இன்றைய ராசி பலன் 30.03.2021 Today Rasi Palan 30-03-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

இன்று 30-03-2021 பங்குனி மாதம் 17ம் நாள் செவ்வாய்க்கிழமை ஆகும். துதியை திதி மாலை 05.27 வரை பின்பு தேய்பிறை திரிதியை. சித்திரை நட்சத்திரம் பகல் 12.21 வரை பின்பு சுவாதி. இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. இன்று முருக வழிபாடு நல்லது.

இராகு காலம்: மதியம் 03.00-04.30, எம கண்டம்: காலை 09.00-10.30, குளிகன்: மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள்: காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

மேஷம் ராசி: இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும். பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

ரிஷபம் ராசி: இன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி தரும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மிதுனம் ராசி: இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது உத்தமம். உடன் பிறந்தவர்கள் இன்று உறுதுனையாக இருப்பார்கள்.

கடகம் ராசி: இன்று உங்களுக்கு வீண் மனக்குழப்பங்கள் உண்டாகலாம். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் சற்றே குறையும்.

சிம்மம் ராசி: இன்று உங்களுக்கு மன அமைதியும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிலவும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கன்னி ராசி: இன்று நீங்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணிமாற்றம், இடமாற்றம் பற்றி யோசிப்பார்கள். சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடையலாம். வியாபாரத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சி வெற்றி தரும்.

துலாம் ராசி: இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திழதுழழந்ந்ருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.

விருச்சிகம் ராசி: இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தினருடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க வேண்டிய நிலை வரும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் உதவியால் வியாபார ரீதியான பிரச்சினைகள் தீரும்.

தனுசு ராசி: இன்று உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எந்த விஷயத்திலும் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

மகரம் ராசி: இன்று உங்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் விலகி சுறுசுறுப்பாக இருப்பீர்கள். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடைபெறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். கடன்கள் ஓரளவு குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் பணிச்சுமை குறையும்.

கும்பம் ராசி: இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனம் தேவை. சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

மீனம் ராசி: இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். பயணங்களில் கவனம் தேவை.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசுதந்திரம் Suthanthiram Sudhandhiram Tamilpiththan kavithai-29 Tamil Kavithaigal
Next articleஇன்றைய ராசி பலன் 01.04.2021 Today Rasi Palan 01-04-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!