Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan இன்றைய ராசி பலன் 01.10.2021 Today Rasi Palan 01-10-2021 Today Tamil Calendar Indraya...

இன்றைய ராசி பலன் 01.10.2021 Today Rasi Palan 01-10-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0
674

01-10-2021, புரட்டாசி 15, வெள்ளிக்கிழமை, தசமி திதி இரவு 11.04 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. பூசம் நட்சத்திரம் பின்இரவு 02.57 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

இன்றைய ராசிப்பலன் – 01.10.2021

மேஷம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். பிள்ளைகளால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிலும் கவனம் தேவை.

ரிஷபம்

இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். தொழில் ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும். சேமிப்பு உயரும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் மறைமுக பிரச்சினைகள் வந்தாலும் லாபம் பாதிப்படையாது. சிக்கனமாக செயல்படுவது நல்லது. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

கடகம்

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும்.

சிம்மம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திருமண முயற்சிகளில் தாமத நிலை ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கன்னி

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.

துலாம்

இன்று வீட்டில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். திடீர் உதவிகள் கிடைக்கப்பெற்று ஆனந்தம் அடைவீர்கள். நவீன பொருள் வாங்கும் வாய்ப்பு அமையும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சகோதர, சகோதரிகள் வழியில் அனுகூலம் கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

தனுசு

இன்று நீங்கள் சற்று குழப்பத்துடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வெளி நபர்களிடம் அதிகம் பேசாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மகரம்

இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் குறையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். தொழில் ரீதியான நவீன கருவி வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.

கும்பம்

இன்று வியாபாரத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் மேலோங்கி இருக்கும். வேலையில் மிக கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிச்சல் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழ்கூடிய சூழ்நிலை உருவாகும். திடீர் பணவரவு கிடைத்து கடன்கள் குறையும்.

மீனம்

இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல், உடல் அசதி ஏற்படும். தொழில் வியாபாரத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். தெய்வ வழிபாடு செய்வது நல்லது.

Previous articleவக்ர நிவர்த்தி அடையும் சனி பகவானால் இந்த ராசிக்காரர்கள் அதிகமாக‌ நற்பலன்களை அடைய இருக்கிறார்கள்!
Next articleஅக்டோபர் மாதம் ராசிப்பலன் ‍12 ராசிக்காரர்களுக்கும் இந்த மாதம் எப்படி அமையப்போகிறது! எதிர்பாராத பேரதிர்ஷ்டத்தை அடையும் ராசிக்காரர் யார்?