தினை பயன்கள் தினை அரிசி நன்மைகள் Thinai Benefits In Tamil – (Foxtail millet) Thinai Arisi Payangal Thinai Nanmaigal.

0

Thinai Benefits In Tamil “தினை” பயன்கள் “தினை அரிசி” Millet (சிறுதானியம்)”Thinai” Benefits In Tamil – Foxtail millet Benefits in Tamil, “தினை” மாவு, “Thinai Arisi” “Thinai Payangal” uses in Tamil, தினை பயன்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள், Millet சிறுதானியம்.

தினைத்தானியத்தில் செய்யக்கூடிய உணவு வகைகள்
தினைத்தானியத்தில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்
தினைப் பயிர்ச்செய்கை வரலாறு
தினைத்தானியத்தின் ஆரோக்கியப் பயன்பாடுகள்
தினைத்தானியத்தை பயிரிடும் நாடுகளில் அதற்கு வழங்கப்பட்டுள்ள பெயர்கள்

Thinai Benefits In Tamil

தினை தான் நமது சங்க காலத்தில் புராதன உணவாக இருந்தது.குற்றாலக் குறிவஞ்சியில் குறத்தி மலை வளம் கூறும் போது குறவள்ளி தினைப்பயிரை பறவைகளிடமிருந்து காப்பற்ற காவல் இருந்த கதையும் உண்டு. “Thinai Benefits In Tamil”

இத்தானியத்தின் கதிர் நரியின் வாலை போன்று இருப்பதால் Foxtail millet என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இத்தானியம் இளம் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.இத்தானியத்தின் விஞ்ஞானப்பெயர் Seteria italica,Seteria italica இதை Panicum italica என்றும் அழைப்பர்.இது ஆசிய நாடுகளில் தானியப்பயிர்ச் செய்கையில் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் வகை(Species): Seteria italica ‎
குடும்பம்(Family)‎: ‎Poaceae
இனம்(Genus)‎: ‎Setaria
இராட்சியம்(Kingdom‎): ‎Plantae

மிகப்பழமையான இத்தானியமானது ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் மிகவும் முக்கியமான உணவாக பயன்பாட்டில் இருந்துவந்துள்ளது. இருந்தபோதிலும் சில விவசாயிகள் இத்தானியத்தை பறவைகளின் உணவாகவும், கால்நடை தீவனமாகவும் பயன்படுத்தியும் வந்துள்ளனர்.

இந்த தினைதானியமானது ஓர் ஆண்டு புல்வகை தானியமாகவும், மெல்லிய, நீண்ட, தண்டுகள் முழுவதும் இலைகள் நிறைந்த தானியமாகும். இது 120‍‍‍‍‍‍‍‍_200 cm(3.9‍‍‍_6.6ft) அளவு உயரமாக வளரக்கூடியது. இதனுடைய பூக்கள் நிறைந்த கதிர்களின் நீளம் ஏறத்தாள 5_30cm ஆகும். இதன் தனி ஒரு வித்து கிட்டத்தட்ட 2mm(3/32 in) in diameter.இக்கதிர்களை சூடடிக்கும் போது விதைகளை சூழவுள்ள பதர்கள் இலகுவாக கழறக்கூடியது. இதன் வித்துகள் வெள்ளை, சிவப்பு, மஞ்சள், கபிலம் அல்லது கருப்பு ஆகிய நிறங்களில் வேறுபட்டுக் காணப்படும்.

தினைப் பயிர்ச்செய்கை வரலாறு History of Foxtail Millet

இது ஒரு புராதன காலத்து தானிய வகை தானிய வகை ஆகும். இது கிமு 5000 ஆண்டுகளுக்கு முன்னரே சீனாவில் முதலில் பயிரிடப்பட்டதாக ஆய்வுகள் கூறுகிறது. இது சீனாவிலிருந்தே இந்தியா, ஜரோப்பா மற்றும் உலகம் முழுவதும் பரவியது. சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலேயே மிக அதிகப்படியாக உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தானியமானது கிழக்கு மற்றும் தெற்கு ஆபிரிக்காவிலும் பல ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே பயிரிடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அத்துடன் மத்திய ஜரோப்பாவிலும் இது வெயில்காலப்பயிர்ச்
செய்கையாக 17ம் நூற்றாண்டுகளில் பயிரிடப்பட்டிருக்கிறது.

