பாசிப்பயறு என்பனவற்றை இரவு ஊற வைத்து காலையில் அரைத்து உடலில் தேய்த்து குளித்து வரும் போது கற்றாழை நாற்றம் நீங்குவதுடன், சிறிது வெந்தயத்தை மென்று தின்று இரண்டு சின்ன வெங்காயத்தை மோரில் அரிந்திட்டு சாப்பிட்டு வருவதன் மூலம் பருமனான உடல் எடை குறைவடைவதுடன், சிறிதளவான வெந்தயத்துடன் இரண்டு வெற்றிலை சேர்த்து நன்கு மென்று சாப்பிட்டு வரும் போது வயிற்று வலி மற்றும் வயிற்றுக் கடுப்பு என்பனவும் குணமடையும்.
மாதவிடாய நிற்கும் காலத்தில் ஏற்படக் கூடிய சகலவிதமான உடல் உபாதைகளிற்கும் வெந்தயம் நிவாரணம் அளிப்பதுடன், இரத்த அணுக்களின் உற்பத்தியை தூண்டி பெண்களுக்கு சாதாரணமாக ஏற்படும் இரும்புச்சத்து குறைபாட்டினையும் நீக்குகி இரத்த சோகையிலிருந்தும் விடுதலை வழங்குகின்றது.
வெந்தயத்தோடு தேன் சேர்த்து முகப்பருக்களின் மீது பூசி வைத்திருந்து இளஞ்சூடான நீரில் கழுவி விட முகப்பருக்கள் குணமடைவதுடன், 10 கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிது சோம்பு சேர்த்து அதனோடு உப்பும் சேர்த்து அரைத்து மோரில் கலந்து பருகி வரும் போது பேதி மற்றும் சீதபேதி என்பன குணமடையும்.
வெந்தயத்தில் அதிகமாக பைபர் இருப்பதனால் இருதயத்தை பலப்படுத்தி இருதயத்தில் ஏற்படும் பிர்சசணைகளை முற்றிலுமாக தடுப்பதுடன், சிறுநீரகக் கற்களைக் கரைத்து கற்கள் வராமல் தடுப்பதுடன், சிறுநீரைப் பெருக்கிக் கற்கள் உருவாகுவதனையும்; தடுக்கின்றது. மேலும், இதில்; நார்ச்சத்து மிகுதியாக இருப்பதனால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வினைத் தோற்றுவித்து அடிக்கடி பசியெடுப்பதனைக் குறைத்து உணவு உட்கொள்ளும் அளவினையும் குறைத்து உடல் எடை குறைய ஏதுவாகின்றது.
வெந்தயம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதாக அதிலும் காலையில் தினமும் வெறும் வயிற்றில் வெந்தய பொடியை நீரில் கலந்து குடித்தால், இன்னும் நல்ல பலன் தெரியும் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளதனால் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் முளைக்கட்டிய வெந்தயத்தை உட்கொண்டு வந்தால், வெந்தயத்தில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் காரணமாக உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதய பிரச்சனைகள் வரும் அபாயமும் குறையும் அதேவேளை வெந்தயத்தில் உள்ள Phytorstrogens மார்பக திசுக்களின் பெருக்கத்திற்கு உதவி செய்து சரியான மார்பக வளர்ச்சிக்கும் பெண்களின் ஹார்மோன்களின் செயல்பாட்டை தூண்டி மாதவிடாய் சுழற்சி சரியான முறையில் நடைபெறவும் உதவுகின்றன.
வெந்தயத்தில் இரும்புச் சத்து இருப்பதால் இரத்த விருத்தி ஏற்படுவதுடன், அடிக்கடி உணவில் சேர்ததுக் கொள்ளும் போது மலச்சிக்கல் வராது. மேலும், பாலுணர்வைத் தூண்டக் கூடிய வெந்தயத்தை ஆண்கள் உட்கொண்டு வரும் போது டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரித்து, நீண்ட நேரம் உறவில் இன்பத்தை அனுபவிக்க முடிவதுடன், விறைப்புத்தன்மை பிரச்சனை மற்றும் விரைவில் விந்து வெளியேறும் பிரச்சனை உள்ள ஆண்கள் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால், பிறப்புறுப்பில் இரத்தம் ஓட்டம் அதிகரித்து, பிரச்சனைகள் நீங்கும்.
