16-06-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 16-06-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live

0

Tamil news today 16-06-2020, Tamil news today, Today news in tamil, Tamil News Live, Today popular news tamil 16.6.20, Today trending news tamil, Today news in tamil live, Today tamil news in sri lanka, Today tamil news in india, Indraya mukkiya seithigal, Indraya thalaippu seithigal, Tamil News Live 16/6/20, Today News in Tamil 16.06.2020, Today breaking news in tamil, today headlines tamil, இன்றைய தலைப்பு செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள்.

Tamil News Today Sri Lanka

“தற்போதைய ஆட்சியின் கீழ் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்குமென தான் நம்பவில்லை” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும் மாமனிதர் ரவிராஜின் மனைவி கருத்து.

வவுனியா ரயில் நிலையத்தில் குழப்பம் விளைவித்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுமதியின்றி மருந்துகளின் விலைகளை அதிகரிக்கும் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட பொது இடங்களில் இன்று முதல் மரக்கறிகள் மற்றும் மீன் வியாபாரத்திற்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் பிறந்து வளர்ந்த சுமந்திரனுக்கு வடக்கு கிழக்கு பற்றி எதுவும் தெரியாது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் கருத்து.

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களிடம் பணம் கேட்டு கையேந்தி நிற்ப‌தை விடுத்து தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அக்கட்சியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி அழைப்பு.

யாழில் பெண்களுடன் தவறாக நடக்க முற்பட்டு சேட்டை செய்தார்கள் என நான்கு இளைஞர்கள் மீது அப்பகுதி மக்கள் தாக்குதல்.

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் வாள் வெட்டு 5 பேர் காயம்..!

நேற்று கொழும்பு பாமன் கடையில் விபத்து..!

Tamil News Today India

குஜராத்தின் ராஜ்கோட் நகரின் அருகே திங்கட்கிழமை மதியம் 4.4 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

கொரொனா தாக்கத்தால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஜூன் 19ஆம் திகதி முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

மளிகைபொருட்கள் கடை, காய்கறி கடைகள், பெட்ரோல் பங்க்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரிசி, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் தமிழக அரசு அறிவிப்பு.

ஒடிஸாவில் மகாநதி ஆற்றில் மூழ்கியிருந்த சுமாா் 500 ஆண்டுகள் பழைமையான கோயிலை வரலாற்று ஆய்வாளா்கள் கண்டுபிடித்துள்ளனா்.

ஒடிசா நவுபாடாவில், வங்கியில் பணம் எடுக்க நேரில் வரவேண்டும் என கூறியதால் 120 வயது மூதாட்டியை கட்டிலுடன் இழுத்து சென்ற கொடுமை.

தனியார் மருத்துவமனைகளில் 60 சதவீதம் குறைந்த பணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சை அளிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவிப்பு.

Tamil News Today World

மாலியில் வடபகுதியில் ஐ.நா. அமைதிப்படையினர் பயணித்த வாகனத் தொடரணி மீது ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் இரு துருப்பினர் உயிரிழப்பு.

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை நெருங்கி வருகின்றது.

விமானப் பயணிகளுக்கான வெப்பநிலை பரிசோதனைகளை கட்டாயமாக்கப் போவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

கனடாவின் தேசிய பொலிஸ் படை உட்பட, நாட்டை நிர்வகிக்கும் அனைத்து தரப்புகளிலும் அமைப்புவடிவ இனவெறி உள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

Tamil News Live

இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் திரைப்படத்திற்காக நடிகை அதிதிராவ் பாடியுள்ள பாடல் திங்கட்கிழமை வெளியாகிறது.

சுஷாந்த் சிங்கின் மறைவுக்கு மோடி ருவிட்டரில் இரங்கல்!

நடிகர் சுசாந்த் சிங் தற்கொலை செய்வதற்கு முன்பாக அவரது தந்தைக்கு தொலைப்பேசி அழைப்பினை ஏற்படுத்தி சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் ஜூன் 21ம் தேதி நிகழும் சூரிய கிரகணத்தின்போது செயலிழக்கும் என்று சென்னையைச் சேர்ந்த விஞ்ஞானி கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

Today News Tamil – Tamil News Today 16-06-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 15.06.2020 Today Rasi Palan 15-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 16.06.2020 Today Rasi Palan 16-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!