Home Rasi Palan ராசி பலன் Monthly Rasi Palan அக்டோபர் மாதம் ராசிப்பலன் ‍12 ராசிக்காரர்களுக்கும் இந்த மாதம் எப்படி அமையப்போகிறது! எதிர்பாராத பேரதிர்ஷ்டத்தை அடையும்...

அக்டோபர் மாதம் ராசிப்பலன் ‍12 ராசிக்காரர்களுக்கும் இந்த மாதம் எப்படி அமையப்போகிறது! எதிர்பாராத பேரதிர்ஷ்டத்தை அடையும் ராசிக்காரர் யார்?

0
694

மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நன்மைகள் அதிகம் நடக்கும் இனிய மாதமாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பெரிய பெரிய முதலீடுகள் செய்து அதிக லாபம் காணும் யோகம் உண்டு.

மேலும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து மனதில் நிறைவு உண்டாகும். குடும்பத்தில் புதிய வரவுக்கு காத்திருப்பவர்களுக்கு இனிய செய்திகள் கிடைக்கும். ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள் நன்மைகள் பெருகும்.

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு தடைப்பட்ட சில வேலைகளை மீண்டும் செய்து வெற்றியை காண கூடிய அதிர்ஷ்டம் உண்டு. நிலம், வீடு தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் சில மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் குறையும். விக்னங்களை தீர்க்கும் விநாயகப் பெருமானை வழிபட நல்லது நடக்கும்.

மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு உரிய கூட்டாளிகள் மூலம் அனுகூல பலன் உண்டாகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து எதிர்பார்த்த தொகை கைக்கு வருவதில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிட மாற்றம், பதவி உயர்வு போன்ற விஷயங்கள் சாதக பலனை கொடுக்கும். பெண்களுக்கு மனோதிடம் கூடும். ஆரோக்கிய ரீதியான விஷயங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது. நந்தி பகவானை திங்கட்கிழமையில் வழிபடுங்கள் நன்மைகள் நடக்கும்.

கடகம்

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் இதுவரை இருந்துவந்த மந்தநிலை மாறி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தி காட்டுவீர்கள்.

மேலும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புணர்வு அதிகரிக்கும். குடும்பத்தில் சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை குறைவில்லாமல் பரஸ்பரம் அன்பு மேலோங்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். பஞ்சமுக விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் இடத்தில் நல்லுறவு ஏற்படும். பெரிய மனிதர்களுடைய அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி சுபிட்சம் பெருகும்.

சுபகாரிய முயற்சிகளில் இருந்து வந்த தடை விலகும். கணவன் மனைவி ஒற்றுமைக்கு குறைவிருக்காது. புதிய முயற்சிகளில் அதிக கவனம் தேவை. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனைவிவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காண்பீர்கள். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது சிறந்த பலன்களை கொடுக்கும்.

கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் புதிய விஷயங்களில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும் அற்புதமாக அமைய இருக்கிறது. நினைத்தபடி நினைத்த வரன் அமையும்.

திருமண முயற்சிகளில் அலைச்சல் இருந்தாலும் வெற்றி காணலாம். மேலும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கவன சிதறல் அதிகம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் விழிப்புணர்வுடன் பணியில் கவனம் செலுத்தினால் நன்மை தரும். குடும்பத்துடன் அதிகம் நேரத்தை செலவிட்டால் மன நிறைவு உண்டாகும். சனிக்கிழமைகளில் விஷ்ணு வழிபாடு செய்வது நல்ல பலன்களை கொடுக்கும்.

துலாம்

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் மாதமாக அமைய இருக்கிறது. பணம் எவ்வளவு வேகத்தில் வருகிறதோ அந்த வேகத்தில் செலவுகளும் வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய யுக்திகள் அனுகூல பலன் கொடுக்கும்.

பொருளாதார ரீதியான ஏற்றம் சிறப்பாக அமைய இருப்பதால் தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைத்து சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை தேவை. வெளியிட பயணங்களின் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அம்பாளுக்கு நெய் விளக்கு ஏற்றுங்கள் நன்மைகள் நடக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் கூடுதல் பயிற்சியும், முயற்சியும் தேவை. எந்த ஒரு விஷயத்திலும் பிடிவாதமாக இருந்து அவற்றை அடைவதை குறிக்கோளாக வைத்திருங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும்.

மேலும், கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த பனிப்போர் நீங்கும். குடும்பத்தில் திடீர் உறவினர்கள் வருகை மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தும். புதிய சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபடுங்கள் நன்மைகள் நடக்கும்.

தனுசு

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் திருமண வைபவங்கள் கைக்கூடி வரும் அற்புதமான மாதமாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். வளர்ச்சியை எட்டக்கூடிய வகையில் அமைந்து இருப்பதால் புதிய முயற்சிகள் நல்ல பலன் தரும்.

புதிதாக தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு பெரிய மனிதர்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கும். குழந்தைகள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து மனதிற்குப் பிடித்த விஷயங்களை கற்றுக்கொள்ள முயற்சி செய்வது நல்லது. நல்லது நடக்க சனிஸ்வர பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

மகரம்

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீர்ந்து படிப்படியான அன்பு அதிகரித்து வரும். அமைதியான சூழ்நிலையில் ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வது நல்லது. ஈசன் வழிபாடு அத்தனை துன்பங்களையும் போக்கும் அற்புத பரிகாரமாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் அதனை மனோதிடத்துடன் சமாளிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகள் அனுகூல பலன் கொடுக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றுமை பலப்படும். உங்களை பெற்றவர்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. தந்தைவழி உறவினர்கள் மூலம் சில பிரச்சனைகள் வந்து மறையும். பூர்வீக சொத்துக்கள் அனுகூல பலன் கொடுக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். சுக்கிர ஓரையில் சுக்கிர வழிபாடு செய்வது சுகபோக பலன் தரும்.

மீனம்

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நீங்கள் நினைத்ததை விட சிறந்த பலன்களை கொடுக்கும் அற்புத மாதமாக இருக்கும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீர்ந்து தெளிவான சூழ்நிலை உண்டாகும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து சுமூகமான நல்லுறவு நீடிக்கும். புதிய முயற்சிகளில் நண்பர்களுடைய ஆதரவை பெறுவீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் சுப செய்திகளை பெறுவீர்கள்.

உடல் ஆரோக்கியம் சார்ந்த சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது. முருக வழிபாடு செவ்வாய்க்கிழமைகளில் செய்து வர நன்மைகள் நடக்கும்.

Previous articleஇன்றைய ராசி பலன் 01.10.2021 Today Rasi Palan 01-10-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleநா-ளை-ய தினம் விருச்சிக ராசியில் கேது உடன் இணையப்போகும் சுக்கிரனால் இனி நற்-பலன்களை அடையப்போகும் ராசிக்காரர்கள் யார்!