24-06-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 24-06-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live

0

Tamil news today 24-06-2020, Tamil news today, Today news in tamil, Tamil News Live, Today popular news tamil 24.6.20, Today trending news tamil, Today news in tamil live, Today tamil news in sri lanka, Today tamil news in india, Indraya mukkiya seithigal, Indraya thalaippu seithigal, Tamil News Live 24/6/20, Today News in Tamil 24.06.2020, Today breaking news in tamil, today headlines tamil, இன்றைய தலைப்பு செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள்.

Tamil News Today Sri Lanka

கல்முனையில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் கிணறு ஒன்றிலிருந்து வெந்நீராவி வெளிவந்ததாக கூறப்பட்டதால் , புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகள் மின்சார சபை ஊழியர்கள் சென்று பார்வையிட்டனர். இச்சம்பவம் மின்சார கம்பி கிணற்றில் காணப்பட்டதாகவும், அதில் ஏற்பட்ட மின்சார ஒழுக்கினால் தான் நீர் சூடாகி வெந்நீராவி வெளியேறியுள்ளதாகக தெரியவந்துள்ளது.

“தேவதத்த மன்னனால் துறவியாக முடியுமானால், கருணா அம்மானும் வரலாற்றிலிருந்து தப்பித்து வேறு நபராக, நல்லவராக மாற முடியும்” – தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கருத்து.

மட்டக்களப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது.!

புஸ்ஸல்லாவை ஹெல்பொட தோட்டத்தில் வைத்த‌ பொறிக்குள் சிக்கிய நிலையில் 2 சிறுத்தைகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிப்பு.

“பொதுத்தேர்தல் மேடையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்போது வேட்பாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” – சஜித் பிரேமதாச வலியுறுத்தல்.

Tamil News Today India

இந்தியாவில் கழிவு நீரின் மூலம் பரவும் கொரோனா வைரஸ் – ஐ.ஐ.டி விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.

இந்திய ராணுவ தளபதி நராவனே அவர்கள் லடாக் புறப்பட்டு சென்றுள்ளார்.

தமிழக வீரர் பழனியின் குடும்பத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் 4 பேர் சஸ்பெண்ட்.! ஆட்சியர் அறிவிப்பு.

தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மருத்துவக் குழு முன்னிலையில் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்க.! உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

தேங்காய்க்கு கொள்முதல் விலையை 5% உயர்த்தியுள்ளது மத்திய அரசு.

பெங்களூரில் இளம் பெண் ஒருவர் துப்புரவு பணியாளரை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்ளும் வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

Tamil News Today World

தென் கொரியா மீது துண்டு பிரசுர போர் நடத்த வடகொரியா தீவிரம், எல்லையில் 3 ஆயிரம் பலூன்கள்.

அமெரிக்கா வெளிநாட்டு ஊழியர்களுக்கு க்ரீன் கார்ட் மற்றும் H1B, H2B உள்ளிட்ட விசா வழங்குவதற்கான தடையை இந்த ஆண்டு இறுதி வரை நீடித்தது – ‍அதிபர் ட்ரம்ப்.

புலம்பெயர்ந்து வந்தவர்கள் அமெரிக்க பொருளாதாரத்தில் பெரும் பங்காற்றியுள்ளனர் சுந்தர்பிச்சை ட்வீட் செய்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை இரத்து செய்யப்படாது என சவூதி அரேபியா அரசாங்கம் தெரிவிப்பு.

ஜுலை 7 முதல் அமீரகம் சுற்றுலா பயணிகளை அனுமதிக்கிறது.

Tamil News Live

குடும்பத்தினருடன் பிறந்த நாள் கொண்டாடிய தளபதி விஜய்..!

இலங்கையில் நீருக்கடியில் நூதனசாலை அமைப்பு.

நீ தானே என் பொன்வசந்தம் படத்தின் மூலம் அறிமுகமானவர் வித்யூ லேகா 30 கிலோ உடல் எடையை குறைத்து புகைப்படம் வெளியிட்டார்.

Today News Tamil – Tamil News Today 24-06-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசெருக்குற்ற புலவனுக்கு ஓர் மடல் – Serukkurra Pulavanukku Oru Madal (Tamilpiththan kavithai-21)
Next articleஇன்றைய ராசி பலன் 24.06.2020 Today Rasi Palan 24-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!