November 14 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 14

0

Today Special Historical Events In Tamil | 14-11 | November 14

November 14 Today Special | November 14 What Happened Today In History. November 14 Today Whose Birthday (born) | November-14th Important Famous Deaths In History On This Day 14/11 | Today Events In History November 14th | Today Important Incident In History | கார்த்திகை 14 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 14-11 | கார்த்திகை மாதம் 14ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 14.11 Varalatril Indru Nadanthathu Enna| November 14 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 14/11 | Famous People Born Today 14.11 | Famous People died Today 14-11.

Today Special in Tamil 14-11
Today Events in Tamil 14-11
Famous People Born Today 14-11
Famous People died Today 14-11

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 14-11 | November 14

உலக நீரிழிவு நாளாக கொண்டாடப்படுகிறது.
குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது. (இந்தியா)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 14-11 | November 14

1579ல் “கிறித்தவ சமயப் போதனை” என்ற நூல் போர்த்துக்கீசிய யூதர் என்றிக்கே என்றிக்கசினால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.
1708ல் கொழும்பு மதப்பள்ளி ஒல்லாந்தரினால் ஆரம்பிக்கப்பட்டது.
1751ல் இரண்டாம் கர்நாடகப் போர்: பிரித்தானியா-பிரான்சுக்கிடையில் ஆற்காடு சண்டை முடிவுக்கு வந்தது.
1862ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் கூட்டமைப்பின் தலைநகர் ரிச்மண்டைக் கைப்பற்றும் இராணுவத் தளபதி அம்புரோசு பர்ன்சைடின் யோசனையை அங்கீகரித்தார்.
1886ல் பிரீட்ரிக் சொன்னெக்கென் என்பவர் முதல்தடவையாக காகித துளை கருவியை வடிவமைத்தார்.
1889ல் நெல்லி பிளை என்ற பெண் ஊடகவியலாளர் 80 நாட்களுக்குள் உலகைச் சுற்றி வரும் தனது திட்டத்தை 72 நாட்களுக்குள் வெற்றிகரமாக முடித்தார்.
1918ல் செக்கோசிலோவாக்கியா குடியரசாகியது.
1922ல் பிபிசி தனது வானொலி சேவையை ஐக்கிய இராச்சியத்தில் தொடக்கியது.
1940ல் இரண்டாம் உலகப் போர்: இங்கிலாந்தில் கவெண்ட்ரி நகரம் செருமனியரின் குண்டுவீச்சில் பலத்த சேதமடைந்தது. கவெண்ட்ரி தேவாலயம் முற்றாக அழிந்தது.
1941ல் இரண்டாம் உலகப் போர்: வானூர்தி தாங்கிக் கப்பல் ஆர்க் ரோயல் மூழ்கியது.
1941ல் இரண்டாம் உலகப் போர்: பெலருசில் செருமனியப் படையினர் பர்பரோசா நடவடிக்கையில் ஈடுபட்டு ஒரே நாளில் 9,000 யூதர்களைக் கொன்றனர்.
1943ல் இந்திய-இலங்கை விரைவுத் தொடருந்து சென்னையில் இருந்து 100 மைல் தூரத்தில் சேந்தனூர் என்ற இடத்தில் தடம் புரண்டதில் 30 பேர் வரை உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
1963ல் ஐசுலாந்து தீவின் அருகில் உள்ள சூர்ட்சி என்னும் தீவு வட அட்லாண்டிக் கடலில் எழுந்த எரிமலையால் புதிதாகத் தோன்றியது.
1965ல் வியட்நாம் போர்: லா ட்ராங் என்ற இடத்தில் அமெரிக்கப் படைகளுக்கும் வடக்கு வியட்நாம் படைகளுக்கும் இடையில் பெரும் போர் வெடித்தது.
1967ல் அமெரிக்க இயற்பியலாளர் தியோடோர் மைமான் உலகின் முதலாவது லேசருக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
1969ல் அப்பல்லோ திட்டம்: நாசாவின் அப்பல்லோ 12 விண்கலம் மூன்று விண்வெளி வீரர்களுடன் சந்திரனை நோக்கிச் சென்றது.
1970ல் சோவியத் ஒன்றியம் பன்னாட்டு குடிசார் வான்பயண அமைப்பில் இணைந்தது.
1970ல் மேற்கு வர்ஜீனியாவில் அமெரிக்க விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் மார்சல் பல்கலைக்கழக காற்பந்தாட்ட அணியினர் உட்பட 75 பேர் உயிரிழந்தனர்.
1971ல் மரைனர் 9 செவ்வாய் கோளை சென்றடைந்தது. இதுவே பூமியில் இருந்து வேறொரு கோளின் செயற்கைச் செய்மதியாகச் செயற்பட்ட முதலாவது விண்கலமாகும்.
1973ல் கிரேக்க இராணுவ ஆட்சிக்கு (1667-74) எதிரான பெரும் ஆர்ப்பாட்டம் கிரேக்கத்தில் ஆரம்பமானது.
1975ல் மேற்கு சகாராவை விட்டு எசுப்பானியா விலகியது.
1978ல் பிரான்சு ஆப்ரோடைட்டு என்ற அணுவாயுத சோதனையை நிகழ்த்தியது.
1982ல் போலந்தின் சொலிடாரிட்டி தொழிற்சங்கத் தலைவர் லேக் வலேசா 11 மாதங்கள் சிறையில் இருந்த பின்னர் விடுவிக்கப்பட்டார்.
1990ல் கிழக்கு செருமனி மற்றும் மேற்கு செருமனிகளின் இணைப்பிற்குப் பின்னர் போலந்துக்கும் செருமனிக்கும் இடையிலான எல்லைகள் வரையறுக்கப்பட்டன.
1991ல் நாடு கடந்த நிலையில் வாழ்ந்த கம்போடியாவின் இளவரசர் நொரடோம் சீயனூக் 13 ஆண்டுகளின் பின்னர் நோம் பென் திரும்பினார்.
1996ல் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
2001ல் ஆப்கானித்தானின் தலைநகர் காபூலை ஆப்கான் வடக்குக் கூட்டணிப் படைகள் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன.
2003ல் 90377 செட்னா என்ற திரான்சு-நெப்டியூனிய வான்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
2016ல் நியூசிலாந்தில் கைக்கோரா என்ற இடத்தில் 7.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் இருவர் உயிரிழந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 14-11 | November 14