இத் தானியமானது வெப்ப பருவகாலங்களில் விரைவாகவும் 60 – 120 நாட்களிலேயே பலன் தரக்கூடிய ஓர் ஆண்டு பயிர்ச்செய்கை ஆகும். கடல் மட்டத்தில் இருந்து 2000m உயரத்தில் இவ்வகைத்தானியங்கள் சிறப்பாக வளரும். இத்தானியத்தை ஆண்டுதோறும் கோடைகால‌ மழைவீழ்ச்சி 500-700 mm இருக்கும் பிரதேசங்களில் பயிரிடுவது மிகவும் சிறந்தது. இருந்தபோதிலும் ஆண்டு மழைவீழ்ச்சி 300-400mm உம், இடைவெப்ப வலயங்களில் 125mm ம், 3 – 4 மாதங்களுக்கு கிடைக்குமெனில் இத்தானியப்பயிர்ச்செய்கை இங்கும் சாத்தியமானதே.

இத்தானியம் 16-26 பாகை வெப்பநிலையில் செழிப்பாக வளரக்கூடியது. என்ற போதிலும் இது 5-35 பாகைக்கு இடைப்பட்ட வெப்பநிலையிலும் வளரக்கூடிய சகிப்புத்தன்மையுள்ள தானியமாகும். மற்றும் இது மணல்பாங்கான, களித்தன்மையான தரையமைப்பிலும் வளரக்கூடியது. இந்த மண்ணின் PH பேறுமானம் 5.5‍‍‍_8.3 வரை இருக்கும் போது இத்தானியப் பயிர்ச்செய்கை மிகவும் சிறப்பாக இருக்கும்.

தினைத்தானியத்தில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் Nutritional Value of Foxtail Millet

இதில் குறிப்பிடத்தக்க அளவில் புரதமும்,நார்ச்சத்தும்,கனியுப்புக்களும், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, பாஸ்பரஸ், மாவுச்சத்து, சுண்ணாம்புச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துக்களைக்கொண்டது. பைட்டோகெமிக்களும் (phytochemicals) உண்டு.அத்துடன் இது hypolipidemic, குறைந்த அளவில் glycemic index கையும், அன்டிஒசிடன்(Antioxidant)டையும் கொண்ள்ளது.

தினைத்தானியத்தின் ஆரோக்கியப் பயன்பாடுகள் Health Benefits of Foxtail Millet | Thinai Payanga

 1. பொதுவாக இதில் கனியுப்புகள் இருப்பதால் தசைநார்களையும், எலும்புகளையும் வலுப்படுத்துகிறது.
 2. இதில் வைட்ட‌மின் B12 இருப்பதால் எமது இதயத்தையும், நரம்புமண்டலத்தையும் சீராக செயல்படுத்துவதற்கும் மற்றும் எமது சருமத்தை பாதுகாப்பதுடன்,முடி வளருவதற்கும் உதவுகிறது.
 3. இது வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின், கொலஸ்ரோல், இரத்தத்தில் சக்கரையின் அளவு ஆகியவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
 4. இதில் இயற்கையாகவே உயர்வான இரும்புச்சத்து இருப்பதால் தசைப்பிடிப்பு
  மற்றும் அது தொடர்பான நோய்குறிகளை குறைக்க உதவும்.
 5. இவ்வுணவை தினமும் உண்ணும் போது எமது உணவுக்கால்வாய்த் தொகுதி
  சுத்தமாவதுடன்,மலச்சிக்கலும் தீரும்.
 6. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இது மிகச்சிறந்த உணவாகும்.
 7. இத்தானியத்தை அடிக்கடி எமது உணவில் சேர்த்துவரும் போது
  வாய்வுத்தொல்லை மற்றும் இதயநோய் சம்மந்தமான பிரச்சினைகள் தீரும்.
 8. இதில் உயர்வாக antioxidants இருப்பதால் நீண்டகாலமாக இருக்கும் நோய்களின் பாதிப்பைக் குறைக்க உதவும்,உதாரணமாக இரத்த அழுத்தம்,கொலஸ்ரோல்,2 நீரிழிவு ஆகியவை மற்றும் உடற்கலங்ளின் சிதைவையும் தடுக்க உதவும்.
 9. இதயத்தை பலப்படுத்துவதற்கு உதவுகிறது.