முளைக்கட்டிய வெந்தயத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளதனால் ப்ரீ-ராடிக்கல்களால் உடலில் உள்ள செல்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, குறிப்பிட்ட புற்றுநோய்கள் வருவது தடுக்கப்படுவதுடன், பிரசவம் முடிந்த பெண்கள் முளைக்கட்டிய வெந்தயத்தை உட்கொண்டால் பாலூட்டும் தாய்மார்களின் பால் சுரப்பத் தன்மை அதிகரிக்கும்.
ஒரு கைப்பிடி அளவு வெந்தயத்துடன் 4 கப் நீர் கலந்து அடுப்பிலிட்டு 15 நிமிடங்கள் காய்ச்சி ஆறவைத்து வடிகட்டி அதனைக் கொண்டு தினம் இரண்டு முறை முகத்தைக் கழுவிவருதல் அல்லது வெந்தயக்கீரையை அரைத்து முகத்தில் அரை மணி நேரம் தடவுதலின் மூலம் போது முகத்துக்கு நல்ல வனப்பும், மெருகேற்றப்பட்ட முகப்பொலிவும், கரும்புள்ளிகள், முகப்பருக்கள், சுருக்கங்கள் சுருக்கங்கள் அற்ற நல்ல மென்மையும் பொன் வண்ணமும் கிடைக்கும்.
வயிற்று கடுப்பு தீருவதற்கு வெந்தயத்தை வறுத்து, நீர் விட்டு காய்த்து தேன் சேர்த்து சாப்பிடுவதுடன், திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடியாக்கி மோரில் கலந்து குடித்தல் சிறந்த பலனளிப்பதுடன், சீதபேதிக்கு 20 கிராம் வெந்தயத்தை வறுத்து, இடித்து 50 கிராம் வெல்லம் சேர்த்து பிசைந்து நாள் ஒன்றுக்கு நான்குமுறை சாப்பிடுதல் அல்லது சிறிதளவு வெந்தயத்தை மோரில் ஊறவைத்து அரைத்து, மோரில் கலக்கி குடித்தல் நல்லது. மேலும் வெந்தயத்தில் உடல் எடையைக் குறைக்கும் திறன் உள்ளதனால் இதனை சாப்பிடும் போது இதிலுள்ள் நார்ச்சத்து வயிற்றை நிரப்பி, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து, உடல் எடை குறைய உதவும்.
நீரழிவு நோயாளர்களுக்கு ஒரு அருமையான மருந்தாக கொள்ளப்படக் கூடிய வெந்தயத்திலுள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் இன்சுலின் சுரப்பதற்கு தேவையான அமினோ அமிலங்கள் இன்சுலினை போதிய அளவு சுரக்கச் செய்து நம் உடலின் சர்க்கரை அளவை ஏற்றத்தாழ்வு இல்லாமல் பேணுவதுடன், தினமும் இரவு சிறிதளவான வெந்தய விதையை ஊற வைத்து, மறுநாள் காலையில் மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகி வரும் போது, ஆரம்ப நிலை நீரழிவு நோய் குணமடைவதுடன் மத்திய மற்றும் முற்றிய நிலை நீரழிவு நோய்கள் கூட கட்டுக்குள் இருக்கும்.
வெந்தயத்தில் வைட்டமின் ‘ஈ’ நிறைந்திருப்பதனால் ஊறுகாய் தயாரிக்கும் போது கெட்டுப் போகாது பாதுகாக்கும் பொருளாக அதனுடன் சேர்க்கப்படுகிறதுடன், வெந்தயம், எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் கலந்து தயாரிக்கும் தேநீர் பன்னெடுங்காலமாக காய்ச்சலைத் தணிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
வெந்தயக் கீரையைக் கொண்டு அவ்வப்போது தயாரிக்கும் பசையைக் கொண்டு தலைக்குத் தேய்த்து 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளிக்கும் போது தலைமுடி செழுமையாக வளரவும், தலைமுடி நல்ல வண்ணத்தைப் பெறவும், பொடுகுத் தொல்லை ஒழியவும் செய்கிறது.
