22-03-2021, பங்குனி 09, திங்கட்கிழமை, அஷ்டமி திதி காலை 09.00 வரை பின்பு வளர்பிறை நவமி. திருவாதிரை நட்சத்திரம் இரவு 09.27 வரை பின்பு புனர்பூசம். சித்தயோகம் இரவு 09.27 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம்: காலை 07.30 -09.00, எம கண்டம்: 10.30 – 12.00, குளிகன்: மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்: மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
மேஷம்: இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் வருகையால் மனமகிழ்ச்சி கூடும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
ரிஷபம்: இன்று உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துகளால் நற்பலன்கள் உண்டாகும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிட்டும். பணவரவு சிறப்பாக இருக்கும்.
மிதுனம்: இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கடகம்: இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். பணத் தேவைகள் சற்று அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகள் நல்ல முன்னேற்றத்தை உண்டாக்கும்.
சிம்மம்: இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நற்பலனை தரும். நண்பர்கள் வழியில் அனுகூலம் கிட்டும்.
கன்னி: இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கான பலன் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் அடைவீர்கள்.
துலாம்: இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.
விருச்சிகம்: இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் கவனம் தேவை.
தனுசு: இன்று பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்வுகள் நடைப்பெறும். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.
மகரம்: இன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் வளர்ச்சிக்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.
கும்பம்: இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் பெரிய பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
மீனம்: இன்று உங்களுக்கு மன அமைதி குறையலாம். உறவினர்களால் வீண் செலவுகள் அதிகமாகும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பயணங்களால் உடல் சோர்வு ஏற்பட்டாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பணப்பிரச்சினை தீரும்.