Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan இன்றைய ராசிபலன் 19.01.2023 Today Rasi Palan 19-01-2023 Today Tamil Calander Indraya Rasi...

இன்றைய ராசிபலன் 19.01.2023 Today Rasi Palan 19-01-2023 Today Tamil Calander Indraya Rasi Palan

0
407

இன்று 19-01-2023 தை மாதம் 05ம் நாள் வியாழக்கிழமை ஆகும். இன்று துவாதசி திதி பகல் 01.18 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. இன்று கேட்டை நட்சத்திரம் பகல் 03.18 வரை பின்பு மூலம். இன்று பிரபலாரிஷ்ட யோகம் பகல் 03.18 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. பிரதோஷ விரதம். இன்று சிவ வழிபாடு செய்வது நல்லது.

இராகு காலம்: மதியம் 01.30-03.00, எம கண்டம்: காலை 06.00-07.30, குளிகன்: காலை 09.00-10.30, சுப ஹோரைகள்: காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

மேஷம் ராசிக்கு:

இன்று உங்கள் உடல் நிலையில் சிறு பாதிப்பும் மன உளைச்சலும் ஏற்படும். வேலையில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 03.18 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. பெரிய தொகையை பிறரை நம்பி கொடுக்காமல் இருப்பது உத்தமம்.

ரிஷபம் ராசிக்கு:

இன்று குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 03.18 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். வேலையில் கவனம் தேவை.

மிதுனம் ராசிக்கு:

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வெளியூர் பயணங்களால் அ-னுகூலப்பலன் உண்டாகும்.

கடகம் ராசிக்கு:

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உங்களின் புதிய முயற்சிகளுக்கு பெரியவர்களின் ஆதரவு கிட்டும். நண்பர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் குறையும்.

சிம்மம் ராசிக்கு:

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். நண்பர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். உத்தியோக ரீதியான பிரச்சினைகள் ஓரளவு குறைந்து சுமூகநிலை உருவாகும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.

கன்னி ராசிக்கு:

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வழியாக நற்செய்தி வரும். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார்கள். தொழில் ரீதியான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும்.

துலாம் ராசிக்கு:

இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் வீண் பிரச்சினைகள் உண்டாகலாம். வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் விலகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும்.

விருச்சிகம் ராசிக்கு:

இன்று பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

தனுசு ராசிக்கு:

இன்று வியாபாரத்தில் லாபம் சுமாராக தான் இருக்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். வீண் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.

மகரம் ராசிக்கு:

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் மூலம் சுபசெலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

கும்பம் ராசிக்கு:

இன்று குடும்பத்தில் தாராள பணவரவு இருக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

மீனம் ராசிக்கு:

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் வியாபாரம் பாதிப்படையாது. உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நெருக்கடிகள் குறையும். நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.

Previous articleசனி பெயர்ச்சியால் ஏற்பட்டுள்ள திருப்பம் எந்த ராசியினருக்கு என்ன சனி நடக்கிறது!
Next articleபுற்றுநோய் இதய நோய் மற்றும் நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கும் இஞ்சி நீர்!