இன்றைய ராசி பலன் 29.09.2022 Today Rasi Palan 29-09-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

இன்று 29-09-2022 புரட்டாசி மாதம் 12ம் நாள் வியாழக்கிழமை ஆகும். இன்று சதுர்த்தி திதி இரவு 12.09 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. இன்று விசாகம் நட்சத்திரம் பின்இரவு 05.13 வரை பின்பு அனுஷம். இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம் ஆகும். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. இன்று மாத சதுர்த்தி விரதம். இன்றூ விநாயகர் வழிபாடு நல்லது.

இராகு காலம்: மதியம் 01.30-03.00, எம கண்டம்: காலை 06.00-07.30, குளிகன்: காலை 09.00-10.30, சுப ஹோரைகள்: காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

மேஷம் ராசிக்காரர்களே:

இன்று பிள்ளைகளால் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவார்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் மேலோங்கும்.

ரிஷபம் ராசிக்காரர்களே:

இன்று நீங்கள் சுபசெலவுகள் செய்ய நேரிடும். திருமண முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். சேமிக்கும் அளவிற்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.

மிதுனம் ராசிக்காரர்களே:

இன்று எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள்.

கடகம் ராசிக்காரர்களே:

இன்று தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பணவரவுகள் சிறப்பாக அமையும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.

சிம்மம் ராசிக்காரர்களே:

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் சந்தோஷம் கூடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். வருமானம் பெருகும். பொன் பொருள் சேரும்.

கன்னி ராசிக்காரர்களே:

இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். தெய்வ தரிசனம் நிம்மதியை தரும்.

துலாம் ராசிக்காரர்களே:

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும்.

விருச்சிகம் ராசிக்காரர்களே:

இன்று வியாபாரத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வகையில் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் அவர்களின் ஆதரவை பெறலாம். சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது.

தனுசு ராசிக்காரர்களே:

இன்று உங்களுக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

மகரம் ராசிக்காரர்களே:

இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். வேலையில் உங்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும்.

கும்பம் ராசிக்காரர்களே:

இன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் உறவினர்களால் டென்ஷன் உண்டாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் சக தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மீனம் ராசிக்காரர்களே:

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களையும், புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும்.

Previous articleNovember 13 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 13
Next articleNovember 14 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 14