26-06-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 26-06-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live

0

Tamil news today 26-06-2020, Tamil news today, Today news in tamil, Tamil News Live, Today popular news tamil 26.6.20, Today trending news tamil, Today news in tamil live, Today tamil news in sri lanka, Today tamil news in india, Indraya mukkiya seithigal, Indraya thalaippu seithigal, Tamil News Live 26/6/20, Today News in Tamil 26.06.2020, Today breaking news in tamil, today headlines tamil, இன்றைய தலைப்பு செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள்.

Tamil News Today Sri Lanka

க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதி மற்றும் பரீட்சைகளை நடத்துவதற்கான முறைகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் கல்வி அமைச்சு.

கொழும்பில் சில பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது இந்த நீர்வெட்டு சனிக்கிழமை இரவு 10 மணிமுதல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிவரையில் அமுல்படுத்தப்பபடுவதாக நீர்வழங்கள் , வடிகாலமைப்புச் சபை தெரிவிப்பு.

திருமண வைபவமொன்றில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை 200 பேர் வரையில் கலந்துகொள்வது தொடர்பாக சுகாதார அமைச்சு ஆராய்ந்து வருவதாக தகவல்.

“மூவினத் தலைவர்களுடனும் தொடர்புகளைப் பேணும் தான், நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் கொழும்பு வாழ் மக்களுக்கு சிறப்பான தலைமைத்துவத்தையும் சேவைகளையும் வழங்க முடியும்” – கொழும்பு மாவட்ட வேட்பாளர் விநாயகமூர்த்தி ஜனகன் தெரிவிப்பு.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் வரதன் லக்ஸ்மன் வியாழக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைவு.

மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ சோதனைச் சாவடி மீது மன்னார் நகர சபைக்கு சொந்தமான கழிவு அகற்றும் பௌசர் வியாழக்கிழமை மோதி விபத்து.

பழுதடைந்துள்ள தொண்டமானாறு பாலத்தினை, கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் 123 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட முகாமைத்துவப் பயிற்சிக் கட்டடம் ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ளஸ் அவர்களால் திறந்துவைப்பு.

Tamil News Today India

இந்திய விண்வெளித் துறையில் தனியார் துறையை இணைக்க மத்திய அரசு முடிவு, இதை இஸ்ரோ விண்வெளி நிறுவனம் வரவேற்றுள்ளது.

பல்கலைக் கழகங்களின் தவணைத் தேர்வினை இரத்துச்செய்ய வேண்டுமென பல்கலைக்கழக மானிய அணையகம் அமைத்துள்ள நிபுணர் குழு வேண்டுகோள்.

கோபிசெட்டிப்பாளையம், குருமந்தூரில் 500 .ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற 2 பேர் கைது..!

தள்ளுவண்டி, செல்போன் கடை நடத்தும் எளிய மனிதர்களின் மீதே போலீஸ் கொலைவெறி தாக்குதல் நடத்துவது எவ்வகையில் நியாயம்? உதயநிதி ஸ்டாலின் கண்டனம்.

சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய பெண்ணிய ஆர்வலர் ரெஹானா பாத்திமா மீது போக்சோ சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு, அவரது குழந்தைகளைக் கொண்டு தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைந்து அதனை காணொளியாக வெளியிட்டமை தொடர்பாகவே இவ் வழக்கு!

“கொரோனா இல்லாத சென்னையை உருவாக்க மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்.

தேவாலயம் கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஆனந்த் தரப்பை துப்பாக்கி காட்டி பாதிரியார் ஜெயப்பிரகாஷ் மீது வழக்கு பதிவு..!

லடாக் , கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து சீன நாட்டின் படைகள் பின் வாங்கியதாக தகவல்!

திருப்பூர் வீரபாண்டி பகுதியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகளை கொ(ன்)று வீட்டுக்குள் புதைத்த தாய்யை சேர்ந்த எஸ்தர் பேபி 6 ஆண்டுக்கு பிறகு தம்பியுடன் கைது.!

Tamil News Today World

ஐ.நா. பாதுகாப்பு குழுவில், இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு ஆதரவு அளிப்பதாக ரஷ்யா தெரிவிப்பு.

தன்சானியாவில் சானினியு லைசர் என்ற‌ சிறிய சுரங்கத் தொழிலாளி, இரண்டு கரடுமுரடான 15kg தன்சானைட் கற்களை விற்று ( 3.4 மில்லியன் டொலர்கள்)ஒரே இரவில் மில்லியனராகிவிட்டார்.

பாகிஸ்தான் , இஸ்லாமாபாத்தில் முதன்முதலாக இந்துக் கோயில் (கிருஷ்ணர் கோயில்) இந்திய ரூபாயில் 10 கோடி பெறுமதியில் அமைக்கப்படுகிறது.

அவுஸ்ரேலியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 1000 இராணுவ வீரர்களை விக்டோரியா மாநிலத்திற்கு பாதுகாப்புப் படை அனுப்பியுள்ளது.

Tamil News Live

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.384 குறைந்து ரூ.36,888 ற்கும், ஒரு கிராம் வெள்ளி ரூ.52.40.ற்கும் விற்பனை.

நடிகர் சுஷாந்தின் இறப்பு எந்த விதமான சந்தேகங்களும் அற்ற தற்கொ(லை) தான் என உறுதியாகியுள்ளது.

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த “டேனி” திரைப்படம் விரைவில் OTT ல் வெளியாகவுள்ளது.

Today News Tamil – Tamil News Today 26-06-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 25.06.2020 Today Rasi Palan 25-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 26.06.2020 Today Rasi Palan 26-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!