இன்றைய ராசி பலன் 16.04.2021 Today Rasi Palan 16-04-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

16-04-2021 சித்திரை மாதம் 03ம் நாள் வெள்ளிக்கிழமை ஆகும். சதுர்த்தி திதி மாலை 06.06 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. ரோகிணி நட்சத்திரம் இரவு 11.40 வரை பின்பு மிருகசீரிஷம். மரணயோகம் இரவு 11.40 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி. இன்று விநாயகர் வழிபாடு நல்லது. தனிய நாள் ஆகும். இன்று புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் : பகல் 10.30-12.00, எம கண்டம் : மதியம் 03.00-04.30, குளிகன் : காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் : காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

மேஷம் ராசி : இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய பேச்சுகளில் சாதகமான பலன் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம் ராசி : இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். சிலருக்கு புதிய பொருள், வண்டி, வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.

மிதுனம் ராசி : இன்று உங்களுக்கு உறவினர்கள் மூலம் பிரச்சினைகள் வரலாம். தொழிலில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நற்பலன்களை அடையலாம்.

கடகம் ராசி : இன்று உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். திடீர் பணவரவு உண்டாகும். கடன் பிரச்சினை தீரும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும்.

சிம்மம் ராசி : இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக அமையும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும்.

கன்னி ராசி : இன்று உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளால் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் கிட்டும்.

துலாம் ராசி : இன்று உங்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாக செல்ல வேண்டும்.

விருச்சிகம் ராசி : இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் சிக்கல்களை தவிர்க்கலாம். வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும் லாபம் தடைப்படாது. மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.

தனுசு ராசி : இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் பணிசுமை குறையும்.

மகரம் ராசி : இன்று உங்களுக்கு வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சில தடங்கல்கள் ஏற்படலாம். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.

கும்பம் ராசி : இன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பெரியவர்களுடன் வீண் வாக்கு வாதங்கள் தோன்றும். பணவரவு சுமாராக இருக்கும். தேவைகள் நிறைவேறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்பட்டாலும் குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.

மீனம் ராசி : இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிட்டும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமீனம் ராசிக்காரர்களுக்கு இந்த‌ பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு எப்படியான அதிர்ஷ்டம் தரப்போகிறது குருபகவான் தர இருக்கும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!
Next articleஇன்றைய ராசி பலன் 20.04.2021 Today Rasi Palan 20-04-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!