செருக்குற்ற புலவனுக்கு ஓர் மடல் – Serukkurra Pulavanukku Oru Madal (Tamilpiththan kavithai-21)

0

செருக்குற்ற புலவனுக்கு ஓர் மடல்

Serukkurra Pulavanukku Oru Madal

புலவனே உன் பாட்டிற்கு
எதிர்ப்பாட்டு பாடினால்
நம் இருவரில் ஒருவரின்
தரம் தாழ்த்தப்படும்.
என் தரம் தாழ்வதை
நான் விரும்பவில்லை ‍
ஏனென்றால், நான்
இப்போது தான்
படி ஏறி வருகிறேன்.
என் தரம் குறைவது
எனக்கு சிறப்பல்ல
ஒருவேளை உன் தரம்
குறைந்துவிட்டால்,
புகழின் உச்சியில் இருக்கும்
உன் படியை இறக்கி
நான் படி ஏற விரும்பவில்லை
சேர்ந்து பயணிக்கவே ஆசைப்படுகிறேன்..

அன்புடன்..
எழுத்தாளர்: தமிழ்ப்பித்தன்

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article23-06-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 23-06-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live
Next article24-06-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 24-06-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live