நெஞ்சு எரிச்சல் மற்றும் ஒவ்வாமை என்பன நீங்குவதற்கு வெந்தயத்தை ஊற வைத்த தண்ணீரை குடிபபதுடன் தொண்டையில் புண்ணால் ஏற்பட்ட இடங்களில் வெந்தய தண்ணீர் படும் போது நல்ல இதமாக இருப்பதுடன் உடல் சூட்டை தணித்து குளிச்சி அளிக்கின்றது.
வெந்தயம் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன் குறிப்பாக கல்லீரலில் இரத்தத்தை சுத்தப்படுத்தி, உடல் முழுவதும் இரத்தம் சீராக பாய உதவி புரிவதுடன் வெந்தயத்தை ஊற வைத்து. மையாக அரைத்து தீக்காயத்தின் மீது பூசி வந்தால் தீப்புண் விரைவில் குணமாகும்.
வெந்தயத்தை மாவாக்கி, இனிப்பு சேர்த்து களி போல கிளறி சாப்பிட்டு வருவதன் மூலம் பல்வேறுபட்ட நோய்களிலிருந்து விடுபட முடிவதுடன், உடல் சூட்டையும் கட்டுப்படுத்தும்.
ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து பருக்கள் உள்ள இடத்தில் பூசும் போது பரு மறைவதுடன், காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடிக்கும் போது உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் தணித்து வறட்சியகற்றி குளிர்ச்சியடைவதோடு சிறுநீரை பெருக்கி இதிலுள்ள துவர்ப்புத் தன்மை காரணமாக விதையிலுள்ள ஆல்கலாய்டுகள் பசியைக் கூட்டுவதுடன் நரம்புகளையும் பலப்படுத்தும். வெந்தயப் பொடியை லேசாக வறுத்து காலை மாலை என இருவேளையும் ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வரும் போது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்.
வயிற்றுப் போக்கு தீருவதற்கு இரவில் வெந்தயத்தை தயிரில் ஊற வைத்து, காலையில் அரைத்து சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிடுவதுடன், கணைச்சூடு தீருவதற்கு 20 கிராம் வெந்தயம் 50 கிராம் வெங்காயம் ஆகிய இரண்டையும் அரை லிட்டர் விளக்கெண்ணையில் காய்ச்சி வடிகட்டி, பாலில் அரை கரண்டி எண்ணெய் விட்டு காலையில் இருபது நாட்கள் குடித்து வருதல் வேண்டும்.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்று வலி, இடுப்பு வலி நீங்குவதற்கு 100 கிராம் வெந்தயத்தை வறுத்து, பொடியாக்கி, 200 கிராம் சர்க்கரை சேர்த்து உண்ணுதல் அல்லது வெந்தயத்தை கஷாயமாக்கி குடித்து வருவதுடன், உடல் பலம் பெற்று ஆரோக்கியம் பெருகுவதற்கு 200 கிராம் வெந்தயத்தை பாலில் ஊற வைத்து, மீண்டும் இளநீரில் ஊற வைத்து, உலர்த்தி பொடியாக்கி, கற்கண்டை சேர்த்து, 40 நாட்கள் காலை உணவுக்குப் பின்னர் ஒரு கரண்டி சாப்பிட்டு சுடுநீர் அல்லது பால் சாப்பிட்டு வருதல் வேண்டும்.
செரிமான பிரச்சனை உள்ளவர்கள், வெந்தயத்தை இரவில் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரைக் குடித்து வந்தாலோ அல்லது காலையில் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடித்து வந்தாலோ, செரிமான பிரச்சனைகள், தொண்டையில் ஏற்படும் அல்சர், புண், வலி மற்றும் கொப்பளங்கள் போன்றவை நீங்குவதுடன், இருமல் மற்றம் தொண்டை கரகரப்பிலிந்து நல்ல நிவாரணமளின்கின்றது.