1650ல் இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து மற்றும் அயர்லாந்து மன்னரான‌ மூன்றாம் வில்லியம் பிறந்த நாள். (இறப்பு-1702)
1765ல் நீராவிக் கப்பலைக் கண்டுபிடித்த அமெரிக்கப் பொறியியலாளரான‌ ராபர்ட் ஃபுல்டன் பிறந்த நாள். (இறப்பு-1815)
1840ல் பிரான்சிய ஓவியரான‌ கிளாடு மோனெ பிறந்த நாள். (இறப்பு-1926)
1889ல் இந்தியாவின் 1வது பிரதமரான‌ ஜவகர்லால் நேரு பிறந்த நாள். (இறப்பு-1964)
1891ல் இந்திய தாவரவியலாளரான‌ பீர்பால் சகானி பிறந்த நாள். (இறப்பு-1949)
1907ல் சுவீடிய எழுத்தாளரான‌ ஆஸ்ட்ரிட் லிண்ட்கிரென் பிறந்த நாள். (இறப்பு-2002)
1917ல் தென்கொரியாவின் 3-வது அரசுத்தலைவரான‌ பார்க் சுங்-கீ பிறந்த நாள். (இறப்பு-1979)
1922ல் தமிழக எழுத்தாளரும் இதழாசிரியரும் அரசியல்வாதியுமான‌ தி. கோ. சீனிவாசன் பிறந்த நாள். (இறப்பு-1989)
1922ல் ஐநாவின் 6வது பொதுச் செயலரான‌ புத்துருசு புத்துருசு காலீ பிறந்த நாள். (இறப்பு-2016)
1924ல் மலையாள சிறுகதை மற்றும் புதின எழுத்தாளரான‌ பாறப்புறத்து பிறந்த நாள். (இறப்பு-1981)
1926ல் இந்திய அரசியல்வாதியான‌ பிலு மோடி பிறந்த நாள். (இறப்பு-1983)
1930ல் அமெரிக்க விண்வெளி வீரரான‌ எட்வேர்ட் வைட் பிறந்த நாள். (இறப்பு-1967)
1931ல் இந்தியக் கவிஞரான‌ இரா. பெருமாள் ராசு பிறந்த நாள்.
1942ல் அசாமிய எழுத்தாளரும் பத்திரிகையாசிரியரும் கவிஞருமான‌ இந்திரா கோஸ்வாமி பிறந்த நாள். (இறப்பு-2011)
1946ல் தென்னிந்தியத் திரைப்பட இயக்குநரான‌ பரதன் பிறந்த நாள். (இறப்பு-1998)
1947ல் அமெரிக்க ஊடகவியலாளரான‌ பி. ஜெ. ஓரூக் பிறந்த நாள்.
1948ல் வேல்சு இளவரசரான‌ சார்லசு பிறந்த நாள்.
1954ல் அமெரிக்க அரசியல்வாதியான‌ காண்டலீசா ரைஸ் பிறந்த நாள்.
1957ல் தமிழ்த் திரைப்பட நடிகரும் இயக்குநருமான‌ ஆர். பார்த்திபன் பிறந்த நாள்.
1971ல் ஆத்திரேலியத் துடுப்பாளரான‌ அடம் கில்கிறிஸ்ற் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 14-11 | November 14

