இன்றைய ராசி பலன் 05.06.2022 Today Rasi Palan 05-06-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

இன்று 05-06-2022 வைகாசி மாதம் 22ம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஆகும். இன்று நாள் முழுவதும் வளர்பிறை சஷ்டி திதி. இன்று ஆயில்யம் நட்சத்திரம் இரவு 12.25 வரை பின்பு மகம். இன்று சித்தயோகம் இரவு 12.25 வரை பின்பு மரணயோகம். இன்று நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். இன்று முருக வழிபாடு செய்வது நல்லது. இன்று தனிய நாள் என்பதால் புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்: மாலை 04.30 – 06.00, எம கண்டம்: பகல் 12.00 – 01.30, குளிகன்: பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள்: காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.

மேஷம் ராசிக்காரர்களே:

இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும் என்றாலும் பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.

ரிஷபம் ராசிக்காரர்களே:

இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை பலப்படும். பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சினைகள் தீரும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

மிதுனம் ராசிக்காரர்களே:

இன்று உங்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். பண நெருக்கடியை சமாளிக்க சிக்கனமுடன் இருப்பது நல்லது. அனுபவமுள்ள பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் பல புதிய மாற்றங்கள் உண்டாகும்.

கடகம் ராசிக்காரர்களே:

இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். வியாபாரத்தில் முன்னேற்ற நிலை உண்டாகும். வருமானம் அதிகரிக்கும்.

சிம்மம் ராசிக்காரர்களே:

இன்று குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் உதவியுடன் எடுத்த காரியத்தை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

கன்னி ராசிக்காரர்களே:

இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியாக வெளியூர் நபர்களால் அனுகூலம் கிடைக்கும்.

துலாம் ராசிக்காரர்களே:

இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.

விருச்சிகம் ராசிக்காரர்களே:

இன்று எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளால் மன அமைதி குறையும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

தனுசு ராசிக்காரர்களே:

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.

மகரம் ராசிக்காரர்களே:

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பாதியில் தடைபட்ட காரியம் மீண்டும் தொடரும்.

கும்பம் ராசிக்காரர்களே:

இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

மீனம் ராசிக்காரர்களே:

இன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் சேமிக்க முடியும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகுடும்ப வாழ்க்கையில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இருக்க தாலிசரடு அணியும் போது இவற்றை செய்தால் போதும்!
Next articleஇன்றைய ராசி பலன் 06.06.2022 Today Rasi Palan 06-06-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!