21-06-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 21-06-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live

0

Tamil news today 21-06-2020, Tamil news today, Today news in tamil, Tamil News Live, Today popular news tamil 21.6.20, Today trending news tamil, Today news in tamil live, Today tamil news in sri lanka, Today tamil news in india, Indraya mukkiya seithigal, Indraya thalaippu seithigal, Tamil News Live 21/6/20, Today News in Tamil 21.06.2020, Today breaking news in tamil, today headlines tamil, இன்றைய தலைப்பு செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள்.

Tamil News Today Sri Lanka

கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள கடற்கரை அடுத்த ஆண்டு பொதுமக்களின் பாவனைக்காக திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, தனது 71 ஆவது பிறந்த தினத்தை சனிக்கிழமை கொண்டாடினார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 337 பேர் வீதி விபத்து, தீ விபத்து உட்பட பல்வேறு விபத்துக்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி.

உடுவில் பிரதேசத்தில் கணவனால் கைவிடப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு, இராணுவத்தினரால் புதிய வீடு அமைத்துக்கொடுப்பதற்கான, அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

யாழ், நாவாந்துறைப் பகுதியில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டிய 2 பேர் கைது.!

மன்னாரில் சில அரச திணைக்களங்கள் ஊழலின் உச்சத்தை அடைந்துள்ளதாக, தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம்.

ஆனையிறவில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை கொலை செய்தேன், விநாயகமூர்த்தி முரளீதரன் வெளியிட்ட‌ கருத்திற்கு முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன எதிர்ப்பு.!

Tamil News Today India

ஜம்மு – காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் உளவு பார்க்க வந்த பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த தமிழரை, அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குநராக இந்திய-அமெரிக்க விஞ்ஞானி டாக்டர் சேதுராமன் பஞ்சநாதன் அவர்களை அமெரிக்க செனட் தெரிவுசெய்துள்ளது.

6 முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு ஒரே கல்வித்திட்டத்தை நாடுமுழுவதும் கொண்டுவருமாறு வலியுறுத்தி அஸ்வினி குமார் உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 2 ஆயிரத்து 115 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

அமீரகத்தில் இந்திய தூதரகம் , துணைத்தூதரக பாஸ்போர்ட் சேவை மையங்களில் புதிய சேவை அறிமுகம், இந்திய பாஸ்போர்ட் சேவை மையங்களில் முன் பதிவு செய்ய https://blsindiavisa-uae.com/passport/bookapp.php என்ற இணையதள முகவரியை பயன்படுத்த வேண்டும்.

Tamil News Today World

சீனாவில் அனைத்து உணவு மற்றும் பொதிகள் சேவை (couriers) ஊழியர்களுக்கு நியூக்ளிக் அமில (Nucleic acid) சோதனைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்.

பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சுமார் 1 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 50 ஆயிரம் இறப்புகளும் பதிவாகியுள்ளது.

உலகின் மிக பிரபலமான ஜேர்மனியின் பி.எம்.டபிள்யூ கார் நிறுவனம், கொவிட்௧9 காரணமாக போதிய விற்பனை இல்லாததால் 6 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்யவுள்ளது.

சீனாவில் இரட்டை குழந்தைகளில் முதல் குழந்தை பிறந்து 10 ஆண்டுகள் கழித்து பிறந்த மற்றொரு குழந்தை!

மீன்கள் வெட்டும் பலகைகளில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து சால்மன் மீனா? வேண்டவே வேண்டாம், என கூறும் சீனமக்கள்

மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் மண்ணிற்குள் புதைந்தன , 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Tamil News Live

2020ம் ஆண்டின் சூரியக்கிரகணம் ஞாயிற்றுக்கிழமை காலை 9.15 தொடக்கம் பிற்பகல் 3.04 வரை சூரிய கிரகணம் நீடிக்கும். முழு கிரகணம் – 10:17:45, அதிகபட்ச கிரகணம் – 12:10:04, ப‌குதி கிரகணம் – 15:04:01

செந்தில் ராஜலெட்சுமி குடும்பத்தினர் பார்த்து பார்த்து கட்டிய வீட்டில் மிக எளிமையாக பால் காய்ச்சி புது வீட்டில் குடியேறியுள்ளன‌ராம்.

பாகுபலி நடிகர் ராணா – மிஹீகாவிற்கு வரும் ஆகஸ்ட் 8 ம் திக‌தி திருமணம் நடைபெறவுள்ளதாம்.

Today News Tamil – Tamil News Today 21-06-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article20-06-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 20-06-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live
Next articleஇன்றைய ராசி பலன் 21.06.2020 Today Rasi Palan 21-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!