565ல் பைசாந்தியப் பேரரசரான‌ முதலாம் ஜஸ்டினியன் இறப்பு நாள். (பிறப்பு-482)
683ல் உமையா கலீபாவான‌ முதலாம் யசீத் இறப்பு நாள். (பிறப்பு-647)
1263ல் உருசியப் புனிதரான‌ அலெக்சாந்தர் நெவ்ஸ்கி இறப்பு நாள். (பிறப்பு-1221)
1682ல் ஒல்லாந்தக் கிழக்கிந்தியப் பகுதி ஆளுநரான‌ ரைக்லாவ் வொன் கூன்சு இறப்பு நாள். (பிறப்பு-1619)
1916ல் பிரித்தானிய சிறுகதை எழுத்தாளரான‌ சாகி இறப்பு நாள். (பிறப்பு-1870)
1920ல் இந்தியத் தொழிலதிபரும் பல்லூடகவாதியுமான‌ சுபோத் சந்திர மல்லிக் இறப்பு நாள். (பிறப்பு-1879)
1716ல் செருமானியக் கணிதவியலாளரும் மெய்யியலாளருமான‌ கோட்பிரீட் லைப்னிட்ஸ் இறப்பு நாள். (பிறப்பு-1646)
1831ல் செருமானிய மெய்யியலாளரான‌ எகல் இறப்பு நாள். (பிறப்பு-1770)
1916ல் பிரித்தானிய சிறுகதை எழுத்தாளரான‌ சாகி இறப்பு நாள். (பிறப்பு-1870)
1938ல் தென்மார்க்கு நுண்ணுயிரியியலாளரான‌ ஆன்சு கிறிட்டியன் கிராம் இறப்பு நாள். (பிறப்பு-1853)
1938ல் ஆரிய சமாசத் தலைவரும் கல்வியாளருமான‌ மகாத்மா அன்சுராசு இறப்பு நாள். (பிறப்பு-1864)
1977ல் கிருஷ்ண பக்திக் கழக நிறுவனரான‌ பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா இறப்பு நாள். (பிறப்பு-1896)
1987ல் கிழக்கிலங்கை அரசியல்வாதியான‌ ஏ. எல். அப்துல் மஜீத் இறப்பு நாள். (பிறப்பு-1933)
2013ல் தமிழகக் கிராமியக் கூத்துக்கலைஞருமான‌ ஓம் முத்துமாரி இறப்பு நாள்.
2015ல் தென்னிந்தியத் திரைப்பட இயக்குநரான‌ கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இறப்பு நாள். (பிறப்பு-1929)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 29.09.2022 Today Rasi Palan 29-09-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleNovember 15 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 15