22-06-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 22-06-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live

0

Tamil news today 22-06-2020, Tamil news today, Today news in tamil, Tamil News Live, Today popular news tamil 22.6.20, Today trending news tamil, Today news in tamil live, Today tamil news in sri lanka, Today tamil news in india, Indraya mukkiya seithigal, Indraya thalaippu seithigal, Tamil News Live 22/6/20, Today News in Tamil 22.06.2020, Today breaking news in tamil, today headlines tamil, இன்றைய தலைப்பு செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள்.

Tamil News Today Sri Lanka

இலமுரியா கண்டத்தில், ஆதிக்குடிகளான தமிழர்களின் நாடே ஈழம் எனவும் அதுதான் இலங்கை என்றும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவிப்பு.

மன்னார் தள்ளாடி விமான ஓடுபாதை அருகில் காணப்பட்ட இந்துக்களின் சிற்றாலயம், இனம் தெரியாத சந்தேக நபர்களினால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சேதமாக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிரிந்துள்ளதால், நுவரெலியா மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறு ஆசனங்களைக் கைப்பற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நம்பிக்கை.!

வத்தளை திக்கோவிட கடலில் மூழ்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் 16, 20, 30 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மூவரும், 14 வயது சிறுவன் உட்பட.

எனது அரசியல் வாழ்க்கையிலே எனக்கு கிடைத்த பெரும் ஏமாற்றம் 2015 தேர்தலில் கிடைத்த தோல்வி என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாலைதீவில் சிக்கித் தவித்த இலங்கையர்கள் 255 பேர் ஸ்ரீலங்கன் எயார் லைன் மூலம் தாயகம் திரும்பியுள்ளனர்.

மட்டக்களப்பில் டெங்கு பரவுவதற்கான சாத்தியமுள்ளதாக இனங்காணப்பட்ட பகுதிகளை தூய்மைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.

யாழில் அதிகாலை 4.40 மணியளலில் அத்தியடிச் சந்தி பகுதியில் கழிவுப் பொருட்களை கொட்டுவதற்கு சென்றவரை பொது சுகாதார பரிசோதகர் தடுக்க முற்பட்ட வேளை அவரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

வ‌ல்வெட்டித்துறைப் பகுதியில் சுமார் 3 மணி நேரமாக இராணுவம் சுற்றிவளைப்பு.

Tamil News Today India

அப்பாவை போல் நானும் ராணுவ வீரர் ஆவேன். சீன எல்லையில் உயிரிழந்த ராணுவ வீரர் பழனியின் மகன்.

சர்வதேச விமான சேவையை மற்ற நாடுகள் தொடங்கினால் இந்தியாவும் ஆரம்பிக்கும் – விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி.

சீன ஆக்கிரமிப்பு காரணமாக பிரதமர் மோடி இந்திய நிலப்பரப்பை சீனாவிடம் ஒப்படைத்துவிட்டார் – காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மே 6ஆம் திகதி இந்திய வீரர்கள் எல்லை கட்டுப்பாடு, கோடு பகுதியை தாண்டினர்- சீனா மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.

வைரஸ் நோய் பரவலைத் தடுக்க சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில், தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. ( சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்).

இந்தியாவால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தில் வெடிபொருட்கள், பயங்கரவாத தாக்குதலுக்கான திட்டமென இராணுவம் தெரிவிப்பு.

மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளி தஹாவூர் ராணா அமெரிக்காவில் கைது!

Tamil News Today World

இங்கிலாந்தின் ரீடிங் நகரிலுள்ள போர்பரி பூங்காவில் இடம்பெற்ற கத்தி குத்து சம்பவம் பயங்கரவாத தாக்குதல் அல்ல – சுகாதார அமைச்சர் மற் ஹன்கொக் தெரிவிப்பு.

உக்ரேனிய தலைநகர் கைவ் நகரின் (Kyiv) அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு வெடிப்பு ஒருவர் பலி.

இந்தியா ,சீனா இடையே எழுந்துள்ள மோதலை கட்டுப்படுத்த சமரச முயற்சிக்கு உதவத் தயார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.

கங்கோ ஜனநாயகக் குடியரசின் நீதிமன்றம் ஜனாதிபதி பெலிக்ஸ் சிசெக்கெடியின் தலைமை அதிகாரி ஒருவர் 50 மில்லியன் டொலர் அரச நிதியை மோசடி செய்ததால் 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை.

வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தலை தபால் ஓட்டு மூலம் நடத்தினால், எனது வெற்றிக்கு மிகப்பெரிய ஆபத்து வந்துவிடும், என அதிபர் டிரம்ப் அச்சம்!

Tamil News Live

சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்த மாளவிகா தற்போது ஃபேஸ் ஆப் மூலம் தன்னை ஆணாக மாற்றி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

கமல் , சிவாஜி கணேசன் , எம் ஜி ஆர் க்கு ஜோடியாகவும் தமிழில் 50 க்கும் அதிகமான படங்களில் நடித்தவர் நடிகை உஷா ராணி. சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு மர(ண)ம்.

Today News Tamil – Tamil News Today 22-06-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 21.06.2020 Today Rasi Palan 21-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 22.06.2020 Today Rasi Palan 22-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!