20-06-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 20-06-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live

0

Tamil news today 20-06-2020, Tamil news today, Today news in tamil, Tamil News Live, Today popular news tamil 20.6.20, Today trending news tamil, Today news in tamil live, Today tamil news in sri lanka, Today tamil news in india, Indraya mukkiya seithigal, Indraya thalaippu seithigal, Tamil News Live 20/6/20, Today News in Tamil 20.06.2020, Today breaking news in tamil, today headlines tamil, இன்றைய தலைப்பு செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள்.

Tamil News Today Sri Lanka

மத்திய கிழக்கில் கொரோனா வைரஸினால் கடந்த மூன்று மாதங்களில் 23 இலங்கை தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிப்பு.

பலமான ஐக்கிய தேசியக்கட்சி பிளவு பட்டது கவலை அளிக்கிறது, அதற்கான பொறுப்பை சஜித் பிரேமதாச ஏற்கவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர கருத்து.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குண்டுதாரிகளுடன், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரனான மொஹமட் ரியாஜ் நேரடி தொடர்பு – பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜாலிய சேனாரத்ன கருத்து.

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்க, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில்..!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருந்து கொண்டு ஒரு சிலர் கூட்டமைப்பை பலவீனப்படுத்துகின்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றச்சாட்டு.

தொழிற்பயிற்சி நிலையங்கள் மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை, எதிர்வரும் ஜூலை மாதம் 06 ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது.

உலக சந்தையில் வீழ்ச்சியடைந்திருந்த எரிபொருள் விலை வழமைக்கு வருவதன் காரணத்தால் எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை‍ – அமைச்சர் மஹிந்த அமரவீர

யாழ்ப்பாணம், நெல்லியடியைச் சேர்ந்த தேசிய புலனாய்வுச் சேவையின் புலனாய்வு உத்தியோகத்தர் கமலராஜ் (வயது 27) கைத்துப்பாக்கியால் சுட்டுத் தற்(கொ)லை‍ – கல்முனையில் சம்பவம்!

எமது போராட்டங்களைச் சிதைத்து சின்னாபின்னமாக்கியவர்கள் தற்போது தமிழ் மக்கள் மத்தியில் வீரவசனம் பேசுகிறார்கள், என திகாமடுல்ல மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் தவராசா கலையரசன் கருத்து.

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் உயர்தர பரீட்சை நடைபெறும் திகதி தீர்மானிக்கப்படும் – கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும.

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்பாக ஈழத் தமிழர்களுக்காகவும் திபெத்தியர்கள் போராட்டமொன்றை வெள்ளிக்கிழமை முன்னெடுத்திருந்தனர்.

மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் கிரிக்கெட் வீரர்களை களங்கப்படுத்தி அரசியல் செய்வது மிகவும் வருந்தத்தக்க விடயமாக இருக்கிறது – ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் வி.ஜனகன் கருத்து.

ஊழல் அதிகாரிகளை இனங்காண்பது தற்போதைய சூழ்நிலையில் பெரிய சவாலாக இருக்கின்றது – சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா

Tamil News Today India

கொரோனா சிகிச்சைக்காக அண்ணா பல்கலைக்கழகத்தை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் ‍- சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக வெள்ளிக்கிழமை 40 பேர் வரை உயி(ரி)ழந்துள்ளதாக தகவல்.

கல்வான் பள்ளத்தாக்கில் சீன இராணுவம் நடத்திய தாக்குதலானது திட்டமிடப்பட்ட ஒன்று என்பது தற்போது தெளிவாகிறது‍ காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

லடாக் தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமர(ண)ம் அடைந்தமைக்கு அமெரிக்கா, ஜெர்மன் ஆகிய நாடுகள் இரங்கல்.!

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடுச் சம்பவத்தில் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொ(லை).

சீன பொருட்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்

Tamil News Today World

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் மிதிவண்டி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து 33 புதிய போர் விமானங்களை இந்தியா கொள்வனவு செய்ய திட்டம்.

8 மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 2 கனடியர்கள் உளவு பார்த்ததாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.

நியூஸிலாந்தின் ஒக்லாந்தில் வழக்கமான போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியொருவர் சுட்டுக்கொ(லை)

பிரித்தானியாவிற்கு வருகை தந்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை, பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உற்சாகமாக வரவேற்பு.

பிரித்தானியாவின் பிரபல வங்கியான எச்.எஸ்.பி.சி. கடுமையான சவால்களை எதிர்கொள்வதால் 35 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்கிறது!

டென்மார்க்கில் சமீபத்திய ஆண்டுகளில் வீடற்றவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாக தகவல்

குடியேற்றக் குற்றங்கள் என்ற சந்தேகத்தின் பேரில் எசெக்ஸில் (Essex) லொரியின் பின்புறத்தில் மறைந்திருந்த 14 பேர் கைது.

டென்மார்க்கில் சமீபத்திய ஆண்டுகளில் வீடற்றவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாக தகவல்

அமெரிக்காவில் இளம் குடியேறிகளை நாடு கடத்துவதில் இருந்து பாதுகாக்கும் குடியேற்ற கொள்கை திட்டத்திற்கு தடை விதிப்பது என்பது சட்டவிரோதமானது – அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

Tamil News Live

பழம்பெரும் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் உடல் நலக்குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை காலமானார்.

பிக்பொஸ் நடிகை வனிதா விஜயகுமார் எதிர்வரும் 27 ஆம் திகதி பீட்டர் போல் என்பவரை திருமணம் செய்யவுள்ளார்.

Today News Tamil – Tamil News Today 20-06-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 20.06.2020 Today Rasi Palan 20-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next article21-06-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 21-06-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live