தினைத்தானியத்தை பயிரிடும் நாடுகளில் அதற்கு வழங்கப்பட்டுள்ள பெயர்கள் Other Names of Foxtail Millet

Bengali: কাওন দানা (kaon dana)
Kannada: ನವಣೆ (navane) or ನವಣಕ್ಕಿ (navanakki)
Sanskrit: प्रियङ्गुः (priyangu) or कङ्गुः (kangu)
Telugu: కొర్రలు (korralu or korra)[7]
Hindi: कांगणी (Kangni)
Punjabi: ਕਂਗਣੀ/کنگنی‎ (Kangni)
Gujarati: kang
Japanese: awa (粟)
Javanese: jewawut
Georgian: Ghomi (ღომი)
German: Hirse *German: Surjapuri-Kauni
Korean: jo (조). The grain obtained from it is called jopsal (좁쌀)
Malay: jewawut
Malayalam: തിന (thina)
Mandarin Chinese: su (粟). Also called xiǎomǐ (小米)
Marathi: kang or rala (राळं)
Sinhala: thana haal
Tamil: தினை (thinai)
Nepali: Kaguno
Gurung : Tohro wikipedia Link

தினைத்தானியத்தில் செய்யக்கூடிய உணவு வகைகள் Food Recipes of Foxtail Millet

தினை அரிசி உப்புமா Thinai Arisi Upma

தினை அரிசி உப்புமா

தேவையான பொருட்கள்

• தினை அரிசி – ஒரு கப்,
• வெங்காயம்,
• கேரட்,
• குடமிளகாய் -தலா ஒன்று,
• பச்சைப் பட்டாணி – அரை கப்,
• காய்ந்த மிளகாய் – 2,
• கடுகு – அரை டீஸ்பூன்,
• உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
• பெருங்காயத்தூள் சிறிதளவு,
• மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை,
• கறிவேப்பிலை,
• கொத்தமல்லி -சிறிதளவு,
• எண்ணெய் ஒரு டீஸ்பூன்,
• உப்பு – தேவையான அளவு.

செய்யும் முறை

• கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு,உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளிக்கவும்.
• பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வதங்கியதும் பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கிய கேரட், குடமிளகாயை சேர்க்கவும்.
• இதில், ஒரு கப் திணை அரிசிக்கு இரண்டு கப் என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றவும்.
• நன்றாக கொதித்ததும் உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து, திணை அரிசியை போட்டு மூடி, அடுப்பை ‘சிம்’மில் வைக்கவும்.
•10 நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான தினை அரிசி உப்புமா தயார்!

தினை அரிசி தோசை Thinai Arisi Dosai

தினை அரிசி தோசை

தேவையான பொருட்கள்

•தினை அரிசி 2கப்
•உழுந்து – ½ கப்
•வெந்தயம் ‍ 1 tbsp
•தனித்தனியாக தினை அரிசி,உழுந்து,வெந்தயம் ஆகியவற்றை இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
•உப்பு தேவையான அளவு
•Oil – 2 tbsp
•தண்ணீர் தேவைக்கேற்ப்ப‌

செய்யும் முறை

•இவை அனைத்தையும் நன்கு அரைத்து 8 மணி நேரம் நொதிக்க விடவும்.
•தேவைக்கு எற்ப உப்பு,தண்ணீர் விட்டு கலக்கி சூடாக்கிய தோசைக்கல்லில் ஊற்றி
தோசை சுடவும்,தோசையை சுற்றி oil விட்டு திருப்பி விடவும்.
•தோசை தயாரானதும் தக்காளி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