கரையும் நார்ச்சத்து கொண்ட வெந்தயத் தினை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரும் போது மலச்சிக்கல் பிரச்சனை நீங்குவதுடன், சிறுநீரக கற்களால் ஏற்படக் கூடிய கடுமையான வலியை மற்றும்; சிறுநீரகத்தில் சேரும் நச்சுக்கள் என்பன முற்றிலும் வெளியேற்றப்படும்.
வெந்தயத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் கருப்பையின் சுருங்கி விரியும் தன்மை பலப்படுவதுடன் பிரசவத்தின்போது குழந்தைப் பிறப்பும் துரிதப்படுத்துவதுடன், பெண்களின் ஹார்மோன் சுரப்பிகள் சரியான நிலையில் செயல்படுவதோடு மார்பகங்களும் வனப்புற விளங்கும்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வெந்தயத்தை பொடி செய்து தேநீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம் அல்லது வெந்தயத்தை பழங்களுடன் சேர்த்து சாப்பிடலாம். இரண்டு அவுன்ஸ் அளவு வெந்தயத்தை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வதால் கெட்ட கொழுப்பு சத்தான எல்.டி.எல். கொலஸ்ட்ரால் குறைவதுடன், வெந்தயத்தில் இருக்கும் அபரிமிதமான பொட்டாசியம் சத்து ரத்தத்தில் சேரும் உப்புச்சத்தை மாற்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
வாயுத் தொல்லை மற்றும் பொருமலிலிருந்து விடுபடுவதற்கு ஒரு டம்ளர் மோரில் சிறிதளவான வெந்தயம் மற்றும் சீரகம் பொடித்திட்டு குடித்தலும், மோரில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் உண்ணுதல் சிறந்த மருந்தாக காணப்படுவதுடன், சளி நீக்கவும், மூல நோய் தீர்க்கவும் எண்ணையாக, கரைப்பானாக, லேகியமாக, பொடியாக பயன்படுத்தப்படுகின்றது.
கல்லீரல் கோளாறுகள் நீங்குவதற்கு வெந்தயத்தை எலுமிச்சைச் சாறுடன் சேர்த்து மையமாக அரைத்து காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வருவதுடன், சிறுநீர் தாராளமாகப் பிரிவதற்கு வெட்டிவேர், வெந்தயம் மற்றும் சீரகம் என்பன சேர்த்துக் கஷாயம் செய்து ஆறியதும் குடித்துவருதல் சிறந்த பலனளிக்கும்.
கோடை காலத்தில் கடுமையான வெம்மை தாக்காதிருக்க காலையில் சிறிது வெந்தயத்தை மென்ற தின்று ஒரு டம்ளர் நீராகாரம் பருகி வருவதுடன், ஒரு துண்டு இஞ்சியுடன் கொஞ்சம் வெந்தயம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் விலகும். மேலும், சீதபேதி குணமடைவதற்கு வெந்தயத்தை செவ்வாழைப் பழத்திற்குள் வைத்து மூடி இரவு பனியில் வைத்து காலையில் மூன்று நாட்கள் சாப்பிட்டு வருவதுடன், சீதபேதி கடுப்பு தீருவதற்கு வெந்தயத்தை இளநீரில் ஊற வைத்து அரைத்து குடித்தல் சிறந்த பலனளிக்கும்.
சிறுநீரகத்தில் கற்கள் மற்றும் தொடர்ந்து எரிச்சல் உணர்வு என்பனவற்றின் போது வெந்தயத்தை முதல் நாள் வெது வெதுப்பான நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வருவதுடன், ‘எக்ஸிமா’ எனப்படும் தோல் நோய், தீப்புண்கள், சீழ் பிடித்த கட்டிகள் மற்றும் மூட்டுகளில் வாதநீர் கோர்த்து வீக்கம் கண்டு வலித்தல் என்பனவற்றிற்கு வெந்தயத்தை அரைத்து மேற்பூச்சாகப் பூசுவதால்; வேண்டும். மேலும், தீப்பட்ட புண்களின் மீது வெந்தயத்தை அரைத்து மேற்பூச்சாக பூசி வரும் போது விரைவில் புண்கள் ஆறுவதுடன் வடுக்களும் தோன்றாது.
