Today Rasi Palan 24-01-2020 இன்றைய ராசி பலன் 24.01.2020 இன்றைய பஞ்சாங்கம் வெள்ளிக்கிழமை Today Calendar 24/01/2020 Friday

0

Today Rasi Palan 22-01-2020:

Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. Today Rasi Palan 24-01-2020

Today Rasi Palan 24-01-2020: இன்றைய பஞ்சாங்கம்: 24-01-2020, தை 10, வெள்ளிக்கிழமை, அமாவாசை திதி பின்இரவு 03.12 வரை பின்பு வளர்பிறை பிரதமை. உத்திராடம் நட்சத்திரம் பின்இரவு 02.46 வரை பின்பு திருவோணம். சித்தயோகம் பின்இரவு 02.46 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. தை அமாவாசை. திருக்கணித சனிப்பெயர்ச்சி காலை 09.57 மணிக்கு.

இராகு காலம் பகல் 10.30 தொடக்கம் 12.00 வரை
எம கண்டம் மதியம் 03.00 தொடக்கம் 04.30 வரை
குளிகன் காலை 07.30 தொடக்கம் 09.00 வரை
சுப ஹோரைகள் காலை 06.00 தொடக்கம் 08.00 வரை
காலை 10.00 தொடக்கம் 10.30 வரை
மதியம் 01.00 தொடக்கம் 03.00 வரை
மாலை 05.00 தொடக்கம் 06.00 வரை
இரவு 08.00 தொடக்கம் 10.00 வரை

இன்றைய ராசி பலன் – 24.01.2020

மேஷம் பக்தி உண்டாகும்.
ரிஷபம் தனம் கிடைக்கும்.
மிதுனம் கர்வம் ஏற்படும்.
கடகம் நற்செய்தி கிட்டும்.
சிம்மம் உதவி உண்டாகும்.
கன்னி மேன்மை கிடைக்கும்.
துலாம் முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிகம் பரிசு கிடைக்கும்.
தனுசு பாராட்டு கிடைக்கும்.
மகரம் வெற்றி கிடைக்கும்.
கும்பம் உழைப்பு உண்டாகும்.
மீனம் களிப்பு ஏற்படும்.

மேஷம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும். சுப காரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவம் நிகழும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உறவினர்களின் உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று பெரிய மனிதர்களின் நட்பு நம்பிக்கையை கொடுக்கும். பெற்றோர் உறுதுணையாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் நலக்குறைவு ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சலசலப்பு ஏற்படும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புக்கள் ஏற்படும். தொழிலில் புதிய முயற்சிகளை தவிர்த்து வெளியூர் பயணங்களில் கவனத்துடன் இருப்பது நன்று. உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் பேச்சை குறைப்பது நல்லது. செய்யும் செயல்களில் தாமதம் உண்டாகும்.

கடகம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வேலையில் புதியவர்கள் அறிமுகமாவார்கள். நீங்கள் நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைத்து பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும்.

சிம்மம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று செலவுகள் குறைந்து பணம் சேமிக்க கூடிய சூழல் உருவாகும். உத்தியோகத்தில் அனுகூலம் கிட்டும். வியாபார கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக இருக்கும். மன உளைச்சல்கள் குறைந்து மனதில் நிம்மதி ஏற்படும். குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள்.

கன்னி ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று தொழிலில் எதிரிகளால் ஏற்பட்ட‌ தொல்லைகள் நீங்கும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உடன்பிறப்புக்களுடன் மனசங்கடங்கள் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. தெய்வ வழிபாடு செய்வதால் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

துலாம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று சகோதரர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் உண்டாகும் வாய்ப்பு உள்ளதால் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிட்டும். குடும்பத்தில் தேவையற்ற செலவுகளை தவிர்க்க‌ பொறுப்புடன் நடந்துக்கொண்டால் பணப் பிரச்சினையை தவிர்க்கலாம்.

விருச்சிகம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று தூர பயணம் செல்லும் நிலை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் வேலையில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

தனுசு ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று கடன் பிரச்சினைகளை தீர்க்க கூடிய சூழல் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களுடன் அனுசரித்து செல்வது நலம். பிள்ளைகளால் செலவுகள் அதிகரிக்கும். தொழிலில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். உறவினர்களால் அனுகூலமான பலன் உண்டாகும்.

மகரம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று வியாபார ரீதியான‌ லாபம் கிடைக்கும். இன்று சுபசெலவுகள் செய்ய நேரிடும். வேலைகளை சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரித்து காணப்படும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பொருளாதாரத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும்.

கும்பம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று ந‌ண்பர்களால் மூலம் அனுகூலங்கள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள். கணவன் மனைவிக்கு இடையே புரிந்துணர்வு இல்லாமல் சிறு சிறு பேச்சு மோதல்கள் தோன்றும். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சுக்கள் சாதகமாக அமையும். வியாபார ரீதியான‌ எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும்.

மீனம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று பெற்றோரின் அன்பும் ஆதரவும் நிறைவாய் கிடைக்கும். வியாபாரத்தில் நற்பலனை பெற நண்பர்களின் ஆலோசனையை பெறுவது நன்மை தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் எதிர்பார்த்திருப்பவர்களுக்கு கைகூடும். பிள்ளைகளால் ஏற்பட்டுவந்த‌ மனகஷ்டங்கள் தீரும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும்.

ராசி பலன் ஜோதிடம்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleToday Rasi Palan 23-01-2020 இன்றைய ராசி பலன் 23.01.2020 இன்றைய பஞ்சாங்கம் வியாழக்கிழமை Today Calendar 23/01/2020 Thursday
Next articleWalnut Benefits in Tamil Walnut payangal வால்நட் பயன்கள் Walnut maruthuva payangal வால்நட் மருத்துவ பயன்கள் Akhrot Benefits அக்ரூட் பயன்கள் Walnut வால்நட்ஸ்