தினை அரிசி இட்லி Thinai Arisi idli

தினை அரிசி இட்லி

தேவையான பொருட்கள்

•தினை அரிசி 2கப்
•உழுந்து – ½ கப்
•வெந்தயம் ‍ 1 tbsp
•உப்பு தேவையான அளவு
•Oil – 2 tbsp
•தண்ணீர் தேவைக்கேற்ப்ப‌

செய்யும் முறை

•தனித்தனியாக தினை அரிசி,உழுந்து,வெந்தயம் ஆகியவற்றை கழுவி 6‍‍‍‍‍ ‍ 8 மணித்தியாளங்கள் ஊற வைக்கவும்.
•தண்ணீரை வடித்து பின் அனைத்தையும் நன்கு அரைத்து 8 மணி நேரம் நொதிக்க விடவும்.
•தேவைக்கு எற்ப உப்பு சேர்த்து கலக்கி இட்லி தட்டில் எண்னெய் தடவி மாவை ஊற்றி பின் 10 நிமிடங்கள் ஆவியில் அவிக்கவும்.
•இட்லி தயாரானதும் தக்காளி அல்லது தேங்காய் சட்னியுடன் சுடச்சுட பரிமாறவும்.

தினை பிரியாணி Thinai Arisi Biryani

தினை பிரியாணி

தேவையான பொருட்கள்

•தினை அரிசி – 2cups
•உருளைகிழங்கு – 1
•கறிவேப்பிலை, புதினா இலை – 1 spring
•இஞ்சி,பூண்டு சாந்து – 1 tbsp
•வெங்காயம் – 1
•பச்சைமிளகாய் – 1
•முந்திரி,பாதாம் விதைகள் – 6
•கருவாப்பட்டை – 1
•ஏலக்காய் -3
•கிராம்பு -3
•பிரியாணி இலை – 1
•நட்சத்திர சோம்பு – 1
•பெருஞ்சீரகம் – 1 tbsp
•கரம்மசாலா தூள் – ½ tbsp
•தனி மிளகாய்த் தூள் – ½ tsp
•தேசிப்புளி – ½ tsp
•Oil – 2 tb
•தண்ணீர் 3 கப், தேவையான அளவு உப்பு

செய்யும் முறை

•தினை அரிசியை நன்கு கழுவி நீரில் 20 நிமிடம் ஊறவிடவும்.
•pressure cooker சூடாக்கி அதனுள் oil ஊற்றி காய்ந்ததும் ஏலக்காய், பெருஞ்ச்சீரகம், கருவா பட்டை, கராம்பு,பிரியாணி இலை,நச்சத்திர சோம்பு,முந்திரி,பாதாம் சேர்த்து வதக்க வேண்டும்
•பின் வெங்காயம்,உருளைக்கிழங்கை பொன்நிறமாகும் வரை வதக்குக பின் இஞ்சி, பூண்டு சேர்க்கவும்.
•பின்னர் மிளகாய்த்தூள்,கரம்மசாலா சேர்த்து கலந்து தேவைக்கு ஏற்ப உப்பு, தண்ணீர் சேர்த்து கலந்து pressure cooker ரை மூடி விடவும்.
•அது கொதித்துக்கொண்டிருக்கும் போது தினை அரிசியை அதனுள் சேர்த்து மூடி 3 ‍ 4 விசில் வரை அவிய விடவும்.
•அவிந்ததும் தேசிப்புளி,புதினா இலை தூவி மெதுவாக கிளறி பின் பரிமாறலாம்.

Millet Benefits சிறுதானிய பயன்கள்

Patti Vaithiyam in Tamil with the all maruththuva Kurippukkal: Siddar Maruththuvam, Paati Vaithiyam Tamil Maruththuvam

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

Article By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleJaffna News Paper / Jaffna News Epaper Jaffna News Online Newspaper Sri Lankan
Next articleஇன்றைய ராசி பலன் 11.03.2020 Today Rasi Palan 11-03-2020 Today Calendar Indraya Rasi Palan!