வெந்தயத்தை இரவு முழுதும் நீர் விட்டு ஊறவைத்து, காலையில் மைய அரைத்து வைத்துக் கொண்டு அதனோடு சிறிது தயிர் சேர்த்து நன்கு குழைத்து தலை முடிக்கும் தலையின் மேற்புறத்தும் தடவி நன்றாக மசாஜ் செய்து வைத்திருந்து 20 நிமிடங்களுக்குப் பிறகு தலைக்குக் குளிக்க பொடுகுகள் நீங்குவதுடன் அரைத்த வெந்தயத்தை முகத்துக்குத் தடவி சிறிது நேரத்தின் பின்னர் குளிக்கும் போது முகத்தில் உள்ள மருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் மறைந்து போவதுடன் முகப்பருக்களும் குணமாகும்.
வெந்தயத்தின் பக்க விளைவுகள் (Side Effects Of Fenugreek – Venthayam)
வெந்தயத்தை தேவைக்கு ஏற்றாற் போல தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது அதன் மூலம் எந்தவொரு பிரச்சணையும் ஏற்படுவதில்லையெனினும் தேவையை விட அதிகமாக எடுத்துக் கொண்டால் பிரச்சனை ஏற்படுவது உறுதி. அந்தவகையில் ஏற்படக் கூடிய பிரச்சினைகளாக,
- பெண்களின் கர்ப்பப்பையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சப்போனின் என்னும் வேதிப்பொருள் வெந்தயத்தில் அதிக அளவு காணப்படுவதால் கர்ப்பிணி பெண்களிற்கு இது மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்ததும்.
- பட்டாணி, கடலை மற்றும் சோயா போன்றவை அலர்ஜிகளை ஏற்படுத்தக் கூய உணவுப் பொருட்களாக உள்ளவர்கள் வெந்தயம் சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்த்தல் அவசியம்.
- கர்ப்பிணி பெண்கள் வெந்தயத்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் கர்ப்ப பை சுருக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதனால் கர்ப்ப காலத்தில் சூட்டு வலி ஏற்படும் போது மட்டும் சிறிது வெந்தயம் எடுத்துக்கொண்டால் போதும்.
- வெந்தயத்தால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டவுடன் உடலில் இருந்து ஒருவித நாற்றம் வெளிப்படுவதனால் அதிகளவு வெந்தயம் சாப்பிடுவதை குறைத்து கொள்வது நல்லது.
- தொடர்ந்து வெந்தயத்தை எடுத்துக் கொள்வதால் சிலருக்கு வாந்தி, மயக்கம், குமட்டல் மற்றும் அரிப்பு போன்ற ஒவ்வாமை விளைவுகள் ஏற்படலாம்.
- சர்க்கரை நோய்க்காக மருந்து சாப்பிடுபவர்கள் மாத்திரைகளுடன் சேர்த்து வெந்தயமும் சாப்பிடும் போது உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறைக்கப்படுவதனால் வெந்தயம் உட்கொள்ளும் முன் மருத்துவருடன் ஆலோசிப்பது நல்லது.
- தொடர் வெந்தயத்தை எடுப்பதால் சிலருக்கு அதிகளவான குளிர்ச்சி மற்றும் குடல் அலர்ஜியால் வயிற்று போக்கு மற்றும் சலதோஷம் ஏற்பட கூடிய வாய்ப்பு உள்ளதனால் தினமும் வெந்தயம் (Venthayam) எடுத்துக்கொள்ள நினைப்பவர்கள் 30 முதல் 35 அளவில் எடுத்துக்கொள்ளலாம்.
- பெண்கள் அதிக அளவில் வெந்தயத்தை எடுத்து கொள்ளும் போது அவர்களுக்கு வாந்தி மற்றும் குமட்டல் என்பன ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளதனால் தினமும் 2 முதல் 5 கிராம் வரை இரு முறை வெந்தயத்தை எடுத்து கொள்வது நல்லது.
- பெண்கள் வெந்தயத்தை 100 கிராமை விட அதிகமாக ஒரே நேரத்தில் எடுத்து கொண்டால் வயிற்றுப்போக்கு மற்றும் அஜீரணம் போன்ற வயிற்று உபாதைகள் ஏற்படும்.
- வெந்தயத்திலுள்ள அதிகளவான குளிர்ச்சி காரணமாக சின்ன குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி மற்றும் வாந்தி போன்றன ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதனாலும் சில குழந்தைகள் வெந்தயத்தை மெல்லாமல் அப்படியே சாப்பிடுவதனாலும் சமிபாட்டுப் பிரச்சிணை ஏற்படலாம்.
- மருந்து மாத்திரை எடுப்பவர்கள் மருத்துவரின் ஆலோசணை இன்றி வெந்தயத்தை பயன்படுத்தும் போது பக்க விளைவுகள் ஏற்படலாம்.
- சில பக்க விளைவுகள் இருந்தாலும் வெந்தயம் ஒரு சிறந்த மருந்து பொருளாகவும் ஆரோக்கியமான உணவாகவும் காணப்படுவதனால் மருத்துவரின் ஆலோசணையை பெற்று அதனைப் பயன்படுத்துவது நல்லது.
முளை கட்டிய வெந்தயம் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் !
வெந்தயத்தின் சாதரண விதைகளை விட அவற்றை முளைகட்டிச் சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கிறது. முதல் நாள் இரவில் ஒரு ஈரத் துணியில் வெந்தயத்தை போட்டு கட்டி வைத்துவிட வேண்டும். மறு நாள் காலையில் எடுத்துப் பார்த்தால் வெந்தயத்தில் முளைவிட்டிருக்கும். இவற்றை அப்படியே கூட எடுத்துச்சாப்பிடலாம். இதனால் ஏராளமான நன்மைகள் நமது உடலுக்கு கிடைக்கிறது.
முளைகட்டிய வெந்தயத்தில் (Venthayam) அதிகப்படியான விட்டமின் சி,ப்ரோட்டீன்,நியாசின்,பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் ஆல்கலாய்ட்ஸ் போன்றன நிறைந்திருக்கிறது. அதோடு ஈஸ்ட்ரோஜனாக கருதப்படும் டயோஸ்ஜெனினும் அதிகமாக காணப்படுகிறது.
குறிப்பாக எத்தகைய உடல் வாகு கொண்டவராக இருந்தாலும் ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூனுக்கு மேல் சாப்பிடுவதை தவிர்க்கவும். முளைகட்டிய வெந்தயத்தை காலை உணவுக்கு முன்பாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது. முளைகட்டிய வெந்தயத்தில் அவ்வளவாக கசப்புத் தெரியாது. அதன் சிறிது கசப்பு சுவையும் உங்களுக்கு பிடிக்காவிட்டால் உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம்.
முளைகட்டிய வெந்தயத்தை (Venthayam) குறைந்தது ஒரு மாதம் வரை எடுத்துக் கொண்டால் மட்டுமே சிறந்த பலனை எதிர்ப்பார்க்க முடியும். நீங்கள் உண்ணும் உணவுகளில் ஏதேனும் ஒவ்வாமை இருந்தாலோ அல்லது வேறு எதாவது நாள்ப்பட்ட நோய்க்கு மருந்து எடுத்துக் கொண்டிருந்தாலோ மருத்துவரில் ஆலோசனையை பெறுவது அவசியம்.
மேலும் வாசிக்க: Millet Benefits சிறுதானிய பயன்கள்
Patti Vaithiyam in Tamil with the all maruththuva Kurippukkal: Siddar Maruththuvam, Paati Vaithiyam Tamil Maruththuvam
Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)
By: Tamilpiththan